Published:Updated:

நான் ஓர் எழுத்தாளர்! - மேகா ஆகாஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நான் ஓர் எழுத்தாளர்! - மேகா ஆகாஷ்
நான் ஓர் எழுத்தாளர்! - மேகா ஆகாஷ்

நட்சத்திரம்

பிரீமியம் ஸ்டோரி

 `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார் மேகா ஆகாஷ். “அம்மா மலையாளம்... அப்பா தெலுங்கு... ஆனா, வீட்ல தமிழ் பேசுவோம்” - பயோடேட்டாவுடன் பேச ஆரம்பிக்கிறார், ஸ்வீட் சென்னைப் பொண்ணு!

நான் ஓர் எழுத்தாளர்! - மேகா ஆகாஷ்

உங்க வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவைன்ட் பண்றீங்களா?

லேடி ஆண்டாள் ஸ்கூல்; WCC காலேஜ்; ரொம்ப அமைதியான குழந்தை நான். எந்த விஷயத்துக்கும் அதிகமா ரியாக்ட் பண்ண மாட்டேன். படிக்கிற பழக்கம் அதிகம். உணர்வுகளை எழுத்தில் பதிவுசெய்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எழுத்து என் ஸ்ட்ரெஸ் பஸ்டரும்கூட.

ஸ்கூல் படிக்கும்போதே  நடிக்க ஆசை வந்துடுச்சு. அம்மா அப்பா ரெண்டு பேருமே விளம்பரத்துறையில வேலை பார்க்கிறவங்க. அதனால அவங்க மூலமா விளம்பரங்கள்ல நடிச்சேன். அடுத்தது சினிமாதானே?

நடிப்புக்காக உங்களை மாத்திக்கிட்டீங்களா?

நடிக்க வர்றதுக்கு முன்னாடி குண்டா இருந்தேன். எடையைக் குறைக்கச் சொல்லி நிறைய அறிவுரைகள்; டயட் இருந்து உடம்பைக் குறைத்தேன்.

என் எழுத்து ஆர்வத்தைப் பார்த்து, நான் எழுத்தாளர்தான் ஆவேன்னு வீட்டுல நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா, என் அம்மா மூலமா எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்துகிட்டே இருந்துச்சு. ஆரம்பத்துல அதையெல்லாம் ஏத்துக்கலை. சினிமாவுக்காக இன்னும் தயாராகணும்னு தோணுச்சு. அதற்குப் பிறகுதான் பாலாஜி தரணீதரன் சார் இயக்கத்துல ‘ஒரு பக்கக் கதை’ படத்துல நடிச்சேன். சில காரணங்களால படம் இன்னும் ரிலீஸாகலை. அடுத்து, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துல நடிச்சிருக்கேன். சிறப்பா நடிக்கிற நடிகைனு பெயர் வாங்குனா போதும்னு நினைக்கிறேன்.

குடும்பம் உங்களுக்கு எவ்வளவு உறுதுணை?

அம்மா பிந்து, அப்பா ஆகாஷ். ரெண்டு பேருமே எனக்கு ஃபுல் சப்போர்ட். ஒரே பொண்ணா எனக்கான சுதந்திரம் இருக்கு. அதேநேரம் அவசியமான கண்டிப்பும் இருக்கு. சின்ன வயசுல இருந்தே எனக்கு என்ன வேணும்கிறதுல தெளிவா இருப்பேன். அதிகமா பேசமாட்டேன்.  ஆனா, வீட்டுல உள்ளவங்ககிட்ட ஆலோசித்துதான் எதையும் முடிவெடுப்பேன்.

சினிமாவுக்கு வந்தபிறகுதான், எல்லோர் கிட்டேயும் பேச ஆரம்பிச்சேன். எங்க அம்மா, ‘நீ உயரமா வளரணும்னா, கூடைப் பந்து விளையாடு’ன்னு சொல்வாங்க. பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம், நீச்சல் எல்லாம் கத்துக்கிட்டேன். இயல்பாவே ஃபிட்னெஸ் ஆர்வமும் உண்டு.

யாருக்கு மேகா ஆகாஷ் ரொம்ப க்ளோஸ்?

அம்மாவுக்குத்தான். எங்கே போனாலும் ‘அம்மா என்கூட நீயும் கட்டாயம் வரணும்’னு ஆர்டர் போடுவேன். அவங்களால வரமுடியாதபட்சத்துல, அப்பாவைக் கூட்டிக்கிட்டுப் போவேன். அடுத்ததா, பாட்டி. அவங்கதான் என்னை வளர்த்தாங்க. இப்போகூட பாட்டி சமையலைத்தான் விரும்பிச் சாப்பிடுவேன். ஷூட்டிங்ல நான் மிஸ் பண்ற விஷயமும் அதுதான். ஞாயிற்றுக்கிழமையானால், குடும்பமே பாட்டி வீட்டுலதான் இருக்கும். பாட்டி, சித்தி, குழந்தைகள்னு எல்லாரோடும் சேர்ந்து ஒரே கொண்டாட்டம்தான்!

ஓய்வு நேரங்களில்..?

ஆங்கிலம், பிரெஞ்சு வெப் சீரீஸ் பார்ப்பேன். காடு, மலைனு சாகசப் பயணத்துக்கும் ஆசைப்படுவேன். பீச் போவேன். ஸ்கூபா டைவிங் பண்ணுவேன்.

இதுவரை ஒரு ஞாயிற்றுக்கிழமைகூட வீட்டுல இருந்ததில்லை. எல்லாப் படங்களையும் தியேட்டருக்குப் போய்ப் பார்த்திடுவேன். நைட் ரவுண்ட்ஸ் பிடிக்கும். அப்போ சூடா ரோட்டுல விற்கப்படுற டீக்கு இணை எதுவுமே இல்லை!

- சுஜிதா சென்,  படம் : க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு