Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

விஜய் -அட்லீ கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்துக்கு கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ‘தோனி’ படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்ததிலிருந்து இவருக்கான டிமாண்ட் பாலிவுட்டில் அதிகமானது. தற்போது கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களோடு நடிப்பதற்காக இவர் பேசப்பட்டு வருகிறார். வெல்கம் டு கோலிவுட்!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘வர்மா’ டிசம்பர் ரிலீஸுக்கு ரெடி. ஷூட்டிங் முடிந்த கையோடு, தன் அம்மா சொல்படி நியூயார்க் ‘தி லீ ஸ்டாஸ்பெர்க்’ நடிப்புப் பயிற்சிப் பள்ளியின் ‘மெத்தட் ஆக்டிங்’ டிப்ளமோவை முடிக்கக் கிளம்பிவிட்டார் துருவ். திரும்பி வந்து தமிழ்சினிமாவை ஒரு கை பார்க்கப்போகிறாராம்!   தாய் சொல்லைத் தட்டாதே!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

‘லவ் சோனியா’ என்ற பாலிவுட் படம் சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. டாப்ரெஜ் நுரானி என்ற ‘ஸ்லம் டாக் மில்லினியர்’, ‘லைஃப் ஆஃப் பை’ படங்களின் தயாரிப்பாளர் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இசை நம் ஊர் ஏ.ஆர்.ரஹ்மான். அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய், ராஜ்குமார்  ராவ், ரிச்சா சத்தா என பாலிவுட்டின் நடிகர்களும் ஹாலிவுட்டின் முன்னாள் கனவுக்கன்னி டெமிமூரும் நடித்திருக்கிறார்கள். இந்தியாவின் மிகவும் பின்தங்கிய ஒரு வட மாநில கிராமத்திலிருந்து வீட்டு வேலைக்காக மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும் ஒரு பெண்ணும் அவளைத் தேடிப் போகும் அவள் சகோதரியும் எப்படி பாலியல் தொழிலின் நிழலுகத்துக்குள் சிக்கி மீள்கிறார்கள் என்று பேசுகிறது இப்படம்.    லவ் சினிமா!

இன்பாக்ஸ்

2018 ஏசியன் கேம்ஸில் 19 வயது இளைஞன் ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதலில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என நாடே எதிர்பார்த்தது. ஆனால், அவரால் ஆறாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடைசி முயற்சி `Foul’ என அறிவிக்கப்பட்டதும் கேமராவை நோக்கி, `நான் மீண்டு வருவேன்’ என்றார். சொன்னதுபோலவே புவனேஷ்வரில் சமீபத்தில் நடந்த, நேஷனல் ஓப்பன் தடகள சாம்பியன்ஷிப்பில் 8.2 மீட்டர் தூரம் தாண்டிப் புதிய சாதனை படைத்துள்ளார்.  இதற்குமுன் அங்கித் சர்மா 8.19 மீட்டர் தாண்டியதே நேஷனல் ரெக்கார்டாக இருந்தது. 19 வயதில் 8.2 மீட்டர் என்பது அசாதாரணம். விரைவில் சர்வதேசப் போட்டிகளில் ஸ்ரீசங்கர்  சாதிப்பார் என்கிறது தடகள வட்டாரம். அட்டகாசம் ஸ்ரீ!

இன்பாக்ஸ்

பிரவுன் டஸ்ஸர் ஜார்ஜெட் புடவையில் அனுஷ்கா ஷர்மா புரொமோஷன்களுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். காரணம், விராட்டிற்குப் புடவைதான் ரொம்பப் பிடிக்குமாம். ஆடை வடிவமைப்பாளர் சபியாசச்சி முகர்ஜிதான் இந்த ‘பழைய டில்லா பார்டர்’ புடவையையும் வடிவமைத்துள்ளார். புடவைக்கு மேட்சான ஹசர்-புட்டி பிளவுஸ், கனமான பொல்கி காதணிகள், பண் ஹேர்ஸ்டைல், ஸ்மோக்கி கண்கள் என அனைத்தையும் பெர்ஃபெக்கட்டாக மேட்ச் செய்து அனைவரையும் ஈர்த்து வருகிறார் அனுஷ்கா. வாவ் அனுஷ்கா!

ழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் ‘யானை டாக்டர்’ கதை படமாகப்போகிறது. ராஜுமுருகனும் ஜெயமோகனும் இணைந்து திரைக்கதை எழுதுகிறார்கள். மோகன்லாலும் மற்றொரு இளம் நடிகரும் நடிக்கும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தமிழிலும் மலையாளத்திலும் எடுக்கப்போகிறார்கள். ‘ஜிப்ஸி’ முடித்த கையோடு இலங்கையின் வனப்பகுதியில் ஷூட்டிங் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தயாராக இருக்கிறார் ராஜுமுருகன். புலிமுருகனும் ராஜூ முருகனும்!