Published:Updated:

பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்

பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்

பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்

பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்

பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்

Published:Updated:
பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்

டுக்கப்பட்ட ஒருவனின் வெடித்தெழும் ‘நான் யார்?’ என்ற எதிர்க்குரலே பரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல், மேல ஒரு கோடு!   

பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்

சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உண்மைக்கு நெருக்கமான திரைமொழியில் பேசி, ஓர் உரையாடலுக்கு அழைத்திருக்கும் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு அழுத்தமான கைகுலுக்கல்கள்! அசல் அரசியல் சினிமாவை வெளிக்கொண்டுவந்த தயாரிப்பாளர் பா.இரஞ்சித்துக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!

 புளியங்குளத்து இளைஞன் பரியேறும் பெருமாள் சட்டக் கல்லூரி செல்கிறான். ஆங்கிலம் சரிவர வராத அவனுக்கு உதவுகிறாள் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஜோ என்னும் தோழி. ‘இது காதலாக மாறி, தங்கள் சாதிப் புனிதத்தைக் குலைத்துவிடுமோ?’ என்று அவன்மீது அவமானங்களும் அடக்குமுறைகளும் ஏவிவிடப்படுகின்றன. எல்லாவற்றையும் எதிர்கொண்டு, ‘கல்வியே விடுதலை தரும்’ என்று உறுதியாய் நிற்கும் இளைஞனின் கதை, ‘பரியேறும் பெருமாள்’ சொல்லும் சமூகத்தின் முகம்.

கதை நாயகன் பரியனாக, கதிர். கருப்பி என்னும் நாயின் மீதான பாசம், ஒவ்வொருமுறை ஒடுக்குமுறையைச் சந்திக்கும்போதும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் உணர்வுகள், தன் அப்பா தான் படிக்கும் கல்லூரி வளாகத்திலேயே ‘சொல்ல முடியாத’ அவமானத்துக்குள்ளாகும்போது நிலைகுலையும் துயரம் என... பரியனின் பாத்திரத்துக்கு உயிரும் உருவமும் தந்திருக்கிறார் கதிர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி என்ற ஜோவாக ஆனந்தி. பரியனின் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கைப் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். கண்கள் மூடித் திறந்து `ஆனந்திக் கண்ணீர்’ வடிக்கும் அந்த மருத்துவமனை வளாகக் காட்சி மனதில் நிற்கிறது. எங்கே சாதிவெறி பிடித்த சமூகத்துக்குத் தன் மகளின் உயிரும் பலியாகிவிடுமோ என்று வேறு வழியில்லாமல் சாதியைச் சுமந்து திரியும் மாரிமுத்து, சாதிமீறிக் காதலிக்கும் இளைஞர்களைக் கொலை என்றே தெரியாமல் நுட்பமாகக் கொல்லும் ‘மேஸ்திரி தாத்தா’ கராத்தே வெங்கடேசன், ‘எப்படியாச்சும் வக்கீலுக்குப் படிச்சிருடே!’ எனச் சொல்லும்   `ஊத்துத்தண்ணி’ தாத்தா ஆர்.கே.ராஜா, பரியனின் தந்தை தங்கராஜ், ‘நான் என்னைக்குடா சாதி பார்த்துப் பழகினேன்?’ என உரிமையாகக் கோபித்துக்கொள்ளும் வகுப்பறைத் தோழன் யோகிபாபு,  ‘என்னோட அப்பா யார் தெரியுமா? ரோட்டுல செருப்பு தைக்கிறவர்’ என்று கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கல்லூரி முதல்வர் ராமு,  வகுப்பறை  டெஸ்க்கில் தன் பெயரோடு அரிவாளையும் சேர்த்து வரைந்து சமகால அவலத்தை நினைவூட்டும் கல்லூரி மாணவனாக லிஜீஷ் என்று தமிழகத்தின் தெற்கு மனிதர்களை நேர்த்தியாய்த் திரையில் கொண்டு வந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்தேசத்தின் அவமானமாய்த் திகழும் ஆணவக்கொலைகளின் அடிப்படைகளை, அழகியலோடும் அரசியலோடும் விளக்கிய விதத்தில் இது தமிழின் முக்கியமான சினிமா.  “நீயும் அவளைக் காதலிக்கிறாயா?” என்ற மாரிமுத்துவின் கேள்விக்கு, “அது எனக்கே தெரியறதுக்கு முன்னாலதானே எங்களை அடிச்சு சிதைச்சுடறீங்க” என்று பரியன் கேட்கும் ஓர் இடம் போதும், நம் சமநிலை குலைக்க.

எப்போது வேண்டுமானாலும், சாதியால் குலைக்கப்படும் காதல் குறித்துப் பேசும் சராசரி சினிமாவாக  இது மாறியிருக்கும். ஆனால் காதலைத் தாண்டி, கல்வியின் முக்கியத்துவத்தையும் சுயமரியாதை வேட்கையையும் முன்வைக்கும் சினிமாவாக மலர்ந்திருப்பதுதான் கலையின் வெற்றி. மேலும், ஒடுக்கும் சாதியிடமும் ‘உரையாடலாம்’ என்ற நம்பிக்கையை விதைப்பது, வன்முறையைத் தவிர்த்து இணக்கத்தை முன்வைப்பது என்று நிகழ்காலத் தேவைகளை முன்னிறுத்துகிறது இந்தப் படம். 

பரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையிலும் ‘நான் யார்’, ‘எங்கும் புகழ் துலங்க’ பாடல்களிலும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் செல்வாவின் படத்தொகுப்பும் கூடுதல் பலங்கள்.

ஆங்கிலம் தெரியாமை என்பதை மிகைப் படுத்தும் நகைச்சுவைக் காட்சிகளும் நாயகன் பள்ளிக்காலத்தில் பிட் அடித்துத் தேர்ச்சி பெறுவதாகச் சித்திரிக்கப்படும் காட்சிகளும் படத்தின் உயரத்தைக் கீழிறக்குகின்றன.

ஆனால் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளை விவரிக்கும் சுவரொட்டி தொடங்கி, பரியனின் அப்பா ‘அவமானப்படுத்தப் படும்போது’  டாப் ஆங்கிளில் அனைத்துக் கட்சிக்கொடிகளும் காட்டப்படுவது வரை அத்தனை நுட்பம் இழையோடியிருக்கிறது.

சாதிய எதார்த்தத்தைக் கதைக்கும்; கல்வியின் மூலம் முன்னேறத் துடிக்கும், இணக்கத்துடன் உரையாட அழைக்கும் இந்தப் பரியேறும் பெருமாளும் அவனது ‘கருப்பி’ நாயும் நம் மனசாட்சியின்முன் வீசப்பட்ட உண்மையின் கேள்விகள். அவை எப்போதும் தண்டவாள ரயில்போல் நமக்குள் தடதடத்துக் கொண்டுதானிருக்கும்.

- விகடன் விமர்சனக் குழு