சினிமா
Published:Updated:

“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை!”

“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை!”

“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை!”

யானா எரப்பா- 2011-ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா போட்டியாளர். தற்போது, ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். வெல்கம் டு கோலிவுட்! 

“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை!”

“மாடலிங்ல எப்படி ஆர்வம் ஏற்பட்டுச்சு?”

“சின்ன வயசுல இருந்து எந்தவொரு குறிக்கோளும் இல்லாம ஸ்கூலுக்குப் போய் ஏனோதானோனு படிச்ச பொண்ணுதான் டயானா. என் வீட்ல நான் ரொம்ப உயரமா இருப்பதால் ராணுவத்தில் சேரணும்னு விருப்பப்பட்டாங்க. என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க நிறைய பேர் ரானுவத்தில் இருக்காங்க. ஆனா, பெர்சனலா எனக்கு எந்தவொரு குறிக்கோளும் வாழ்க்கையில இருந்ததில்லை. பெங்களூருல காலேஜ் படிச்சிட்டு இருந்தப்போ, என்னோட பிரின்சிபல், ‘உனக்கு மாடல் ஆகுறதுக்கான அத்தனை தகுதியும் இருக்கு. முயற்சி பண்ணு’னு சொல்லி ஊக்கப்படுத்தினாங்க. அவங்கதான் என்னை பிரசாத் பிதப்பாங்கிற ஃபேஷன் டிசைனர்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சாங்க..”

“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை!”

“மிஸ் இந்தியா வாய்ப்பு எப்படி வந்தது?”

“பிரசாத் பிதப்பாகிட்ட வேலை பார்க்குற எல்லா மாடல்களுமே அழகிப்போட்டியில கலந்துக்குவாங்க. கிட்டத்தட்ட 10 அழகிப் போட்டிகள்ல கலந்துக்கிட்டதுக்கு அப்புறமா, 2011 மிஸ் இந்தியா போட்டியில கலந்துக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. மன அழுத்தம் நிறைந்த வேலைகள்ல ஃபேஷன் வாக் பண்றதும் ஒண்ணு. ஃபேஷன் வாக் பண்ணும்போது காதுல ஹெட்-செட் மாட்டியிருப்போம். அது வழியா நிகழ்ச்சி நடத்துற டீம்கிட்ட இருந்து ஆயிரம் கமெண்ட்ஸ் வரும். ‘இடது பக்கம் திரும்புங்க, வலது பக்கம் பாருங்க, சிரிங்க. கை தூக்குங்க, திரும்பி வாங்க’னு தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதை சரியா பண்ணாதான் நீங்க அடுத்தடுத்த அழகிப் போட்டியில பங்குபெற முடியும். காஸ்டியூம்களை நாம தேர்ந்தெடுக்க முடியாது. அவங்க எப்படிப்பட்ட உடைகளை கொடுத்தாலும் நீங்க போட்டுதான் ஆகணும். ஹேர் ஸ்டைல், மேக்-அப் எதுவுமே நம்ம கையில இல்லை. ரொம்பவே சவாலான விஷயம்!”

“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை!”
“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை!”

“மாடலிங் நட்சத்திரம் எப்படி சிவந்த வானத்துக்கு உள்ளே வந்தது?”

“ஒருநாள் மெட்ராஸ் டாக்கீஸ்ல இருந்து போன் வந்துச்சு. ‘உங்களுக்குத் தமிழ் பேசத் தெரியுமா’னுதான் கேட்டாங்க. ‘நான் சின்ன வயசுல இருந்தே தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க’னு சொன்னேன். பொறந்து வளர்ந்தது கர்நாடகா. பூர்வீகம் கேரளா. ஆனா தமிழ் சினிமாக்கள்மீது ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம்தான் தமிழ் சினிமாவுக்கு என்னைக் கொண்டுவந்து சேர்த்தது!”

சுஜிதா சென் - படம்: ப.சரவணகுமார்