தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நாற்பதாவது மாடியில் கிரேனில் நின்று... - விஜயஸ்ரீ

நாற்பதாவது மாடியில் கிரேனில் நின்று... - விஜயஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
நாற்பதாவது மாடியில் கிரேனில் நின்று... - விஜயஸ்ரீ

கேமரா கண்கள்ஆனந்த்

“ ‘கண்ணால் பேசவா’ படம் முடிச்ச நேரம், தெலுங்கு மற்றும் இந்திப் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதன் பிறகு தமிழ்ல வொர்க் பண்ற சூழல் அமையலை. எனக்கும் தமிழ் சினிமாவுக்குமான இடைவெளி சீக்கிரமே விலகும்னு நினைக்கிறேன்” - கேமராவில் ஆங்கிள் பார்க்கும் விஜயஸ்ரீயின் விழிகள், நம்மிடம் சிநேகமாகப் புன்னகைக்கின்றன.

“என் பூர்வீகம் திருப்பதி. சின்ன வயசுல வாலிபால் ஸ்டேட் லெவல் பிளேயர். பிடிஎஸ் கோர்ஸ் படிக்கும் வாய்ப்பு கிடைச்சும் அதில் விருப்பமில்லை. வித்தியாசமான துறையா இருக்கும்னு அப்பா சொல்ல, போட்டோகிராபி கோர்ஸை டிக் செய்தேன். சென்னை வந்து, ரெண்டு வருஷத்துல நிறைய ஸ்டுடியோக்கள்ல போட்டோகிராபி பத்தின எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டேன். இந்தத் துறை ஒவ்வொரு நாளும் புது அனுபவத்தைக் கொடுத்துச்சு. அதனால கேமராதான் என் எதிர்காலம்னு முடிவு பண்ணினேன். அப்புறம் தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சினிமாட்டோகிராபி கோர்ஸும், கரஸ்ல எம்.ஏ-வும் முடிச்சேன்.

நாற்பதாவது மாடியில் கிரேனில் நின்று... - விஜயஸ்ரீ

படிப்பு முடிஞ்சதும், தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் அசோக்குமார் சார்கிட்ட நாலு வருஷங்கள் அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணினேன். சீக்கிரமே கேமரா ஆபரேட்டராகி, அசோக் சாரின் செகண்டு யூனிட் கேமரா வுமனாக வொர்க் பண்ணினேன். பிறகு, ராஜீவ் மேனன், விபின்தாஸ் ஆகியோர்கிட்டயும் அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணினேன். அப்படி ‘ஐ லவ் இந்தியா’, ‘ரகசிய போலீஸ்’, ‘மலபார் போலீஸ்’, ‘ஜீன்ஸ்’ உள்ளிட்ட 15-க்கும் அதிகமான படங்கள்ல வேலை பார்த்திருக்கேன்” என்கிற விஜயஸ்ரீ, ‘வேலை’, ‘சுயம்வரம்’, ‘கண்ணால் பேசவா’ உள்ளிட்ட நான்கு தமிழ்ப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி யிருக்கிறார்.

நாற்பதாவது மாடியில் கிரேனில் நின்று... - விஜயஸ்ரீ“இந்திப் படங்கள்ல வேலைபார்த்த காலங்களில் நிறைய மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்தன. ‘Divorce: Not Between Husband and Wife’ - இந்திப் படத்தின் ஷூட்டிங், மும்பையில உயரமான ஒரு கட்டடத்துல நடந்துச்சு. அந்தக் கட்டடத்தின் 40-வது ஃப்ளோரில் இருந்து க்ரேன் மூலமா ஷூட் பண்ற ரொம்ப ரிஸ்க்கான சீன்களையெல்லாம் எடுத்து முடிச்சுட்டு கீழே இறங்கினேன். உடனே, ‘உங்க திறமையைப் பார்த்து வியந்துட்டேன். ஒரு கேமரா வுமனா உங்களைப் பார்த்துப் பெருமைப்படறேன்’னு சொன்ன அந்தப் படத்தின் ஹீரோ ஜாக்கி ஷெராஃப் சார், சட்டுனு என் காலில் விழுந்து என்னைப் பாராட்டினார். என் பொறுப்பு உணர்ச்சியை இன்னும் அதிகப்படுத்திக்கிட்ட தருணம் அது’’ என்பவர் தமிழ், தெலுங்கு, இந்தி, உருது, ஜாப்பனீஸ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 25 படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

