Published:Updated:

ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி - “யோகிபாபுக்கு தலைமுடி, எனக்குத் தாடி!”

ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி - “யோகிபாபுக்கு தலைமுடி, எனக்குத் தாடி!”
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி - “யோகிபாபுக்கு தலைமுடி, எனக்குத் தாடி!”

ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி - “யோகிபாபுக்கு தலைமுடி, எனக்குத் தாடி!”

ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி - “யோகிபாபுக்கு தலைமுடி, எனக்குத் தாடி!”

ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி - “யோகிபாபுக்கு தலைமுடி, எனக்குத் தாடி!”

Published:Updated:
ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி - “யோகிபாபுக்கு தலைமுடி, எனக்குத் தாடி!”
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி - “யோகிபாபுக்கு தலைமுடி, எனக்குத் தாடி!”

"லவ் யூ...’ மாதிரியான வழக்கமான ப்ரபோசல் எதையும் பகிர்ந்துக் கலை. நேரடியா கல்யாணப் பேச்சுதான். வீட்லயும் பெரிய எதிர்ப்பில்லை. சீக்கிரம் கெட்டிமேளம் கொட்டியாச்சு!" - காதல் டு கல்யாண சுவாரஸ்யம் சொல்கிறார் நவலக்ஷ்மி. அவர் சொல்வதை ஆர்வமாகக் கேட்கிறார் ரமேஷ் திலக். இருவருமே சூரியன் எஃப்.எம்-இல் ஆர்.ஜேவாக இருந்து காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். ரமேஷ், இன்று பரபரப்பான நகைச்சுவை நடிகர். நவலக்ஷ்மி, ஆர்.ஜே பிளஸ் கோரியோகிராபர்.

"எஃப்.எம்ல இவங்களைவிட நான் சீனியர். அந்த சீனியாரிட்டியை மனசுல வெச்சிட்டு இவங்க வேலையைக் குறை சொல்றது, புரொடியூசர்ட்ட போட்டுக்கொடுக்கிறதுனு பல வேலைகள் பார்த்திருக்கேன்!" ரமேஷின் வார்த்தைகளை, "ஆமாங்க, இவரோட லுக்கே திமிராத்தான் இருக்கும்!" என்று ஆமோதிக்கிறார் நவலக்ஷ்மி. "என் மூஞ்சியே அப்படித்தாங்க!" என்று கலகலவென கவுன்டர் கொடுக்கிறார் ரமேஷ்.

"ஹனிமூனுக்கு பாரீஸ் கூட்டிப் போறேன்னு சொல்லியிருந்தார். ஆனா, இதுவரை தனி மூன்தான்!" நவா கலாய்க்க, "டோன்ட் ஃபீல் நவா. சீக்கிரமே போலாம். நீ ஆபீஸ்ல லீவ் சொல்லிடு" என்கிறார் ரமேஷ். "இவர்
ஆர்.ஜேவா இருந்து சினிமாவுக்கு வரும்போது, எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ஏன்னா எங்களோடது சினிமா பின்னணி ஃபேமிலி. ஆனா, இவர் எந்தப் பின்னணியும் இல்லாம, போராடி இந்தளவுக்கு வளர்ந்திருக்கார்" பேசும்போதே நவலக்ஷ்மியின் கண்கள் கலங்குகின்றன. ஆம், நவலக்ஷ்மி, பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகள்.

ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி - “யோகிபாபுக்கு தலைமுடி, எனக்குத் தாடி!”

இருவரும் பிரபல இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் படங்களில் பணிபுரிந்துள்ளனர். அந்த அனுபவம் கேட்டோம். "கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்லயே அவரோட `மன்மர்ஸியான்' படத்துக்கு கோரியோகிராப் பண்ண என் தங்கச்சியும் நானும் பஞ்சாப் கிளம்பிட்டோம். அவருக்கு எங்க அப்பாவை நல்லா தெரிஞ்சிருக்கு. `உங்க அப்பா பாலிவுட்ல எவ்ளோ பெரிய ஆள்னு தெரியுமா?'னு சொல்லி, எங்களை அபிஷேக் பச்சன் சாருக்கும் டாப்ஸிக்கும் அறிமுகப்படுத்திவெச்சார். ரமேஷ் இப்ப அவர்கூட, ‘இமைக்கா நொடிகள்’ படத்துல நடிச்சார். அனுராக் சென்னை வந்தார்னா, ‘இங்க நல்ல இட்லி சாம்பார் எங்க கிடைக்கும்’னு கேட்டு, தேடிப்போய் சாப்பிட்டுட்டு வருவார். இளம் திறமையாளர்களைத் தன் படத்துல பயன்படுத்திக்கிறதுல ஆர்வமா இருப்பார். ரியலி கிரேட் பெர்சன்!" என நவலக்ஷ்மி சொல்ல, அதை ஆமோதிக்கிறார், ரமேஷ் திலக்.

