``என் மனைவி பேர் ருத்ரா. அவங்களைப் பாசமா கருவாச்சினுதான் கூப்பிடுவேன். நான் நடிக்கிறதைவிட ரொம்ப அழகா அவங்களும் நடிப்பாங்க. குழந்தைகளைப் பார்த்துக்கணும்னு நடிப்பை விட்டு விலகியிருக்காங்க!'' - மனைவிக்கு முதல் மரியாதை கொடுத்துப் பேசத் தொடங்குகிறார், `ஜோக்கர்' ஹீரோ குருசோமசுந்தரம்.

``காதல் திருமணம் செய்துகிட்ட ஜோடி நாங்க. திருமணம் முடிஞ்சு பல வருடங்கள் ஆகிடுச்சு. ஆனா, இன்னும் எங்களுக்குள்ள இருக்கிற காதலும் நட்பும் கொஞ்சமும் குறையவே இல்லை. அதுக்குக் காரணம், எங்களுக்குள்ள எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாததுதான்.

பரபரப்பான லைஃப் ஸ்டைல் வாழ்க்கையில் எனக்கு உடன்பாடில்லை. கிராமத்திலிருந்து நடிக்க வந்தவர்கள்கூட, சினிமாவில் வாய்ப்பு கிடைச்சா, சென்னையில் செட்டில் ஆயிடுவாங்க. ஆனா, எனக்கு எப்போவுமே இயற்கை சார்ந்த சூழலில் வாழ்வதுதான் பிடிக்கும். என்னைப்போல ஒத்த சிந்தனை கொண்டவள் என் மனைவி ருத்ரா. இயற்கையை நேசிப்பவர். அதனால், திருவண்ணாமலையில் எங்களுக்கான வீட்டைத் தேர்ந்தெடுத்தோம். வாடகை ரெண்டாயிரம் ரூபாய்.

திருவண்ணாமலையில் எங்கள் இல்லம் அமைய உதவி செய்தவர் `ஜோக்கர்' படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த எழுத்தாளர் பவா செல்லதுரை. அவரும் இயற்கை விரும்பி'' என்று குருசோமசுந்தரம் சொல்லி முடிக்க, அவர் மனைவி தொடர்கிறார்.

``திருவண்ணாமலையில் குடியேற முக்கியமான ஒரு காரணமும் இருக்கு. அது எங்கள் குழந்தையின் கல்விதான். என்னோட முதல் குழந்தை படிக்கும் பள்ளியில் பரீட்சை, மார்க்... இப்படி எந்தவொரு விஷயமும் இல்லை. அவர்கள் அவர்களாகவே வளரலாம். விளம்பரம் தேடிக்கொள்ள விருப்பமில்லாத பள்ளி. அதனால், பள்ளியின் பெயரை என்னால் சொல்ல முடியாது'' என அடக்கமாக ருத்ரா சொல்லி முடிக்க, குருசோமசுந்தரம் தொடர்கிறார்.

``மதுரைதான் என் சொந்த ஊர். சினிமாமேல இருந்த ஆசையால சென்னைக்கு வந்து, கூத்துப்பட்டறையில் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அதுவரைக்கும் வாழ்க்கையில காதலைக் கடந்ததில்லை. பாண்டிச்சேரிக்கு நாடகம் போடுவதற்காகக் கூத்துப்பட்டறையில் இருந்த எல்லோரும் போயிருந்தோம். அங்கே `களம்' நாடகக்குழு சார்பா மேடம் நடிக்க வந்திருந்தாங்க. `நிலவு மாமா குண்டு குண்டுதான்'னு ஏதோ பாட்டுப் பாடி நடிச்சாங்க. இவங்க நடிக்கிறதைப் பார்த்துட்டுக் காதலில் விழுந்துட்டேன்.

`ஹாய்' சொல்லித்தான் எங்க பேச்சு தொடங்குச்சு. இவங்க பதிலுக்கு `ஹாய்' சொன்னாங்க. அவ்வளவுதான் பேசினோம். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, நான் சென்னைக்கு வந்துட்டேன். கொஞ்சநாள் கழிச்சுப் பார்த்தா, இவங்க எங்க கூத்துப்பட்டறையில் சேர்ந்திருந்தாங்க. நாங்க பார்த்ததும் ரெண்டு பேரும் நலம் விசாரிச்சுக்கிட்டோம்!'' என குருசோமசுந்தரம் இடைவெளிவிட, ருத்ரா தொடர்கிறார்.

``ரெண்டுபேரும் நிறைய நேரம் ஒன்றாகச் செலவிடுவோம்; நிறைய பேசினோம்; நிறைகுறைகளைப் பகிர்ந்துகிட்டோம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு, லிவிங் டு கெதர் உறவுமுறையில சில நாள்கள் வாழ்ந்தோம்'' என்றார் ருத்ரா.

``எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தது. ஆனா, இந்தநாள் வரைக்கும் `ஐ லவ் யூ' சொல்லிக்கிட்டதே கிடையாது. கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி, மாயாஜால் பக்கத்துல இருக்கிற வெள்ளை கோயிலில் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க கல்யாணத்தைப் பத்தி வீட்டுல இருந்தவங்ககிட்ட சொல்லலை. ஆனா, ருத்ரா வீட்டுக்குத் தெரியும். அவங்க எல்லோரும் வந்திருந்தாங்க. கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல பாண்டிச்சேரி போயிட்டோம். அங்கே இருக்கும்போது, எங்களோட முதல் குழந்தை வர்த்தினி பிறந்தாள். பாப்பா பிறந்து இரண்டு வருஷம் இருக்கும்போதுதான், எங்க வீட்டுல கல்யாணம் பண்ணுன விஷயத்தையே சொன்னேன்.