நாற்பதாவது மாடியில் கிரேனில் நின்று... - விஜயஸ்ரீ

“என் அனுபவத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ரேகா (இந்தி) ரெண்டு பேரும் கேமராவுக்கு ஸ்பெஷலானவங்க; மேக்கப் போட்டாலும் போடாவிட்டாலும், எல்லா காஸ்ட்யூமுக்கும் செட் ஆகிற போட்டோஜெனிக் முக அமைப்பு கொண்டவங்க. ‘ஜீன்ஸ்’ படத்துல வேலை பார்த்தப்போ ஐஸ்வர்யா ராயுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைச்சது. ‘மேக்கப், காஸ்ட்யூம் எல்லாமே  `ஓகே’தானே? இதுதான் என் முதல் தமிழ்ப் படம். என்னை அழகா காட்டுங்க’னு எங்கிட்ட சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. ஏதாச்சும் கரெக்‌ஷன்ஸ் சொன்னா, அதை உடனே சரிசெஞ்சுக்குவாங்க. இப்படி ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டையும் காட்சியமைப்பையும் வித்தியாசமா காட்டணும்; அதன் மூலமா ஒளிப்பதிவாளரோட திறமையும் வெளிவரணும். இது ரொம்பவே இன்ட்ரஸ்ட்டிங் ஜாப்’’ என்கிற விஜயஸ்ரீயின் கணவர் சிவராமகிருஷ்ணா, தெலுங்குப் படவுலகில் இயக்குநர்.

“இப்போ ஹைதராபாத்துல வசிச்சாலும், அதிகம் பேசுவது தமிழ் நண்பர்களிடம்தான். மறுபடியும் தமிழுக்கு வரணும்னு ஆசை இருக்கு” - சொல்லும்போதே அந்த எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கின்றன விஜயஸ்ரீயின் கண்கள்!

- ஆனந்த்

நாற்பதாவது மாடியில் கிரேனில் நின்று... - விஜயஸ்ரீ

த்ரில் தருணமும்.... ஹிட் மகிழ்ச்சியும்!

“என் சினிமா வாழ்வில் மறக்க முடியாத படம், ‘ஏக் சாலிஸ் கி லாஸ்ட் லோக்கல்’ (Ek Chalis Ki Last Local) இந்திப் படம், இரவில் இயங்குகிற ரயிலை மையப்படுத்திய கதைக்களம். மும்பையில ஷூட்டிங். விடியற்காலை 1:40 மணிக்கு வரும் கடைசி லோக்கல் டிரெயினை மையப்படுத்திதான் ஷூட் பண்ணினோம். தினமும் நைட்டு 10 மணிக்கு மேலதான் போலீஸ் பர்மிஷன் கிடைக்கும். காலையில நாலு மணிக்கெல்லாம் ஷூட்டிங் முடிச்சுடணும். ரயில் நிலையத்தைச் சுற்றிப் பெரிய பெரிய சாலைகளையும் கவர் பண்ணணும். ஒவ்வொரு நாளும், லைட்டிங் ஏற்பாடுகளுக்கே பல மணி நேரம் செலவாகும். இதுக்கெல்லாம் நடுவுல, ஒருநாள் ஷூட்டிங் பார்க்க வந்த கூட்டத்தில் ஒருவரை எங்க டீம் நபர் ஒருத்தர், ‘கொஞ்சம் தள்ளி நின்னு பாருங்க’னு சொன்னார். அதைக் கேட்டு சென்சிட்டிவான அந்த மக்களுக்குக் கோபம் வந்துடுச்சு. ஒட்டுமொத்தப் படக்குழுவினரையும் மக்கள் சரமாரியா கற்களால் தாக்கி விரட்ட, பெரிய கலவரமாகிடுச்சு. கஷ்டப்பட்டு செட் பண்ணின லைட்டிங்கையெல்லாம் உடைச்சு, ரயிலையும் சேதப்படுத்தி... நாங்க தப்பிச்சு வர்றதே பெரும்பாடாகிடுச்சு. ஆனா, அந்தப் படம் பெரிய ஹிட்டாகி
படக்குழுவினருக்கும் எனக்கும் நிறையப் பாராட்டுகள் கிடைச்சுது. அதனால, அந்த ரணகள அனுபவங்கள் எல்லாம் அழகிய நினைவுகளாகிடுச்சு” என்று புன்னகைக்கிறார் விஜயஸ்ரீ.