Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ‘தேவி 2’, ‘சைரா நரசிம்மா ரெட்டி’, வெங்கடேஷுக்கு ஜோடியாக ஒரு படம் என பிஸியாக இருப்பதால், இப்படத்தில் நடிப்பது குறித்து தமன்னா யோசித்து வருகிறாராம்.

மிஸ்டர் மியாவ்

• விஜய்சேதுபதி - த்ரிஷா நடித்திருக்கும் ‘96’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் நானி - சமந்தா ஜோடியை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ‘ரெட்ரம்’ படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார், கன்னட நடிகை சம்யுக்தா ஹார்னாட். இது ரொமான்டிக் ஹாரர் படமாம்.

மிஸ்டர் மியாவ்

• ‘பேட்ட’ ஷூட்டிங்கில் இருந்த விஜய்சேதுபதி, இடையில் ‘96’ படத்துக்கான புரொமோஷனில் கலந்துகொள்ள வந்திருந்தார். அதை முடித்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தற்போது அவருடன் த்ரிஷாவும் இணைந்திருக்கிறார். இவர்களின் காம்போ காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்படுகின்றன.

• ‘ஒருநாள் கூத்து’ பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ‘மான்ஸ்டர்’ எனப் பெயரி்டப்பட்டுள்ள இப்படத்தில் கிராஃபிக்ஸ் எலி முக்கியமான கேரக்டரில் நடிக்கிறது.

மிஸ்டர் மியாவ்

• பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் ஜோடியின் திருமணத்தை ஜோத்பூரில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்தியா, அமெரிக்கா என இரு நாடுகளின் ஸ்டைலிலும் இருக்க வேண்டும் என்ற இவர்களது ஆசைப்படிக் கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.

மிஸ்டர் மியாவ்

• தீபா மேத்தா இயக்கும் நெட் ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார், சித்தார்த். இதில் ‘காலா’ நடிகை ஹூமா குரேஷி முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளார். இதற்குமுன், தீபா மேத்தாவின் ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படத்தில் சித்தார்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி கார்னர்

உங்க ‘தி அயர்ன் லேடி’ படத்தில சசிகலாவா வரலட்சுமி நடிக்கிறாராமே?

யக்குநர் பிரியதர்ஷினி: சசிகலா ரோல்ல வரலட்சுமியை நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனா, அவங்க இன்னும்  சம்மதம் தெரிவிக்கலை. அவங்க இல்லைன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த ரோலுக்கு சரியா இருப்பாங்கனு தோணுது. இன்னும் இந்தக் கதாபாத்திரத்துக்கு யாருங்கிறது முடிவாகலை.

சைலன்ஸ்

ழம்பெரும் நடிகையின் பயாக்ரபி படத்தில் திறமையாக நடித்துப் பெயர் பெற்றார், ‘புகழ்’ நடிகை. இவர் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ரொம்பவே பவ்யம் காட்டினார். உச்ச நடிகர்களுடன் ஜோடி போடும் லெவலை நெருங்கியதும், இப்போது தன்னுடன் வரும் பலருக்கும் விமான டிக்கெட் கேட்டு விரல் சொடுக்குகிறாராம்.

குத்துவிளக்காக ஆடிய ‘மான்’ நடிகை, அரசியல் வம்புகளில் இப்போது பிஸி. தன் கணவர் அயல்நாட்டில் இருப்பதாகச் சொல்கிறார் இவர். ‘‘உண்மையில் அம்மணிக்கும் ஆத்துக்காரருக்கும் டைவர்ஸ் ஆகிவிட்டது’’ என காதைக் கடிக்கிறார்கள் கோலிவுட்டில்!

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

மேகா ஆகாஷ்: நான் தோனியின் பெரிய ஃபேன். ஒரு முறை தோனி சென்னைக்கு வந்திருந்தபோது அவரை மீட் பண்ணேன். அப்போ ரொம்ப நேரம் அவர்கூட இருக்கிற மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சது. அந்த நாளை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அப்போ அவர் எனக்கு கேக் ஊட்டிவிட்ட மொமன்ட் இருக்கே... வாவ்! ஒன் ஆஃப் தி பெஸ்ட் போட்டோ இன் மை லைஃப்.