“தாடிதான் ரமேஷின் அடையாளம். அவரை தாடியோட பிடிக்குமா, தாடி இல்லாமப் பிடிக்குமா?” என்றதும், "எனக்கு அவரோட தாடிதான் ரொம்பப் பிடிக்கும்” என்கிற நவா, “அவர் ஷேவ் பண்ணுனா முதல்ல சண்டை போடுறது நான்தான்” என்கிறார். "நானும் தாடி இல்லாம ஒரு படத்துல நடிச்சிடணும்னு நினைப்பேன். ஆனா, ஒரே நேரத்துல ரெண்டு மூணு படங்கள்ல நடிக்கும்போது, ‘நம்ம படத்துக்கு தாடி கட்டாயம்ங்க’னு யாராவது ஒரு டைரக்டர் சொல்லிடுறார். அதனால, தாடியோடவே திரிஞ்சிட்டிருக்கேன். கல்யாணத்துக்கு முன் ஒருமுறை கிளீன் ஷேவ் பண்ணிட்டேன். அப்ப, என்னை சுத்தி இருந்தவங்களோட ரியாக்‌ஷனே என்னைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிடுச்சு. அதனால, கல்யாணத்துக்குக்கூட நான் ஷேவ் பண்ணலை. நான் ஷேவ் பண்ணினா இவளும் டென்ஷன் ஆகிடுவா. யோகி பாபுவுக்கு எப்படி முடியோ, அதுமாதிரி எனக்கு தாடி!" ரமேஷின் பதிலைக் கேட்டு நவலக்ஷ்மி சிரிக்கிறார்.

ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி - “யோகிபாபுக்கு தலைமுடி, எனக்குத் தாடி!”

“இவர் நடிச்சதுல உங்களுக்குப் பிடிச்ச படம் எது?” இந்தக் கேள்வி நவலக்ஷ்மிக்கு. “'சூது கவ்வும்', 'ஆரஞ்சு மிட்டாய்'. இந்தப் படங்கள் என் மனசுக்கு நெருக்கமானவை. 'ஒரு நாள் கூத்து' படத்துல பெட்ரூம் சீன் வரும்போது, நான் பக்கத்துல இருந்ததனால, தியேட்டர்ல இருந்து எழுந்து போயிட்டார். அந்த சீன் முடிஞ்ச பிறகுதான் வந்தார்" என்ற நவலக்ஷ்மியிடம், ''சரி சரி சரி... ரூட்டை மாத்து" என ஸ்டீயரிங்கை வேறுபக்கம் திருப்புகிறார் ரமேஷ் திலக்.

“அவரைவிட நான் ஆறு வயசு சின்னப்பொண்ணு. எனக்குக் கோபம் அதிகமா வரும். அதை அனுசரிச்சுப் போறது ரமேஷோட ஸ்பெஷல். அந்தவகையில, நான் ரொம்ப லக்கி. என் போன்லகூட இவர் பெயரை 'லக்'னுதான் சேவ் பண்ணி வெச்சிருக்கேன். ஏன்னா, ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி ரெண்டுபேரோட பெயரிலும் லக் இருக்கு எப்படி" என நவலக்ஷ்மி சிரிக்க, ரமேஷ் திலக் கண்களிலும் காதல் நிரம்பி வழிகிறது.

"அப்பா இறந்த பிறகு, ‘நமக்கு இனி தீபாவளியே இல்லை’ங்கிற மைண்டுசெட்தான் இருந்தது. அதனால, கடந்த ஒன்பது வருஷமா பட்டாசு வெடிக்கலை. ஆனா, இப்ப என் தலை தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கப்போறேன். இப்போதான், என் புருஷன் இருக்காரே...!" என நெகிழும் நவாவை ரமேஷ் கட்டி அணைத்துக்கொள்கிறார்.

ரமேஷ் திலக் தன் காலில் மெட்டி அணிந்திருப்பதை எதேச்சையாகத்தான் கவனித்தோம். "ஆமாங்க... 'கல்யாணம் ஆயிடுச்சு'ங்கிறதுக்கான அடையாளம் மெட்டி. அது ஆண்களுக்கும்தான். அதைக் கழட்ட மனசு வரலை. அது என் கால்ல இருந்தா, நவாவுக்கு ஹேப்பி. நவாவுக்கு ஹேப்பின்னா, எனக்கும் ஹேப்பிதானே?!" ரமேஷ் திலக் பேசப்பேச... பின்னணியில் இளையராஜாவின் இசை மெலிதாக வழிய... அந்தச் சூழலே அன்பு மயமாகக் காட்சியளித்தது.

- உ.சுதர்சன் காந்தி, படங்கள்: ப.சரவணகுமார்