Published:Updated:

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

Published:Updated:
“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

மும்தாஜ்... சினிமாவுக்கு பிரேக், சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவது என்றிருந்தவர், ‘பிக் பாஸ்’ சீஸன் 2-ல் அதிரடியாகக் களமிறங்கி அதகளம் செய்தார். அதுவரை கிளாமர் நடிகையாகத் தமிழ் ரசிகர்கள் அறிந்துவந்த மும்தாஜுக்கு ‘மம்மு’, ‘மும்மு’, ‘அம்மா’ என அன்புமழை பொழிந்தது. 

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

‘`வீட்டில் மும்தாஜ் எப்படி?”

‘` ‘பிக் பாஸ்’ வீட்டில் பார்த்த மும்தாஜ்தான் ரியல் லைஃப் மும்தாஜும். தினமும் தொழுகை பண்ணிடுவேன். குளிக்கும்போதுகூட மனசுக்குள்ள ஓதிக்கிட்டே இருப்பேன். சொல்லப்போனா ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள இருக்கும்போது எனக்கு பிரேயர் பண்றதுக்கு நிறைய நேரம் கிடைச்சது; வெளியில வந்ததும் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. என்னைச் சுத்தியிருக்குறவங்க மேல அக்கறையாயிருக்கிறது என் இயல்பு. குழந்தைகளோடு அதிக நேரத்தைச் செலவழிக்க விரும்புவேன்.’’

“உங்க குடும்பம்...?”

‘`நான் டென்த் டிராப் அவுட். எனக்கு மூணு வயசு இருக்கும்போதே எங்கப்பா பிரிஞ்சு போயிட்டாரு.  ஒவ்வொரு நாளும் அம்மாவோட கண்காணிப்பிலேயே வளர்ந்த பொண்ணு. அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். எவ்வளவு வசதி இருந்தாலும், நான் அடம்பிடிக்கிறதை அவங்க ரசிக்கமாட்டாங்க. எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு பார்த்துப் பார்த்துச் சொல்லிக்கொடுத்தாங்க. அம்மாவோட பெஸ்ட் ஃப்ரெண்டோட பொண்ணு, காலேஜ் படிக்கும்போது தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அது அம்மாவைப் பெருசா பாதிச்சிருந்தது. அதனால, அவங்க என்னை காலேஜ் படிக்கக் கூடாதுன்னு சொல்லி, பள்ளியிலிருந்தும் பாதியிலேயே நிறுத்திட்டாங்க. எங்கப்பா, இப்போ மும்பையில்தான் இருக்கார். நல்லா வசதியா, ஆரோக்கியமா இருக்கார். மற்றபடி வேறெதுவும் தெரியலை.”

‘`உங்க குருவோட அரசியல் பிரவேசம் பற்றி என்ன நினைக்கிறீங்க?’’

‘`அது டி.ஆர் சாரோட தனிப்பட்ட விஷயம். இதைப் பற்றி நான் என்ன சொல்றது?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

‘`மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தது யாரோட முடிவு?” 

‘`என்னோட முடிவுதான். வீட்டிலும் `ஓகே’ சொல்லிட்டாங்க. ஸ்கூலிலிருந்து நின்னதும், நடனம் மீது என் ஆர்வத்தைத் திருப்பினேன். அப்போ, நடிக்கிறதுக்காக ஒரு வாய்ப்பு வர, அதுக்காக ஆக்ட்டிங் க்ளாஸ்ல சேர்ந்திருந்தேன். அங்கே வெச்சுதான் டி.ஆர் சார் என்னைப் பார்த்துட்டு, ‘மோனிஷா என் மோனலிசா’வில் நடிக்கவெச்சார். அந்த நேரத்துல டி.ஆர் சாரும் அவர் மனைவி உஷா அம்மாவும்தான் எனக்கு ஆதரவாக இருந்தாங்க. அவங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே நான் பண்ணினேன். டி.ஆர் சார்தான் என்னோட குரு. ஆனாலும், அவரை அடிக்கடி பார்க்க முடியுறதில்லை. அவர் பொண்ணோட கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அப்போ சார், உஷா அம்மா எல்லாரையும் பார்த்ததும், பேசினதும் ரொம்ப திருப்தியா இருந்துச்சு. அதுக்கப்பறம் `ஜோடி நம்பர் ஒன்’ல அவர் ஜட்ஜா இருந்தப்போ நான் ஸ்பெஷல் கெஸ்ட்டா போயிருந்தேன். அப்போதும் அதே அன்புதான்.’’

‘`திருமணம்..?”

