அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் புதிய படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் கமிட்டானதைத் தொடர்ந்து, மற்றொரு ஹீரோயினாக கேத்ரின் தெரஸா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• ‘ஒரு கிடாரியின் கருணைமனு’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ரவீனா ரவி, அடுத்து ‘ராக்கி’ எனும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

• கணவர் நாக சைதன்யாவுடன் வெளிநாடுகளுக்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ள சமந்தா, கவர்ச்சியான உடையில் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவுக்கு கலவையான விமர்சனங்கள் வர, ‘இது என் வாழ்க்கை. திருமணம் நடந்திருந்தாலும் என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று நான்தான் முடிவெடுப்பேன். நீங்கள் யாரும் எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம்’ என்று காட்டமாகக் கூறியுள்ளார் சமந்தா.

• ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியை வைத்து வடசென்னையில் நடக்கும் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய கதையை இயக்கிவருகிறார் கோபி நயினார். இதன் படப்பிடிப்பு, வடசென்னை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   

• ‘சண்டக்கோழி 2’ இசை வெளியீட்டு விழாவில் ஸ்ரீரெட்டி பற்றி விஷால் பேசியபோது, கீர்த்தி சுரேஷ் சிரித்தார். இதில் கடுப்பான ஸ்ரீரெட்டி, ‘விஷால் என்னைப்பற்றி பேசும்போது கீர்த்தி விகாரமாக சிரித்தார். எப்போதும் எல்லோரும் நல்ல இடத்திலேயே இருக்க முடியாது. பாதிக்கப்பட்டவரின் நிலை ஒரு நாள் உங்களுக்குத் தெரியும். இந்தச் சிரிப்பை நான் மறக்கமாட்டேன்’ என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

• ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான அஷிமா நார்வால், விஜய் ஆண்டனியுடன் ‘கொலைகாரன்’ படத்தில் நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து, ஆரவ் நடிக்கும் ‘ராஜபீமா’ படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அதில் அவருக்கு வன விலங்கு ஆர்வலர் கேரக்டராம்.

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

‘செக்கச் சிவந்த வானம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் ஆக்டிவா இருந்தீங்களாமே?

டயானா எரப்பா:
ஆமா. எனக்கு ஷாட் இல்லாத சமயத்தில மணி சார், சந்தோஷ் சிவன் சார்னு யார்கிட்டேயாவது போய் பேசிக்கிட்டே அவங்க ஷோல்டர்ல மஸாஜ் பண்ணிட்டு இருப்பேன். முதல் படத்திலேயே மணி சார், ரஹ்மான் சார், சந்தோஷ் சிவன் சார்னு காம்பினேஷன். சிம்புவுக்கு ஜோடி. இப்படி நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் நடந்துச்சு. ‘செக்கச் சிவந்த வானம்’ ஷூட்டிங் நிமிடங்கள்தான், என் வாழ்க்கையின் பெஸ்ட் மொமன்ட்ஸ்!

மிஸ்டர் மியாவ்

இவானா: இந்த போட்டோவுல இருக்கற என் ஃபேமிலிதான் எனக்கு உலகம். ப்ளஸ் டூ படிக்கும்போது சினிமாவில் நடிக்க யார் வீட்லயும் ஒத்துக்கமாட்டாங்க. ஆனா, எங்க வீட்ல ஓகே சொன்னாங்க. ஒரு புது படத்துல கமிட்டானா, என்னைவிட அவங்கதான் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அந்த விதத்தில நான் ரொம்பவே லக்கி!

சைலன்ஸ்

முன்னாள் பெண் பிரதமரின் பெயரில் பாதிகொண்ட டைரக்டர், முதலில் இயக்கிய ‘பவர்’ படமே இன்னும் திரைக்கு வரவில்லை. அதற்குள் ‘‘அம்மா படத்தை இயக்கப் போகிறேன்’’ என்று அலப்பறை கொடுத்துவருகிறார். இதே அறிவிப்பை ஏற்கெனவே இரண்டு ஜாம்பவான்கள் செய்துள்ளனர். படத்துக்கு எதையும் ரெடி செய்யவில்லை என்றாலும், அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகையின் பெயரை அறிவித்து இலவச விளம்பரம் தேடிப் பரவசம் அடைகிறாராம், பெண் இயக்குநர்.

ச்ச நட்சத்திரத்தின் மெகா திரைப்படம் தீபாவளி பண்டிகை மாதத்தில் வெளியாவதாக அறிவித்துள்ளனர். இந்தப் பட ரிலீஸுக்கு முன்பே அடுத்த படத்தின் படப்பிடிப்புக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தாராம், பிரமாண்ட டைரக்டர். அவரை அன்பாக அழைத்த தயாரிப்பு, ‘‘முதலில் உச்ச நடிகர் படம் ரிலீஸாகட்டும். அதன்பிறகு ‘பாரத மைந்தன்’ படப்பிடிப்பை பார்த்துக்கொள்ளலாம்’’ என்று கறாராகச் சொல்ல, கன்ஃப்யூஸ் ஆகிவிட்டாராம் டைரக்டர்.