Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே செஞ்சுரி போட்டிருக்கிற 18 வயதேயான ப்ரித்விஷாவைக் கொண்டாடித் தீர்க்கிறது கிரிக்கெட் உலகம். இவர்தான் அடுத்த சச்சின் என்றெல்லாம் புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்றபடி தன் முதல் தர போட்டி, முதல் டெஸ்ட் என பேட்டைப் பிடிக்கிற இடமெல்லாம் செஞ்சுரி போட்டு கணக்கைத் தொடங்கியிருக்கிறார் ப்ரித்வி ஷா. ‘`மிக அதிகமா கணக்கு போடவேண்டாம். இப்போதைக்கு கிரிக்கெட்டை மகிழ்ச்சியா என்ஜாய் பண்ணுங்க. எல்லா ஆட்டமும் முக்கியம். அப்படித்தான் நான் விளையாடியிருக்கிறேன். எங்கு விளையாடினாலும் முழுமனதோடு விளையாட வேண்டும்’’ என அட்வைஸ் கொடுக்கவும் தவறவில்லை சச்சின். இவரும் எம்ஆர்எஃப் பேட்தான்!

ர்வதேச வழக்குகளைத் தொடர்ந்து கண்காணிக்கிற இன்டர்போல் அமைப்பின் தலைவர் மெங் ஹோங்வோய். சென்ற மாதம் பிரான்ஸிலிருந்து சீனாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தவர் காணாமல் போய்விட்டார். காணாமற்போன கணவனைக் கண்டுபிடித்துத் தருமாறு அவர் மனைவி புகார் கொடுக்க, தேடலில் இறங்கியது பிரான்ஸ் அரசு. இறுதியில், மெங் ஹோங்வோயை அவர்மீதான புகாரின் பேரில் சீன அரசு ரகசியமாக விசாரித்து வருவதும், இப்போது சீனாவில்தான் அவர் இருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது. போலீஸ்கள் ஜாக்ரதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜித் நடித்து, சென்ற ஆண்டு வெளியான ‘விவேகம்’ திரைப்படம் கன்னடத்தில் ‘கமாண்டோ’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து, ‘விஸ்வாசம்’ படத்தையும் கன்னடத்தில் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சிறப்பு சிறப்பு!

இன்பாக்ஸ்

ஜி.வி.பிரகாஷ் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். ராஜீவ் மேனன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் நடித்த `சர்வம் தாளமயம்’ தமிழில் ரிலீஸாகும் முன்பே உலகத் திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளத் தேர்வாகியிருக்கிறது. ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் அக்டோபர் மாதம் நடைபெற்று வரும் 31-வது திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. திரையிடப்படும் இடங்களில் இந்தப் படத்தின் பெயர் ‘மெட்ராஸ் பீட்ஸ்.’ வாழ்த்துகள் ஜிவிபி

டந்த மாதம் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார், ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித். சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நடத்திய  கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்ள இந்தியாவிற்கு வந்த வில் ஸ்மித், ‘பாலிவுட் படம் ஒன்றில் ஒரு பாடலுக்காவது ஆடவேண்டும்’ என்ற தனது நிறைவேறாத கனவைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஷாருக்கான் கூப்பிடுவார்!

இன்பாக்ஸ்

பிரேஸ்னா முசாசாய் (Breshna Muzasai) ஆப்கானிஸ்தானின் மலாலா என்று அழைக்கப்படுகிறவர். சிறுவயதிலேயே போலியாவால் தன் ஒரு காலை முற்றிலுமாக இழந்தவர் . 2016-ல் ஆப்கானில் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தவர், தாலிபான்களின் தாக்குதலில் தன்னுடைய இன்னொரு காலிலும் மூன்று துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டார். அதற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறவே அச்சத்தில் இருந்தவரை அவருடைய குடும்பம் ஊக்கப்படுத்தியது. தாலிபான்களின் எதிர்ப்புகளை மீறி மீண்டும் கல்லூரிக்குச் சென்று படித்து முடித்ததோடு, இன்று ஆப்கனில் பெண்கள் கல்வியை வலியுறுத்துகிற போராளியாகவும் உருவாகியுள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்த பிரெஸ்னா ‘`ஆப்கனில் இருக்கிற எல்லோருக்குமே இந்தியா மீது பெரிய மரியாதை உண்டு. ஆப்கன் மீண்டு வர இந்தியாவின் உதவிகள்தான் காரணம்’’ என்று கூறியிருக்கிறார். கல்விதான் உயர்த்தும்!

