Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ‘ஆதத்’ என்ற படத்தில் கமிட்டாகி இருக்கிறார், நடிகை பிபாஷா பாசு. இயக்குநர் விக்ரம் பட் சொன்ன கதை பிடித்திருந்ததால், உடனே ‘ஓகே’ சொல்லிவிட்டாராம். இந்தப் படத்தில், அம்மணிக்கு டிடெக்டிவ் போலீஸ் அதிகாரி வேடம்!

மிஸ்டர் மியாவ்

• சென்னையில் செட்டிலான ஸ்ரீரெட்டிக்கு தமிழகம் மிகவும் பிடித்துபோய்விட்டதாம். குறிப்பாக, ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கவே... சென்னை கோயில்களுக்குச் சென்றுவந்துள்ளார். அடுத்து கும்பகோணம், காஞ்சிபுரம் என்று புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலங்களுக்கு விசிட் அடிக்கவுள்ளாராம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• என்.டி.ஆர் பயோபிக்கில் ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்க கமிட்டாகி இருக்கும் ரகுல் ப்ரீத்சிங், அந்த கேரக்டர் மூலமாக மக்கள் மனதில் தனி இடம் பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டுகிறார்.

மிஸ்டர் மியாவ்

• ‘அக்னி தேவ்’ படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக கமிட்டாகி இருந்த ரம்யா நம்பீசன்,  கோவையில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதே படத்தில், நடிகை மதுபாலா முதன்முறையாக நெகடிவ் ரோலில் நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்ட் சிவா, ‘வேட்டையன்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். காட்டை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிப்பது நேஹா என்ற கேரளத்தைச் சேர்ந்த புதுமுகம்!

• ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம் ஆயுத பூஜைக்கு வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், அப்போது ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி 2’ என நிறைய படங்கள் வெளியாவதால், தீபாவளிக்குப் பிறகு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். 

மிஸ்டர் மியாவ்

• ‘பத்மாவத்’ படத்திற்குப் பிறகு,   ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார், தீபிகா படுகோன். இதனை ‘ராஸி’ பட இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கவிருக்கிறார்.

கேள்வி கார்னர்

‘ரெட்டி டைரி’ படம் எந்தளவில் இருக்கு? வேறு தமிழ் படங்களில் கமிட்டாகி இருக்கீங்களா?

நடிகை ஸ்ரீரெட்டி
“ ‘ரெட்டி டைரி’ படத்தின் ஷூட்டிங் ஆரம்ப ஸ்டேஜ்லதான் இருக்கு. இதுல நான் சி.பி.ஐ ஆபிஸராக நடிக்கிறேன். இது தவிர, மூணு தமிழ் படங்கள்ல நடிக்க கமிட்டாகி இருக்கேன். அது பத்தின அப்டேட் சீக்கிரம் வெளியாகும்.”

மிஸ்டர் மியாவ்

சைலன்ஸ்

• ஏகபத்தினி விரதன் பெயரை தன் பெயரில் பாதியாகக் கொண்டுள்ள நடிகை, முன்பு வெள்ளித்திரையில் நடித்தார். தற்போது சின்னத்திரையில் ஜொலிக்கிறார். சமீபத்தில் மாம்பழக் கட்சியில் ஐக்கியமான நடிகருக்கும் அந்த நடிகைக்கும் திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. இவருடன் மீண்டும் சேர்ந்துவாழ நடிகைக்கு தற்போது ஆசைவர, நடிகருக்குத் தூதுவிட்டாராம். நடிகரோ, கறாராக ‘நோ’ சொல்லிவிட்டாராம்.   
             

• ஏற்கெனவே ஜெயித்த ‘சிங்கிள்மேன்’ படத்தை, இரண்டாம் பாகமாக எடுக்கப்போகிறார்கள். இதில், வெற்றி நடிகருக்கு வில்லனாக நடிக்க அவ்விட பூமியின் மூத்த ஹீரோவை அணுகினார்களாம். சினிமாவில் உள்ள சகல வேடங்களையும் ரகளையாகச் செய்துள்ள அவ்விட நடிகர், பேசவந்தவரிடம்... ‘என்னது வில்லனா?’ என்று கோபத்தின் உச்சியில் கண்கள் சிவக்க கதகளி ஆடிவிட்டாராம்.