Published:Updated:

நோட்டா - சினிமா விமர்சனம்

நோட்டா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
நோட்டா - சினிமா விமர்சனம்

நோட்டா - சினிமா விமர்சனம்

சிலநாள் முதல்வனின் அரசியல் ஆட்டமே ‘நோட்டா!’

முதல்வர் நாசர் ஊழல் வழக்கில் கைதாகும் சூழல்.  குடியும் கும்மாளமுமாகத் திரியும் தன் மகனை ஓவர் நைட்டில் முதல்வர் ஆக்குகிறார் நாசர். விருப்பமேயில்லாமல் முதல்வராகும் விஜய் தேவரகொண்டா சந்திக்கும் அரசியல் சர்க்கஸ்களும் சதிகளுமே கதை.

நோட்டா - சினிமா விமர்சனம்

பிளேபாயாகவும் சிலநாள் முதல்வனாகவும் விஜய் தேவரகொண்டா. சினிமாத்தனமாக இருந்தாலும் திடீர் பிரஸ்மீட்டில் எழும் சலசலப்பை விரல் நீட்டி எச்சரித்து அடக்குவது போன்ற சில காட்சிகளில் ஈர்க்கிறார். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் தெலுங்குவாடை எக்கச்சக்கமாய் அடிக்கிறது.

 மருத்துவமனைக்குள் இருந்துகொண்டே சதி சதுரங்கம் விளையாடும் காட்சியில், தான் யார் என்பதை நிரூபித்துவிடுகிறார் நாசர். ஆனால் எந்த கேரக்டருக்கும் வலுவான அடித்தளம் அமைத்துத் தராத திரைக்கதையால் அவரது உழைப்பு வீணாகிறது. பத்திரிகை யாளர் சத்யராஜ் கேரக்டர் அறிமுகம் கொஞ்சம் நிமிரவைக்கிறது என்றால் அதற்கப்புறம் பல ‘உல்லுலாயி’ கதை சொல்லி அதையும் காலி செய்கிறார்கள். கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலை யேப்பா! எம்.எஸ்.பாஸ்கர் கேரக்டருக்கும் ‘நல்லவரா, கெட்டவரா’ குழப்பம் தான். இரண்டு நாயகிகளில் எதிர்க்கட்சித் தலைவர் மகளாக வரும் சஞ்சனா பரவாயில்லை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நோட்டா - சினிமா விமர்சனம்

பின்னணி இசையில் அசத்தும் சாம்.சி.எஸ், பாடல்களில் கோட்டை விட்டுவிட்டார். சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பு. மூர்த்தியின் கலை இயக்கம்  குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

கூவத்தூர், செம்பரம்பாக்கம், அப்போலோ, கார்ப்பரேட் சாமியார், குனிந்து கும்பிடு போடும் அமைச்சர்கள் என்று பலவற்றையும் படத்தில் கொண்டுவந்தி ருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு அரசியல் சம்பவம் என்று திணித்து, திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார்கள். நடந்து முடிந்த செம்பரம்பாக்கம் சம்பவத்தைப் பதிவுசெய்யும் காட்சிகளில் லாஜிக் மதகு உடைகிறது.

நோட்டா - சினிமா விமர்சனம்ஊழல் வழக்கில் சிக்கிப் பதவியிழக்கும் நாசர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது சட்ட சபையில் எப்படி இருக்கிறார், மாடல் அழகி கொலையில் தேடப்படும் விஜய் தேவரகொண்டா நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஜெயித்தவுடன் சுதந்திரமாக வெளியே வருவது எப்படி என்று ஏகப்பட்ட கேள்விகள்.

ஒரே ஒருநபர் சைக்கிளில் சுற்றியே வெளிநாட்டில் உள்ள கறுப்புப்பணத்தையெல்லாம் மீட்க முடியும் என்றால், தயவு செய்து அவரை அனுப்பிக் கறுப்புப் பணத்தை மீட்டு, விகடன் விமர்சனக் குழுவில் உள்ளவர்கள் அக்கவுன்ட்டில் 15 லட்சத்தைப் போட ஆவன செய்யவும்.

எதற்கு ‘நோட்டா’ என்று தலைப்பு வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நோட்டாவிடமும் தோற்கும் தமிழகத் தாமரை போல, பலவீனமாக இருக்கிறது படத்தின் லாஜிக்கும் திரைக்கதையும்.

- விகடன் விமர்சனக் குழு