தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

தகதக கலகல பரபர தீபாவளி!

தகதக கலகல பரபர தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
News
தகதக கலகல பரபர தீபாவளி!

ஏழுக்கு ஏழு

தகதக கலகல பரபர தீபாவளி!

பட்டாசுகள் பற்றி படபடனு பொரிங்க... பார்ப்போம்!

- பிரியா பவானிசங்கர், நடிகை


‘`தீபாவளி அன்னிக்கு மொட்டை மாடிக்குப் போயிட்டு மத்தவங்க வெடிக்கிறதை சந்தோஷமா வேடிக்கை பார்ப்பேன். ஆனால், பட்டாசு வெடிக்கிறதால சுற்றுச்சூழல் மாசுபடுதுன்னு சொல்றாங்க. நம்ம ஊர்ல தீபாவளின்னாலே பட்டாசுன்னு ஆகிடுச்சு. அதனால் அதை முழுக்க முழுக்க மாற்ற முடியாது. சுற்றுச்சூழலையும் மனசுல வெச்சி கொஞ்சம் பொறுப்பு உணர்வோடு கொண்டாடலாம்தானே?''

தகதக கலகல பரபர தீபாவளி!

மறக்க முடியாத தீபாவளி?

- ஹரிஜா, யூடியூப் ஆர்ட்டிஸ்ட்

தகதக கலகல பரபர தீபாவளி!‘`நான்  2004-ல்  நான்காவது படிக்கும்போது தாத்தா, பாட்டி, பெரியப்பா, மாமானு எங்க குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேரும் ஒண்ணா சேர்ந்து தாத்தா, பாட்டி வீட்டில் தீபாவளியைக் கொண்டாடினோம். தீபாவளி வரப்போற கொஞ்ச நாளைக்கு முன்னாடி மாமா, அத்தைன்னு  எல்லாருக்கும் லெட்டர் போட்டு, ‘தீபாவளி வரப் போகுது, அவசியம் வாங்க’னு சொல்லுவோம்.  இப்போதெல்லாம் தீபாவளின்னா ஒரு போன் மெசேஜோடு முடிஞ்சிடுது. 2004-ல் தீபாவளி கொண்டாடினபோது கிடைச்ச சந்தோஷமெல்லாம் இப்போ கிடைக்கிறதில்லை. அதேமாதிரி, எல்லாரும் ஒரே இடத்தில் ஒண்ணா கொண்டாடின கடைசி தீபாவளியும் அது. அதனால், எனக்கு மறக்கவே முடியாத தீபாவளியும் அதுதான்!’’

தகதக கலகல பரபர தீபாவளி!

தீபாவளி என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது...

- உஷா கிருஷ்ணன், இயக்குநர்

``நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ எங்கப்பா துணி, பட்டாசு வாங்குறதுக்குப் பட்ட கஷ்டங்கள்தான் தீபாவளின்னாலே எனக்கு ஞாபகத்துக்கு வருது. தீபாவளிக்கு முந்தைய நாள் வரைக்கும் நமக்குப் புதுத்துணி கிடைக்குமாங்கறது சந்தேகமாகவே இருக்கும். வீட்ல நாலு குழந்தைகள் இருக்கிறதால பட்டாசெல்லாம் அளவாதான் வாங்கிட்டு வருவாங்க. கம்பி மத்தாப்பு, சங்குச்சக்கரம் மாதிரி சின்னச் சின்னப் பட்டாசுகள்தான் வெடிப்போம். இரவோடு இரவா நிறைய நியூஸ் பேப்பரைக் கிழிச்சு வாசல்ல விரவி விட்டுடுவோம். காலையில மத்த பசங்க முன்னாடி நிறைய லட்சுமி பட்டாசு வெடிச்ச மாதிரி காட்டிக்குவோம். இப்போ, அதெல்லாம் யோசிச்சுப் பார்க்கும்போது, ‘அந்தக் கஷ்டக்காலத்திலகூட நாம ஒரு `கெத்'தைத் தக்க வெச்சிருக்கோம்ல’னு சிரிப்பா வருது!’’

தகதக கலகல பரபர தீபாவளி!

தீபாவளியில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம்?

