Published:Updated:

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்
பிரீமியம் ஸ்டோரி
“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

Published:Updated:
“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்
பிரீமியம் ஸ்டோரி
“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

``இதெல்லாம் இவ்வளவு வேகமா நடக்குமாங்கிறதே எனக்கு ஒரு கனவு போலத்தான் இன்னும் இருக்கு. ‘சேது’ படத்துக்கு முன்பான பத்து வருஷங்களும் என் அப்பாவுக்கு அவ்வளவு கஷ்டமான காலம். அப்போதான் நான் பிறந்தேன். பாலா மாமாதான் என் அப்பாவோட எல்லாக் கனவுகளுக்கும் ஒரே படத்தின் மூலம் உயிர் கொடுத்தவர். திடீர்னு கட் பண்ணினா, அதே பாலா மாமா இப்போ என்னையும் ஹீரோவாக்கி, ‘வர்மா’ படம் டைரக்ட் பண்ணிட்டிருக்கார். இது ரெண்டுக்கும் பின்னால கடவுள்னு ஒருத்தர் இருக்கார்... காரணம்னு ஏதோ இருக்கு... அதை எனக்கு சிம்பிளா சொல்லத் தெரியலையே!” பாலாவின் ‘வர்மா’ படத்தின் மூலமாகத் தமிழுக்கு அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் துருவ். 

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

“விக்ரமின் மகனாகத்தான் துருவ்வை இதுவரை தெரியும். அதுவும் இன்ஸ்டாகிராம் படங்கள் மூலமாக. அதைத் தவிர்த்து, துருவ் யார்?”

“என் நண்பர்கள் தவிர எல்லோருக்கும் என்னை ‘விக்ரம் மகன்’னு மட்டும்தான் தெரியும். திடீர்னு எங்கேயாவது யாராவது ‘நீங்க விக்ரம் பையன்தானே’னு என் முகச்சாயல் பார்த்ததும் கேட்பாங்க. சமயங்களில் அதுவே உற்சாகமா இருக்கும். சில சமயங்களில் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கும். ஏன்னா, எனக்கான ஒரு தனி அடையாளத்தை நான் தேடணும்தானே? ‘நிச்சயம் ஒருநாள் ‘நீங்க துருவ்வோட அப்பாதானே?’னு எங்க அப்பாவைப் பார்த்துக் கேட்க வைக்கணும்’னு அப்பப்போ நினைப்பேன். பாலா மாமாவோட டைரக்ஷன்ல நான் ஒரு நடிகனா நின்னப்போ, அது ‘வர்மா’வால் நடந்துடும்கிற நம்பிக்கை வந்திருச்சு.”

“பாலா ரீமேக் படம் இயக்குகிறார் என்பதே ஆச்சர்யமா இருக்கு. அவர் எப்படி இதுக்குச் சம்மதிச்சார்?”

“அப்பாவும் பாலா மாமாவும் நெருக்கமான நண்பர்கள். அப்போ நான் சின்னப் பையன், பாலா மாமா எப்போ எங்க வீட்டுக்கு வந்தாலும், ‘டேய் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ, ஒரு நாள் நான் உன்னை தமிழ் சினிமாவுல ஹீரோ ஆக்குவேன் பாரு’னு செல்லமா சொல்லுவார். ‘எதுவும் புரியாத வயசுலேயே அவர் ஏதோ ஒண்ணை எனக்குள்ள விதைச்சுட்டே இருந்திருக்கார்னு இப்போ தோணுது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

அப்புறம் கொஞ்சம் வளர்ந்ததுக்கப்புறம், பாலா மாமா படங்கள்னா, அதுல நடிக்கிறது எவ்ளோ கஷ்டம்னு கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது. என் அப்பாவுக்கு ‘பிதாமகன்’ல தேசிய விருது  வாங்கிக் கொடுத்திருக்கார். அதோட மதிப்பு என்னன்னு இப்போ புரியுது.