நான், பாப்பா, ருத்ரா சேர்ந்திருக்கிற போட்டோவை மதுரையில இருந்த அண்ணன்கிட்ட காட்டினேன். ‘யாருடா இவங்க’னு ஆச்சர்யமா கேட்டார். விஷயத்தைச் சொன்னேன். பிறகு, `பாப்பாவுக்கு முதல் மொட்டை குலசாமி கோவில்ல போடணும். கூட்டிக்கிட்டு வா'னு சொன்னார்'' என்று குருசோமசுந்தரம் நெகிழ்ந்து சிரிததார்.

``இவங்க வீட்ல முதல் மொட்டை போடுற பழக்கம் மட்டும் இல்லைனா, என்னைப் பற்றி வீட்டுல பேச்சே எடுத்திருக்கமாட்டார். நான் இவரை முழுசா நம்புனேன். அதனால, எதுக்குமே பயப்படலை. அதுக்குப் பிறகு இவங்க வீட்டுலேயும் என்னை ஏத்துக்கிட்டாங்க. ஒவ்வொரு வருஷமும் சம்மர் லீவுக்கு மதுரைக்குப் போயிடுவோம்.

படம் பார்த்துட்டு எப்படி நடிச்சிருக்கார்னு விமர்சனம்கூடச் சொல்வேன். அதை அவர் ஏத்துக்குவார். ஆனா, அவர் நடிக்கப்போற படங்களின் கதை பற்றியெல்லாம் என்கிட்ட சொல்லமாட்டார்; நானும் கேட்டுக்கமாட்டேன். ஆனா, வீட்டுல நிறைய ஹோம்வொர்க் பண்ணிப் பார்ப்பார். `ஜோக்கர்' படத்துல நடிச்ச சமயத்துல வீட்டுக்குத் தேவையான மளிகைப்பொருள்கள் ஏதாவது வாங்கிட்டு வரச் சொன்னாலும், படத்துல வர மன்னர் மன்னன் கேரக்டர் பேசுற மாதிரியே பேசிட்டு வாங்கிக் கொடுப்பார். கண்ணாடி முன்னாடி நின்னு ஏதாவது பேசிக்கிட்டே இருப்பார்.

இவர் நடிச்ச படங்களில் `ஜோக்கர்' படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்தோட ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கும்போதுதான், எங்களுக்கு ரெண்டாவது குழந்தை பிறந்தது. பையன். டெலிவரி தேதி நெருங்கிக்கிட்டே இருந்தது. இவர் ஷூட்டிங் தேதியைத் தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்தார். பையன் பிறக்கும்போது என்னோட பக்கத்துல இருக்கணும்னு நினைச்சார். பையன் பிறந்த அடுத்தநாள்தான், `ஜோக்கர்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனார்'' என்ற ருத்ராவை இடைமறித்தார்.

``ருத்ரா ரொம்ப அறிவாளி. நிறைய புத்தங்கள் படிப்பாங்க. பையன் வயித்துல இருக்கும்போது `பொன்னியின் செல்வன்', `பார்த்திபன் கனவு', `சிவகாமியின் சபதம்' - இந்த மூணு புத்தங்களையும் படிச்சு முடிச்சுட்டுதான் டெலிவரிக்கே போனாங்க. அதனால, பையனுக்குப் `பார்த்திபன்'னு பேர் வெச்சுட்டேன்.

குழந்தைக்கு அஞ்சு மாசம் ஆகியிருக்கும்போது, குடும்பத்தோட`ஜோக்கர்' படத்தைப் பார்க்க தியேட்டருக்குப் போனோம். என் பொண்ணுக்கு என்னை யாராவது திட்டுனாலோ, அடிச்சாலோ பிடிக்காது. படத்தைப் பார்த்துட்டு தியேட்டரில் கத்த ஆரம்பிச்சிட்டா. `யாருப்பா இவன்... உங்களை எதுக்கு அடிக்கிறான்?'னு கூச்சல்போட ஆரம்பிச்சிட்டா. சமாதானப்படுத்தி வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வர்றதுக்குள்ள படாதபாடு ஆயிடுச்சு.

இப்படித்தான், எங்க குடும்பம் அழகானது. மகள், மகனுடன் வாழ்க்கையை சந்தோஷமா வாழுறோம். ``என் பொண்ணுக்கு நான் நடிக்கிறது பிடிக்கலை. அதனாலதான் நடிப்பு வேண்டாம்னு முடிவு பண்ணினேன். அதுக்காக நான் வருத்தப்பட்டது கிடையாது. எனக்காகவும் சேர்த்து அவர் நடிக்கிறார். அதுபோதும் எனக்கு!'' என ருத்ரா சொல்ல, மனைவியின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறார், குருசோமசுந்தரம். அன்பால் நிறைந்த வீட்டைப் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது.

- சனா, படம்: ச.மஹாவீர்