Published:Updated:

“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”

“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”
பிரீமியம் ஸ்டோரி
“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”

“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”

“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”

“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”

Published:Updated:
“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”
பிரீமியம் ஸ்டோரி
“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”

“மெரினா கடற்கரையில் இருந்த தாத்தாவின் சிலையைப் பார்க்கும் போதெல்லாம் அவ்வளவு பெருமையா இருக்கும். அடுத்த தலை முறைக்கும் அவர் எளிதா சென்றுசேர அந்தச் சிலை ஒரு வாய்ப்பா இருந்துச்சு. ஆனா, ஏதேதோ காரணங்கள் சொல்லி அந்தச் சிலையை அங்க இருந்து எடுத்தாங்க. அது எல்லாருக்குமே பெரிய அதிர்ச்சி. சிவாஜி, தமிழரின் அடையாள மில்லையா? அவர் தமிழர்களுக்குச் சொந்தமானவரில்லையா? அப்படிப் பட்ட நடிகர் திலகத்தைக் கட்சி பேதமில் லாம கொண்டாடணும் என்பதுதான் எங்களின் விருப்பம்!” - சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு வார்த்தைகளில் அவ்வளவு ஆதங்கம். கடந்த அக்டோபர் 1, சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட சமயத்தில் விக்ரம் பிரபுவைச் சந்தித்தேன். ‘துப்பாக்கி முனை’ படத்தில் சற்றே வயதான தோற்றத்தில் நடித்துக்கொண்டிருப்பவர், பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”

“தயாரிப்பாளர் தாணு சார், எங்க குடும்ப நண்பர். அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தணும்னு நினைச்சார். ஆனால், முதலில் ‘கும்கி’யில் கமிட் ஆகிட்டேன். ‘அதனால் என்ன தம்பி, அடுத்தடுத்த படங்கள் பண்ணு வோம்’னு சொன்னார். அப்படிப் பண்ணினதுதான் ‘அரிமா நம்பி.’ பிறகு, ‘நல்ல ஸ்கிரிப்ட் வந்தா நிச்சயம் அனுப்புறேன்’ன்னார். அப்படி அனுப்பினதுதான் ‘60 வயது மாநிறம்.’ அதைத் தொடர்ந்து, ‘ஒரு வித்தியாசமான ஸ்கிரிப்ட் இருக்கு, கேட்கிறீங்களா’னு டைரக்டர் தினேஷை அனுப்பிவைத்தார். தினேஷ், மணிரத்னத்திடம் இருந்தவர். கதாசிரியர் ‘அன்னக்கிளி’ செல்வராஜ் சாரின் மகன். 

45 வயசு போலீஸ் அதிகாரி கேரக்டர். ஒரே நாள்ல நடக்கிற கதை, வித்தியாசமான அப்ரோச்னு வேகமெடுக்கிற கதையைச் சொன்னார். அந்தப்படம்தான் ‘துப்பாக்கி முனை’ ’’

“எத்தனையோ போலீஸ் படங்கள் பார்த்தாச்சே, இதில் அப்படியென்ன ஸ்பெஷல்?”


“ ‘நாம சாப்பிடுற ஒவ்வொரு அரிசியிலும் நம் பேர் இருக்குறது உண்மைன்னா, என் துப்பாக்கி யில் உள்ள ஒவ்வொரு தோட்டா வுலயும் குற்றவாளி களின் ஜாதகமே இருக்கு’னு ட்ரெயிலர்ல வந்த வசனம்தான் கதையின் மையம். நியாய தர்மத்தை நம்பி ஃபாலோ பண்ற ஒரு என்கவுன்டர் போலீஸ் அதிகாரி. அவனுக்கும் இன்றைய சமூகத்துக்குமான கதையே இந்தப் படம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”

அப்பா தன் இளம் வயதிலேயே ‘நினைவுச் சின்னம்’ உட்பட பல படங்கள்ல வெள்ளை முடியோட வயசான கேரக்டர்கள்ல நடிச்சிருக்கார். அதேபோல இதில் என் ஒரிஜினல் வயசைவிட 15 வயசு அதிகம் உள்ள கேரக்டர்.

‘எல்லாரும் நம்புறமாதிரி இருக்கணும். என்ன பண்ணலாம்’னு பேசினோம். ‘கொஞ்சம் வெயிட் போடுங்க’னு தினேஷ் சொன்னார். ‘அது ரொம்ப ஈஸி. சாப்பாட்டைப் பார்த்தாலே வெயிட் ஏறிடுவேன். ஆனா, கதையில் அதுக்கான நியாயம் இருக்கானு சொல்லுங்க, வெயிட் போட்டுட்டு வர்றேன்’னு சொன்னேன். பிறகுதான், ‘கதையில மூணுநாலு வருஷ இடைவெளி வரும். அதில் அவன் நிறைய விஷயங்கள்ல பாதிக்கப் படுறான்’னு தினேஷ் சொன்னார். ‘ஃபிட்டாவும் இருக்கணும், ஆனா வயிற்றுப் பகுதி குண்டா இருக்கணும்’னு கிட்டத்தட்ட 10 கிலோ வெயிட் போட்டேன். இப்ப அந்த போர்ஷனுக்கான ஷூட் முடிஞ்சிடுச்சு. அடுத்த படத்துக்காக, ஏறின வெயிட்டை இப்ப குறைச்சிட்டிருக்கேன்.”

“போலீஸ் கேரக்டர், ஒரே நாளில் நடக்கும் கதை... அந்தப் பரபரப்புக்கு பின்னணி இசை, ஒளிப்பதிவுனு டெக்னிக்கலாவும் சவுண்டான சப்போர்ட் இருக்கணுமே?”