‘`அம்மாவும் அண்ணாவும்கூட அதுபற்றி அடிக்கடி கேட்டுட்டே இருக்காங்க. எனக்குக் கொஞ்சம் உடல்நலம் சரியில்லை. ருமெட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையின் பாதிப்பு இருக்கு. இந்த மாதிரி நேரத்துல ஒருத்தரோட வாழ்க்கையில் இணைந்து அவருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதுமட்டுமில்ல, மேரேஜுக்குன்னு ஒரு ரெஸ்பான்ஸிபிளிட்டி இருக்கு. லைஃப் டைம் கமிட்மென்ட் அது. அதைச் சரியாகச் செய்யணும் இல்லையா... அதனாலதான் யோசிக்கிறேன். இப்போதைக்கு அண்ணன் பசங்கதான் என் உலகம். இருந்தாலும் நாளைக்கு என்ன நடக்கும்னு யாராலேயும் சொல்லிட முடியாதே.’’

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

“கிளாமர் ஆர்ட்டிஸ்ட் இமேஜ் மாறியிருக்கிறதில் சந்தோஷமா?”

“ஒரு உண்மையைச் சொல்லட்டுமா... ஒரு கட்டத்தில், என்னோட கிளாமர் ஆர்ட்டிஸ்ட் பிம்பத்தை வெறுத்ததாலதான் நான் சில காலம் சினிமாவில் இருந்தே ஒதுங்கி இருந்தேன். 20 வயசுல நம்மைப் பார்க்கிற பார்வை ரசிக்கத்தான் சொல்லும். ஆனா, பெண்களுக்கு வயது ஏற ஏற, தங்களைப் பார்க்கிற பார்வையில் ஒரு மரியாதையை ஏற்படுத்திக்க விரும்புவாங்க. அது இப்போ எனக்கு நடந்திருக்கு. ‘பிக் பாஸ்’, கண்களைத் தாண்டி மக்கள் மனசிலும் என்னை கொண்டுபோய்ச் சேர்த்திருக்கு. ஒரு நிறைவை உணர்றேன், ரொம்ப சந்தோஷமா இருக்கு.’’

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

‘`வெளியே உங்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தும் உங்களால ஏன் ஃபைனல் வரை போகமுடியலை?”

``தமிழ்ப் பொண்ணுதான் ஜெயிக்கணும்னு முன்பே முடிவு பண்ணிட்டாங்க. நான் அந்த விஷயத்துலதான் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டேன். அப்போ தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க மட்டுமே கலந்துக்க முடியும்னு சொல்லியிருக்கலாமே? நான் 22 வருஷம் தமிழ்நாட்டுல இருக்கேன். இதுவே அமெரிக்காவில் இருந்திருந்தா எனக்கு கிரீன் கார்டு கிடைச்சிருக்கும். ஆனா, இங்கதான் சிலர் தமிழ்ப் பொண்ணு, இந்திப் பொண்ணுனு வேறுபாடு பார்க்கிறாங்க.’’

“கிளாமர் இமேஜை வெறுக்கிறேன்!”

“ ‘மும்தாஜ் ஆர்மி’ சந்தோஷம் எப்படியிருக்கு?”

‘`அந்த அன்பு... ஆசீர்வாதம். நான் நடிக்க வந்தப்பவே தமிழ் ரசிகர்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தாங்க. அதனாலதான், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு ஐந்து மொழிகளில் நடிச்சிட்டிருந்தாலும், தமிழ்நாட்டிலேயே இருக்கணும்னு முடிவு பண்ணினேன். சொல்லப்போனா, எனக்கு நல்ல மார்க்கெட் இருந்தப்போ மற்ற மொழிகளில் இருந்து வந்த வாய்ப்புகளையெல்லாம் தள்ளிவெச்சிட்டுத் தமிழ்லதான்  ஃபோகஸ் பண்ணினேன். ஏன்னா, இங்கேதான் எனக்கு நிறைய ரசிகர்கள் இருந்தாங்க. இதுவரை சினிமாவில என் கேரக்டர்களை ரசிச்சவங்க, இப்போ நான் நானாக இருக்கிற என் நிஜத்தையும் ரசிக்கிறாங்க. இது ரொம்பப் பெரிய விஷயமில்லையா? சொன்னா கொஞ்சம்  எமோஷனலா இருக்கும்... என் உயிர்கூட தமிழ்நாட்டுல இருக்கும்போதுதான் பிரியணும்னு நினைக்கிறேன். மும்பையில நான் இறந்துபோனா என்னை வழியனுப்ப சிலர் மட்டும்தான் வருவாங்க. ஆனா, இங்க அப்படி இருக்காதுனு நம்புறேன்.’’

மு.பார்த்தசாரதி - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்