தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நான் அக்கா பிள்ளை! - மஹத்

நான் அக்கா பிள்ளை! - மஹத்
பிரீமியம் ஸ்டோரி
News
நான் அக்கா பிள்ளை! - மஹத்

சிஸ்டர்

ஷிகாவுடன் இன்ஃபேச்சுவேஷன், மும்தாஜுடன் மோதல், மற்ற சக பெண் ஹவுஸ்மேட்களுடன் அடிக்கடி தகராறு என `பிக் பாஸ்’ வீட்டின் சர்ச்சை நாயகன் மஹத், `பிக் பாஸ்’ வீட்டின் `பிளே பாய்’... நிஜத்தில் குட் பாய்.

``நான், பெண்களை மதிக்கிறவன்; பெண்கள் இல்லாம ஆண்கள் உலகம் இல்லைன்னு நம்புறவன்.  அம்மா, அக்கா, இப்போ பிராச்சினு என் உலகத்தை அழகாக்கினதும் அர்த்தப்படுத்தினதும் பெண்கள்தான்’’ - சுயவிளக்கத்தோடுதான் பேசவே ஆரம்பிக்கிறார் மஹத்.

`` `பிக் பாஸ்’ வீட்டுல யஷிகாவுக்கும் எனக்கும் எதுவும் நடக்கலை. யஷிகாவின் கேரக்டரும் அன்பும் எனக்குப் பிடிச்சிருந்தது. நான் அவங்களை ஏமாத்தலை. தப்பு பண்ணலை. சில மணி நேர ரயில் பயணத்துலேயே நம்மகூட டிராவல் பண்றவங்களோடு நட்பு ஏற்படும்போது, 70 நாள்கள் ஒரே வீட்டுல சேர்ந்திருந்த எங்களுக்கு அப்படியொரு ஃபீலிங் வராதா? என்னிக்கும் யஷிகாவோடு நல்ல நட்பு தொடரும். பிராச்சிக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் ரொம்ப ஸ்பெஷலானது. அதுதான் நிரந்தரமானதும்கூட.  இப்போ மக்கள் என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. `இவன் கோபக்காரன். ஆனாலும், அதுக்கு இணையான அன்பையும் கொடுக்கிறவன்’னு தெரிஞ்சுக்கிட்டாங்க. நன்றி மக்களே’’ - மரியாதையோடு பேசுகிற மஹத், அம்மா பிள்ளையல்ல... அக்கா பிள்ளையாம்!

நான் அக்கா பிள்ளை! - மஹத்

`பிக் பாஸ்’ ஃபினாலே நிகழ்ச்சியைப் பார்க்கவும் தம்பியுடன் சில நாள்கள் இருக்கவும் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா வந்திருக்கிறார் மஹத்தின் அக்கா ரேணு.

``அக்கானு சொல்றதைவிட இவளை இன்னோர் அம்மானு சொல்றதுதான் சரியா இருக்கும். எங்க அம்மாவும் அப்பாவும் பல வருஷங்கள் வெளிநாட்டுல இருந்தாங்க. நானும் அக்காவும் கொடைக்கானல்ல பவன்ஸ் ஸ்கூல்ல படிச்சோம். ஹாஸ்டலில் வளர்ந்தோம். அக்காவா மட்டுமில்லாம, அம்மா அப்பாவின் இடங்களையும் சேர்த்து எனக்குக் கொடுத்திருக்கா. இப்படியோர் அக்கா அமைஞ்சது கடவுள் எனக்குக் கொடுத்த வரம்னுதான் சொல்வேன்.

அக்காவை  நான்  செல்லமா  `Bunny’னு கூப்பிடுவேன். இவ என்னைவிட ரெண்டு வயசு மூத்தவள். ஆனா, வயசுக்கு மீறின பக்குவம் உள்ளவள். அநியாயத்துக்கு அப்பாவி. நான் என்ன பண்ணினாலும் சப்போர்ட் பண்ற ஜீவன். அதேநேரம் தப்பு பண்ணினா, முகத்துக்கு நேரா சொல்லித் திருத்துற டீச்சரும்கூட’’ - அக்காவின் அன்பைப் பகிரும்போது மஹத்தின் முகம் மலர்கிறது.

நான் அக்கா பிள்ளை! - மஹத்


``அக்காவோடு இருந்த அத்தனை நாள்களுமே எனக்கு இனிமையானவை. அம்மாவும் அப்பாவும் ஃபாரின்லேருந்து எங்களுக்கு பாக்கெட் மணி அனுப்பு வாங்க. இவ தனக்கு அனுப்பின பணத்தையும் என்கிட்ட கொடுத்துடுவா. சின்ன வயசுல நான் இவகூட நிறைய சண்டைபோட்டிருக்கேன், நிறைய திட்டியிருக்கேன், அடிச்சிருக்கேன்.  அப்பல்லாம் அது எனக்குப் பெரிய விஷயமா தெரியலை. அக்காவுக்கு காலேஜ் முடிச்சதுமே கல்யாணம் பண்ணிட்டாங்க. அப்பதான் என் உலகத்தையே புரட்டிப்போட்ட மாதிரி இருந்தது. ஒரு கால் உடைஞ்ச மாதிரி உணர்ந்தேன். ஹாஸ்டலில் படிச்சபோது எந்த விஷயத்துக்கும் எனக்கு அக்கா இருக்காங்கிற அந்த ஃபீலிங்கே தைரியத்தைக் கொடுக்கும். எல்லாத்துக்கும் அக்கா இருக்காங்கிற அந்த ஃபீலிங் இந்த வயசுலயும் எனக்கு இருக்கு.