“இது, செல்வராஜ் சாரும் தினேஷ் சாரும் சேர்ந்து எழுதிய ஸ்கிரிப்ட். ஒரு நாவல் மாதிரியான இந்த ஸ்கிரிப்ட்தான் ‘துப்பாக்கி முனை’யின் ஆதாரம். கேமராமேன் ராசாமதி இந்தப் படத்தின் பலம். கவிஞர் அறிவுமதியின் மகன். இந்தப் படம் வந்தபிறகு உங்களை எல்லாரும் ‘துப்பாக்கி முனை ராசாமதி’னுதான் கூப்பிடுவாங்க’னு சொல்லியிருக்கேன். அறிமுக இசையமைப்பாளர் எல்.வி.முத்து. படத்தில் இரண்டு பாடல்கள்தான். பின்னணி இசைக்கு மிகப்பெரிய களம் இருக்கு. கச்சிதமாய் ‘அரிமா நம்பி’யைச் செதுக்கித் தந்த புவன் இந்தப் படத்துக்கும் எடிட்டர். செம டீம், செம படம்!”

“முக்கியமான, மூத்த சினிமாக்குடும்பத்திலிருந்து வந்த நீங்க, இந்தக் குறுகிய காலத்துக்குள் சினிமாவில் என்ன கத்துக்கிட்டீங்க?”

“ ‘கும்கி’ பண்ணும்போது, ‘என்னமாதிரியான கதை’னு கேட்ட சிலர், கதையைக் கேட்டுட்டு, ‘யானைக் கதையா இது’னு சிரிச்சாங்க. பாட்டு ஹிட்டானதும் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு. ஆனா, ரிலீஸுக்கு முன் படம் பார்த்த பலருக்கும் அந்தப் படம் பிடிக்கலை. ‘இதெல்லாம் ஃப்ளாப்பாயிடும்’னு சொன்னாங்க. ஆனா அந்தப் படம் எப்படி ஓடுச்சுனு நம்ம எல்லாருக்கும் தெரியும். அதேபோல சரியாப் போகாத என் சில படங்களை ரிலீஸுக்கு முன் பார்த்துட்டு, ‘கண்டிப்பா ஹிட்டுதான்’னு சொன்னவங்களும் உண்டு. ஒவ்வொருத்தவங்களோட ரசனையும் ஒவ்வொருமாதிரி இருக்கு. ஒன்லைன் கேட்டு, பவுண்டட் ஸ்கிரிப்ட் படிச்சு படம் கமிட் பண்றோம். ஆனால், படமா பார்க்கும்போது அது நாம கேட்காத வேறொரு படமா இருக்கும். அதுதான் பெரிய ஏமாற்றம். ஆனா ஒரு நடிகனா என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை நான் செஞ்சிட்டிருக்கேன். அதேபோல முதல் படத்துல இருந்து இன்னைக்கு வரை என் எல்லாப் படங்களும் யூ சர்ட்டிஃபிகேட்தான். சினிமாவைக் குடும்பத்தோட வந்து பார்த்து என்ஜாய் பண்ணிட்டுப் போகணும் என்பதுதான் என் எண்ணம். அதைத்தாண்டி வெற்றி தோல்விகளை வாழக்கையின் ஒரு பகுதியா ஏத்துக்கிட்டுதான் ஆகணும்.”

“சிவாஜி, தமிழரின் அடையாளமில்லையா?”

“உங்க மனைவிக்கு சினிமா மேல ஆர்வம் உண்டா? உங்க படங்களுக்கு அவங்களோட கமென்ட்ஸ் என்ன?”

“சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. தாத்தா இறந்த நாலாவது வருஷம் பாட்டிக்கு உடம்புக்கு முடியலை. அப்ப எனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு பாட்டி ஆசைப்பட்டாங்க. அதனால காலேஜ் முடிச்ச மறுவருஷமே கல்யாணம். பிறகு ஆறு மாசம்தான் பாட்டி இருந்தாங்க. ஆனா அந்த நேரத்தில் பாட்டி ரொம்ப மகிழ்ச்சியா இருந்ததுக்கு எங்க கல்யாணமும் ஒரு காரணம். என் மனைவி எனக்கு நல்ல தோழி. சினிமா விமர்சனம் பண்றவங்க அவங்களிடம் தோத்துடுவாங்க. அந்தளவுக்கு என் படங்களை டீட்டெயிலா விமர்சிப்பாங்க.”

“சிவாஜியின் மணிமண்டபத்தை சரியா பராமரிக்கலைனு அவரோட ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம். அவரின் பேரனா நீங்க இதை எப்படிப் பார்க்கிறீங்க?”

“அரசியல், சமூகம், தேசம், புராணம் சார்ந்த சினிமாக்களை சரி விகிதத்தில் பண்ணின மனிதர், தாத்தா. அப்பவே அவரை வெளிநாடுகளில் கூப்பிட்டுப் பாராட்டி யிருக்காங்க. கடந்த 30 ஆண்டுகளில் அப்படி வேற யாருக்காவது நடந்திருக்கானு தெரியலை. நடிகர் திலகம் நம் தமிழகத்தின் அடையாளம். அவரின் புகழை யாராலும் இங்கு மறக்கவோ மறைக்கவோ முடியாது. தமிழ் உள்ள வரை, சினிமா உள்ள வரை அவரின் புகழ் நிலைத்திருக்கும்.”

ம.கா.செந்தில்குமார்