நடிகனாகலாம்னு முடிவு பண்ணியாச்சு. எங்கே எப்படி ஆரம்பிக்கலாம்னு யோசிச்சப்போ, ‘இ4 என்டர்டெயின்மென்ட்’னு ஒரு கம்பெனி. முகேஷ் ஆர் மேத்தா புரொடியூசர். ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்ல நடிக்க உன்னைக் கேட்கிறார்’னு அப்பா சொன்னார். அந்த ஸ்கிரிப்டைப் படிச்சிட்டு அப்பா என்கிட்ட சொன்னது இன்னும் நல்லா நினைவிருக்கு... ‘ஒரிஜனல்ல நடிச்சவரோட நடிப்பையும் உன் நடிப்பையும் நிச்சயமா ஒப்பிடுவாங்க. அப்புறம் இதுவரை நான் நடிச்சதையெல்லாம் உன்னோட முதல் படத்திலேயே எதிர்பார்ப்பாங்க. அதனால நீ ஏதாச்சும் வித்தியாசமா பண்ணணும்னா, அதுக்கு ஒரே வழி, பாலா இந்தப் படத்தை டைரக்ட் பண்றதுதான். பேசிப் பார்க்கிறேன்’னு சொன்னார். தயாரிப்பாளரிடம் இதை ஒரு கண்டிஷனாகவே வெச்சார் அப்பா. 

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

ஹையோ... ஒரு ரீமேக் படத்தை டைரக்ட் பண்ண வைக்க பாலா மாமாவை சம்மதிக்கவெச்சது ரொம்பப் பெரிய கதை. அவர் என்மேல வெச்சிருக்கிற பாசத்துக்குப் பெரிய நன்றி!”

“விக்ரமுக்கு இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் தந்த இயக்குநர், இப்போ விக்ரம் மகனை ஹீரோவாக்குகிறார். எப்படி இருக்கு இந்த உணர்வு?”

“முதல்ல என்மீது எனக்கு மறுபடியும் நம்பிக்கை வந்துச்சு. ‘பாலா மாதிரி இன்னொரு டைரக்டரை நான் என் லைஃப்ல பார்த்ததே இல்லைடா’னு ஒருநாள் அப்பா சொன்னார். எனக்கு அவர் அதுவரை மாமா. ஆனா அவர் ஒரு டைரக்டரா எப்படி இருப்பார்னு தெரியாது. ‘பரதேசி’ பட மேக்கிங் வீடியோ பார்த்துட்டு, கொஞ்சம் பயத்தோடதான் இருந்தேன். ஆனா, ஸ்பாட்ல அவர் ரொம்ப அன்பா இருக்கார். நிறைய சிரிப்பார். நிறைய கிண்டல் பண்ணுவார். டேக்ல யாராச்சும் சொதப்பினா, முதல்ல சிரிச்சிடுவார். அப்புறம்தான் கூப்பிட்டுத் திட்டுவார். செம சாஃப்ட் கேரக்டர்.

எனக்கு என்ன ஆச்சர்யம்னா, என் பாடிலாங்குவேஜ்ல தினம் தினம் சீனுக்கு சீன் கரெக்ஷன்ஸ் சொல்லிட்டே இருப்பார். என்னாலயும் இப்படி எல்லாம் பண்ண முடியுமாங்கிற விஷயங்களை, எப்படியாச்சும் பண்ணவெச்சிடுவார். அது ஒரு புதுப் பையனுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை தரும்கிறதை இப்போ நான் உணர்கிறேன். அது ஒரு ஸ்பெஷல் ஃபீல்!”

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

“உங்களை மாதிரியே ஹீரோயின் மேகாவும் தமிழுக்கு அறிமுகம். அவங்க எப்படி நடிச்சிருக்காங்க?”

“மேகா ஆர்வமுள்ள பொண்ணு. அவங்களுக்குத் தமிழ் இன்னும் சரியா பேச வரலை. ஆனா பெர்ஃபெக்டா ரிகர்சல் பண்ணி இயல்பா நடிக்கிறாங்க. ஈஸ்வரி ராவ் மேடத்துக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர். எனக்கு அவங்க மிகப்பெரிய உதவியா இருக்காங்க. எங்க காம்பினேஷன்ல எனக்கு க்ளோசப், அவங்களுக்கு சஜஷன் இருக்கும். அதாவது அவங்க முதுகுக்குப் பின்னாடிதான் கேமரா இருக்கும். நான் அந்த எமோஷனோட எக்ஸ்பிரஸிவா நடிக்கணும்ங்கி றதுக்காக அவங்க ஃபுல் எமோஷன்ஸோட நடிச்சு டயலாக் சொல்லிட்டிருப்பாங்க. இப்படி ஒவ்வொரு கேரக்டரும் பெர்ஃபெக்டா இருக்கிறதுதான் பாலா மாமா படத்தின் ஸ்பெஷல். ‘மைனா’, ‘கும்கி’ படங்கள் பண்ணின சுகுமார் சார்தான் கேமரா. ‘அர்ஜுன் ரெட்டி’க்கு மியூசிக் பண்ணின ரதன் இசை.”

“அப்பா நடிச்ச படங்கள்ல உங்களுக்குப் பிடிச்ச படம் எது?”