ந்திய ரயில்வேயின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது பயணிகளின் திருட்டுத்தனம். இந்திய ரயில்வே சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சென்ற ஆண்டு மட்டும் ஏசி பெட்டிகளில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் அதிகமான போர்வைகளைப் பயணிகளே திருட்டுத்தனமாக வீட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சில லட்சம் தலையணை உறைகள், தலையணைகள், பாத்ரூம் மக்குகள், பல்புகள் என இந்தத் திருட்டுகளின் எண்ணிக்கை மிகப்பெரியது. இதனால் ரயில்வே துறைக்குப் பெரிய இழப்பாம். சமீபத்தில் கோவா-மும்பை இடையே இயக்கப்பட்ட லக்ஸூரி ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸிலும் கூட பயணிகள் சேட்டை தாங்கமுடியவில்லையாம். அதிநவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் இருந்து ஹெட்போன், எல்சிடி ஸ்கிரீன், சோப்புகள், டிஸ்யூ பேப்பர்கள் எனத் திருடியிருக்கிறார்கள். வசதியானவர்கள் மட்டுமே பயணிக்கிற இந்த ரயிலில் குறைந்த பட்ச டிக்கட் விலையே 1200 ரூபாய். இது உங்கள் சொத்து!

இன்பாக்ஸ்

தெலுங்குதேசமே பாலகிருஷ்ணா நடிக்கும் என்டிஆர் பயோபிக்கிற்காகக் காத்திருக்கிறது. முதலில் ஒரு பாகம்தான் எனத் திட்டமிடப்பட்ட படம் இப்போது இரண்டுபாகங்களாக ஜனவரியில் ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள். முதல் பாகத்திற்கு கதாநாயகுடு என்றும், இரண்டாம் பாகத்திற்கு மகாநாயகுடு என்றும் தலைப்பிட்டிருக்கிறார்கள். முதல்பாகத்தில் சினிமா வாழ்க்கை, இரண்டில் அரசியல் வாழ்க்கையும் இருக்குமாம்! இந்த நிலையில் என்டிஆரின் இரண்டாவது மனைவி பார்வதி, இந்தப்படம் எடுப்பதற்காக என்னிடம் அனுமதி வாங்கவில்லை, படம் ரிலீஸாக விடமாட்டேன். கோர்ட்டுக்குப் போவேன். நான் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி, 22 ஆண்டுகளாக நிறைய அவமானங்களை சந்தித்துவிட்டேன்’’ என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்! சர்ச்சை ஸ்டார்!

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இது `ரெட் அலெர்ட்’ நேரம். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சிவப்பு அட்டை பெற்று, கண்ணீரோடு வெளியேறிவர், இப்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி கண்ணைக் கசக்கிக்கொண்டிருக்கிறார். ரொனால்டோ மீது,  நெவாடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், `ரேப் கேஸ்’ கொடுத்ததுதான் ஐரோப்பியக் கால்பந்து உலகில் தற்போதைய ஹாட் டாபிக். சம்பவம் நடந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பெண் இப்படிப் புகார் கொடுப்பார் என்பதை ரொனால்டோ எதிர்பார்க்கவே இல்லை. ஆரம்பத்தில் இது `Fake news’ என மறுத்தவர், இப்போது இந்தப் பிரச்னையை `சட்டப்படி எதிர்கொள்வேன்’ எனச் சவால் விடுத்துள்ளார். எத்தி விளையாடுறாங்கப்பா!

2015-ல் ஹிட்டடித்த பாலிவுட் சினிமா ‘பத்லாபூர்.’ மண்டைக்குள் ராட்டினம் சுற்ற விடும் கிறுகிறு க்ரைம் படங்களை இயக்குவதில் கில்லாடியான ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். தற்போது ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘அந்தாதூன்’ திரைப்படமும் அதேபோல ராட்டின சினிமாதான். கண் தெரியாத பியானோ இசைக்கலைஞன் ஒரு கொலைக் குற்றத்தின் சாட்சியாகச் சேர்க்கப்படுகிறான். அவன் நிஜமாகவே கண்பார்வையற்றவனா..? அவனால் சாட்சி செல்ல முடிந்ததா என்பதை காமெடியும், ட்விஸ்ட்டுகளுமாய்க் கலந்து சொல்லியிருக்கிறது படம். பாராட்டுகள் குவிவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்ரீராம் ராகவன். இவர் ஒரு சென்னைத் தமிழர். க்ரைம் மன்னன்!