 - பாவனா பாலகிருஷ்ணன், நிகழ்ச்சித் தொகுப்பாளர்

‘` `உத்தமபுத்திரன்', ‘வ’, ‘மைனா’, ‘வல்லக்கோட்டை’னு அந்த தீபாவளிக்கு நான்கு படங்கள் ரிலீஸ் ஆச்சு. நானும் என் ப்ரெண்ட்ஸும், ‘இந்த வருஷ தீபாவளியை முழுக்க முழுக்க நாம தியேட்டர்லதான் கொண்டாடுறோம்’னு முன்னாடியே முடிவு பண்ணிட்டோம். அப்புறம் என்ன, காலையில் இருந்து நைட்டு வரைக்கும் கொண்டாட்டம்தான்!

வீட்டுக்குக் கிளம்பும்போது கண்ணெல்லாம் மங்கலா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. எந்தளவுக்கு தியேட்டர்ல ஜாலியா இருந்தேனோ, அதே அளவுக்கு வீட்டுல செமையா திட்டு வாங்கினேன்!’’

தகதக கலகல பரபர தீபாவளி!

இந்தாண்டு தீபாவளியில் என்ன ஸ்பெஷல்?

-  தீபா வெங்கட், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

``என்  கணவரின் குடும்பத்தில் எத்தனை பேருன்னு சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு ரொம்பப் பெரிய குடும்பம். அவர்களில் நிறைய பேர் வெளிநாட்டுல இருக்காங்க. தீபாவளிக்குக் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு விழாவில் எல்லாரும் கலந்துக்கப் போறோம். வெளிநாடுகள்ல இருந்து வர்றவங்க அப்படியே தீபாவளிக்கும் இங்கேயே இருந்து, அவங்க பிள்ளைங்க, எங்க பிள்ளைங்கன்னு எல்லாருமா சேர்ந்து இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.

அந்த நாளுக்காகத்தான் காத்துட்டிருக்கோம். எல்லாரும் சேர்ந்து ஒண்ணா இருக்கப் போறதால இந்த ஆண்டு தீபாவளியே எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!’’

தகதக கலகல பரபர தீபாவளி!

தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாட என்ன செய்யலாம்?

- சுதா, வழக்கறிஞர்

’’பட்டாசுகளில் எந்தளவு வெடிமருந்துகள்  பயன்படுத்த வேண்டும் என சட்டத்தில் சொல்லியிருக்கிறதோ, அதன்படி தயாரான பட்டாசுகள் மட்டும்தான் விற்பனைக்கு வர வேண்டும்.

ஒவ்வொரு தீபாவளியின்போதும் சில குடிசைகள் எரிந்துவிடுகின்றன. பல குழந்தைகளின் கைகளில் தீக்காயம் ஏற்படுகின்றன. அப்படி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பாகத் தீபாவளியைக் கொண்டாட வேண்டும். சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள் இது. அதனால், குழந்தைகளிடத்தில் பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுவது பற்றி அன்பாக எடுத்துச் சொல்ல வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும்...’’

தகதக கலகல பரபர தீபாவளி!

பட்டாசுகள் இல்லாத கொண்டாட்டம் சாத்தியமா?

- அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளர்

``குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பண்டிகைன்னா அது தீபாவளிதான். எல்லாக் குழந்தைகளும் பட்டாசுகளுக்காகத்தான் தீபாவளியை எதிர்பார்க்கறாங்க.அப்படி நகமும் சதையும் மாதிரிதான் பட்டாசும் தீபாவளியும். காலையில் நான்கு மணிக்கு எழுந்திரிச்சு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம்லாம் இப்போ குறைஞ்சது மாதிரி இருக்கு. இதில் பட்டாசும் கூடாதுன்னு தடை பண்ணிட்டா பின்னாடி வர்ற தலைமுறைக்கு தீபாவளி கொண்டாட ஒண்ணுமே இருக்காது. அதே நேரத்தில் காற்று மாசுபடுவது பற்றியும் நிச்சயம் யோசிக்கணும். குழந்தைகளுக்கு பட்டாசுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். வெடிமருந்துகள் அதிகம் கொண்ட பட்டாசுகள் வாங்குவதை நிறுத்திவிட்டு, குறிப்பிட்ட அளவு பட்டாசுகள் மட்டும் வாங்கி வெடித்தால் போதுமானது. ஆனால், மொத்தமாக பட்டாசுகள் இல்லாத தீபாவளி சாத்தியமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.’’

- ப.தினேஷ்குமார்