Published:Updated:

ராட்சசன் - சினிமா விமர்சனம்

ராட்சசன் - சினிமா விமர்சனம்

அமலா பால் ஹை ஸ்பீடில் ஓடும் த்ரில்லர் திரைக்கதைக்கு ஸ்பீடு பிரேக்கர். முனீஸ்காந்த்துக்கு இந்தப் படத்தில் `குணச்சித்திர’ புரொமோஷன்.

ராட்சசன் - சினிமா விமர்சனம்

அமலா பால் ஹை ஸ்பீடில் ஓடும் த்ரில்லர் திரைக்கதைக்கு ஸ்பீடு பிரேக்கர். முனீஸ்காந்த்துக்கு இந்தப் படத்தில் `குணச்சித்திர’ புரொமோஷன்.

Published:Updated:
ராட்சசன் - சினிமா விமர்சனம்

ள்ளி மாணவிகளைக் கொடூரமாகக் கொலை செய்யும் சீரியல் கில்லர்... அவனை வேட்டையாடிப் பிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி. இருவருக்குள்ளும் நிகழும் த்ரில் ஆட்டமே ‘ராட்சசன்!’

ராட்சசன் - சினிமா விமர்சனம்

`முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமார், தன் முதல் படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான படத்தைக் கொடுத்திருக்கிறார்.

விஷ்ணு விஷால் உலகின் அனைத்து மூலைகளிலும் நிகழ்ந்த சைக்கோ சீரியல் கில்லர்களைப் பற்றித் தேடிப் படித்து, முதல் படத்திற்கான கதை ஒன்றை எழுதி, தயாரிப்பாளரைத் தேடி அலைபவர். சூழல் காரணமாகத் தன்  கனவை ஒதுக்கி வைத்துவிட்டு சப்-இன்ஸ்பெக்டராகிறார். இவர் பொறுப்பேற்றதும் சென்னைக்குள் பள்ளி மாணவிகளை மட்டுமே குறிவைத்து அரங்கேறும் மிகக் கொடூரக் கொலைகளைப் பற்றி விசாரிக்கத் தொடங்குகிறார். சினிமாவுக்காகத் தான் சேகரித்த தகவல்களும் அவர் விசாரணைக்கு உதவி செய்ய... திக் திக் நிமிடங்களோடு கொலையாளியை நெருங்குகிறார். யார் அந்தக் கொலையாளி, அவரால் கொலையாளியைப் பிடிக்க முடிந்ததா என்பதே ஜிலீர் க்ளைமாக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராட்சசன் - சினிமா விமர்சனம்

போலீஸ் ட்ரெயினிங் முடித்த கையோடு நடிக்க வந்ததைப்போல சப்- இன்ஸ்பெக்டர்  ரோலில் விஷ்ணு விஷால் செம ஃபிட்!  திரையில் அவர் கொலையாளியைத் தேடி பைத்தியம் பிடித்ததைப்போல கண்கள் சிவக்க அலையும்போது நமக்கும் அந்தப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது.

ராட்சசன் - சினிமா விமர்சனம்அமலா பால் ஹை ஸ்பீடில் ஓடும் த்ரில்லர் திரைக்கதைக்கு ஸ்பீடு பிரேக்கர். முனீஸ்காந்த்துக்கு இந்தப் படத்தில் `குணச்சித்திர’ புரொமோஷன். மகளைப் பார்த்துக் கதறும் இடத்தில் நெகிழ வைக்கிறார். `மைனா’ சூசன், ஹீரோ விஷ்ணு விஷாலை எமோஷனலாக டார்ச்சர் செய்யும் சீனியர் அதிகாரியாக, கண்களாலேயே நடித்திருக்கிறார். காளி வெங்கட் அதிகம் பேசாமலே படத்தின் ஓட்டத்தில் வருகிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசையில் பீதியடைய வைக்கிறார் ஜிப்ரான். ஆர்ட் டைரக்டர் கோபி ஆனந்தின் மெனக்கெடல் சைக்கோ கொலைகாரனின் ‘மேஸ்’ வீடு டிசைனிலும் மார்ச்சுவரி டிசைனிலும் தெரிகிறது. எடிட்டர் ஷான் லோகேஷ்- ஒளிப்பதிவாளர் பி.வி ஷங்கர் பிரமாண்டமாய் உழைத்திருக்கிறார்கள்.

விறுவிறுவெனப் போகும் முதல் பாதித் திரைக்கதை இரண்டாம் பாதியில் அதிகம் ‘யூ-டர்ன்’ போட்டு நீ...ண்...டு கொண்டே செல்கிறது.  சிட்டி போலீஸே வலைவீசித் தேடினாலும் அகப்படாமல் ஒருவன் கொலைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதும் எல்லா இடத்திலும் டக்கெனத் தோன்றுவதும் குறைபாடுள்ள ஒருத்தன், திடீரென புரூஸ்லிக்கே சவால் விடும் ஸ்டெப்பெல்லாம் போட்டு ஃபைட் செய்வதும் நம்பவே முடியாதவை. 

முடிச்சு அவிழும் இடத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், நிஜமாகவே பயமுறுத்தி அனுப்புகிறான் இந்த ராட்சசன்.

- விகடன் விமர்சனக் குழு