“எந்தப் படம் பார்க்கும்போதும், அவர் என் அப்பாவாதான் தெரிவார். ஆனா, ‘தெய்வத் திருமகள்’ படம் பார்த்துட்டிருக்கிறப்பவே, ‘இது எங்க அப்பா இல்லை, கிருஷ்ணா’னு என் ஆழ்மனது நம்பிடுச்சு. அவர் தலைமுடியை ஒருமாதிரி பிடிச்சு இழுத்து பண்ணும்போது, அவருக்குள்ளயும் ஒரு குழந்தை இருக்குனு நினைச்சேன். எனக்கு அந்தப்படம் ரொம்பவே ஸ்பெஷல். பாலா மாமா பண்ணினதுல ‘சேது’ என் மனசுக்கு நெருக்கமான படம். ஆனால், என் இரண்டு, மூணு வயசுல அந்தப் படத்தை முழுசா நான் பார்க்கவே மாட்டேனாம். டிவியில போட்டாலும் அப்பா அடிவாங்குற அந்த ஒரு காட்சியை மட்டும் பார்க்காம வெளியில ஓடிடுவேன்னு சொல்வாங்க.”

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” - வர்றார் ஜூனியர் விக்ரம்

“அப்பா ‘வர்மா’ ஷூட்டிங் ஸ்பாட் வந்தாரா, நீங்க நடிக்கிறதைப் பார்த்துட்டு என்ன சொன்னார்?”

“அவர் ‘வர்மா’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவேயில்லை. ஆனா, நான் தினமும் வீட்டுக்குப் போன பிறகு அன்னைக்கு நடிச்சதை அப்படியே டயலாக்கோட பேசி நடிச்சுக்காட்டுவேன். நான் என்ன சொன்னாலும் கேட்டுட்டு சிரிச்சிட்டே இருப்பார். அவர் வெளியூரில் இருந்தாலும் வீடியோ காலிங் பண்ணி அன்னைக்கு நடந்த விஷயங்களைச் சொன்னாதான் எனக்கு நிம்மதி. ‘நல்லா பண்ணியிருக்க; நல்லாயில்லை, வேறமாதிரி பண்ணியிருக்கலாம்’னு சொல்லுவார். ‘வர்மா’வுக்காக டயட் இருந்தேன். ‘நல்லா சாப்பிட்டு நிம்மதியா இருக்கக்கூட முடியலையே’னு அப்பப்ப நினைப்பேன். ‘இதோட ரிசல்ட் உனக்கு இப்ப தெரியாது. ஆறு மாசம் கழிச்சு, பார். இதெல்லாம் பண்ணினாதான் வெற்றி பெருசா இருக்கும். ஆனாலும் அப்படி ஒரு வெற்றி வந்தா தலைக்கனமா ஆகிடாத. தோல்வினாலும் துவண்டுபோயிடாத.’ இது அவர் சொல்லும் எப்போதைக்குமான அட்வைஸ்.”

“ஒரு நடிகரின் மகனா சினிமாவை அணுகியதற்கும்... ஒரு நடிகரா சினிமாவில் நிற்கிற அனுபவத்துக்குமான வித்தியாசம் என்ன?”


“நேபாளத்தில் முதல்நாள் ஷூட்டிங். எனக்குத் தூக்கமே இல்லை. எப்படி கேமரா முன்னால நிக்கப்போறோம்னு ஒரு தயக்கம்... ஒரு உதறல்... கொஞ்சம் பயம் இருந்தது. ‘விக்ரம் பையன் தேறுவானா’னு எல்லோரும் என்னைப் பார்ப்பாங்களேனு மனசுக்குள்ள ஓடிட்டே இருந்தது.

ஆனா ஷூட்டிங் ஸ்பாட்ல போய் நின்னதும், பாலா மாமா என் கைகுலுக்கிச் சிரிச்சதும் என் அவ்வளவு பயமும் போயிடுச்சு. நான் எப்படி இருக்கணும், என் லுக் எப்படி இருக்கணும்னு, அவர் சொல்லச் சொல்ல... எல்லாம் மறந்து நான் வர்மா ஆகிட்டேன்.

ஒரு டைரக்டரா பாலா மாமா  எனக்குக் குடுத்த நம்பிக்கைல மறுபடியும் சொல்றேன்... வர்மா ரிலீசாகட்டும், ‘நீங்க துருவ்வோட அப்பாதானே?’னு எங்க அப்பாவைப் பார்த்துக் கேட்பாங்க!”

ம.கா.செந்தில்குமார் - படங்கள்: கே.ராஜசேகரன்