அக்கா, ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் பேங்க்ல மேனேஜரா வேலை பார்க்கிறா. இன்னிக்கும் இவளுக்குச் சம்பளம் வந்ததும் முதல் வேலையா எனக்கு பாக்கெட் மணி அனுப்பிடுவா. எனக்கு கிஃப்ட்ஸ் அனுப்புறது, போன் வாங்கிக் கொடுக்கிறதுனு நான் கேட்டது, கேட்காததுனு எல்லாமே செய்வா. அக்காவுக்கு எட்டு வயசிலும் நாலரை வயசிலும் ரெண்டு ஆண் குழந்தைகள் இருக்காங்க. `என் தம்பிதான் எனக்கு முதல் பையன்’னு சொல்வா’’ - தம்பிக்கு வார்த்தைகள் தழுதழுக்க, அம்மாவின் வாஞ்சையோடு அணைத்துக்கொள்கிறார் அக்கா.

நான் அக்கா பிள்ளை! - மஹத்

``அம்மா அப்பாகிட்டயோ, ஃப்ரெண்ட்ஸ்கிட்டயோ பேச முடியாத விஷயங்களைக்கூட நான் அக்காகிட்டதான் ஷேர் பண்ணிப்பேன். என் கேர்ள் ஃப்ரெண்ட் பிராச்சியோடு சண்டைபோட்டாகூட அக்காகிட்டதான் அட்வைஸ் கேட்பேன். பிராச்சியை நான் மீட் பண்ணி, எங்களுக்குள்ள லவ் கன்ஃபர்ம் ஆன அடுத்த நிமிஷமே அதை அக்காகிட்டதான் சொன்னேன்.  அக்கா இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, `இதெல்லாம் சரியா வருமா, தேவையா?’னு அட்வைஸ் பண்ணியிருப்பாங்க; கோபப்பட்டிருப்பாங்க. ஆனா, என் அக்கா சந்தோஷப்பட்டா. இன்னிக்கு அக்காவும் பிராச்சியும் ரொம்ப க்ளோஸ்.

சினிமாதான் என் வாழ்க்கைனு முடிவெடுத்தபோதும் அக்காகிட்டதான் முதல்ல சொன்னேன். அம்மாவும் அப்பாவும் `சினிமாவா...’னு தயங்கின போதுகூட `அவன் நல்லா வருவான்... அவனுடைய முடிவு சரியாதான் இருக்கும்’னு எனக்காக சண்டைபோட்டு பர்மிஷன் வாங்கிக்கொடுத்திருக்கா. ஒருகட்டத்துல என் படங்கள் சரியா போகாதபோது, அம்மாவும் அப்பாவும் `இதையெல்லாம் விட்டுட்டு வேற ஏதாவது வேலை பாரு’னு சொன்னாங்க. அப்பவும் என் ஃபீலிங்ஸைப் புரிஞ்சுக்கிட்டு சப்போர்ட் பண்ணினது அக்காதான். `நீ உன் லட்சியங்களையும் கனவுகளையும் விட்டுடாதே... நம்பிக்கையோடு இரு. நான் இருக்கேன் உன்கூட’னு சொன்னா. `பிக்பாஸ்’ வாய்ப்பு வந்தபோது `இது உன் வாழ்க்கையில பெரிய திருப்புமுனையா இருக்கும். தயங்காம ஓகே சொல்லு’னு என்னைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வெச்சதும் அக்காதான்.

`பிக் பாஸ்’ வீட்டுல நான் பண்ணின தப்பையெல்லாம் சுட்டிக்காட்டினா. குறிப்பா, என் கோபத்தை மாத்திக்க வேண்டியதன் அவசியத்தைச் சொன்னா. எல்லார்கிட்டயும் சட்டுசட்டுனு கோபப்பட்டுருவேன். கோபம் தணிஞ்சதும் தப்புனு உணர்ந்து நானே போய் மன்னிப்பும் கேட்பேன். அக்காகிட்டயும் நிறைய கோபப்பட்டிருக்கேன். `என்கிட்ட சண்டைபோடுற மாதிரி நீ மும்தாஜ்கிட்ட சண்டைபோட்டிருக்கே. கோபப்படுறது தப்பில்லை. ஆனா, கோபத்துல எப்படி ரியாக்ட் பண்றோம்கிறது முக்கியம். உன்னுடைய இந்த கேரக்டரை மாத்திக்கோ’னு சொன்னா. மாத்திக்கிறேன்’’ - மனதிலிருந்து பேசும் மஹத், `பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வந்த பிறகு செம பிஸி. நான்கு பெரிய பேனர்களில் நடிக்கிறாராம்.

``அக்காவுக்கென நான் இதுவரைக்கும் எதையும் பண்ணலை. அன்பையும் சரி, அன்பளிப்புகளையும் சரி, இவதான் எனக்கு அள்ளி அள்ளிக் கொடுத்திருக்காள். அதே அளவுக்கு எல்லாத்தையும் திருப்பிக் கொடுக்க முடியுமானு தெரியலை. நான் ஜெயிப்பேங்கிறதுல என்னைவிடவும் அதிக நம்பிக்கை வெச்சிருக்கிறவள் என் அக்கா. அதை நிஜமாக்கிறது மூலமாதான் அந்த நன்றிக்கடனைத் தீர்க்க முடியும்.’’

அக்காவுக்குத் தம்பி மீது அன்பென்றால், தம்பிக்கோ அக்கா மீது பேரன்பு!

- ஆர்.வைதேகி 

படங்கள் : பா.காளிமுத்து