தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

அந்த வாழ்த்து ரொம்ப சர்ப்ரைஸ் - கெளரி கிஷன்

அந்த வாழ்த்து ரொம்ப சர்ப்ரைஸ் - கெளரி கிஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
அந்த வாழ்த்து ரொம்ப சர்ப்ரைஸ் - கெளரி கிஷன்

வெல்கம் ஸ்டார்

த்ரிஷாவின் சாயல் இல்லை. த்ரிஷாவின் மேனரிசங்கள் இல்லை. ஆனாலும், கெளரியை த்ரிஷாவாக ஏற்றுக்கொள்வதில் படம் பார்த்த யாருக்கும் எந்த உறுத்தலும் இல்லை.

‘96’ படத்தில் த்ரிஷாவின் சின்ன வயது கேரக்டரில், சின்ன ஜானகிதேவியாக அசத்தியிருக்கும் கெளரிக்கு கோலிவுட்டின் கதவுகள் விரியத் திறந்திருக்கின்றன. ஆனாலும், எந்தப் பரபரப்பும் இல்லாமல் ஜானு மாதிரியே அமைதியின் அடையாளமாகப் பேசுகிறார் கெளரி.

‘` `96' பட ரிலீஸுக்குப் பிறகு லைஃப் ரொம்பவே மாறியிருக்கு. வாட்ஸ்அப் ஹேங் ஆகற அளவுக்கு வாழ்த்துகள் குவியுது. த்ரிஷா மேடம் ட்விட்டர்ல பாராட்டியிருந்தாங்க. விஜய் சேதுபதி சார், கைகொடுத்து ‘அருமையா நடிச்சிருந் தீங்க’னு பாராட்டினார். சின்மயி மேடம், சஞ்சிதா ஷெட்டினு நிறைய பேர் பாராட்டினாங்க. சந்தோஷமா இருக்கேன். அதேநேரம் டென்ஷனாகவும் இருக்கேன். எக்ஸாம்ஸ் போயிட்டிருக்கு. என் கவனமெல்லாம் இப்போ அதுலதான்...’’ - படிப்ஸ் பொண்ணு, பெங்களூரு க்ரைஸ்ட் காலேஜில் இரண்டாவது வருஷம் ஜர்னலிசம் ஸ்டூடண்ட்டாம்.

அந்த வாழ்த்து ரொம்ப சர்ப்ரைஸ் - கெளரி கிஷன்

‘`சின்ன வயசுலேருந்து ஜர்னலிசம்தான் லட்சியம்.  நான் வெறித்தனமா படங்கள் பார்ப்பேன்.  சினிமா பின்னணி இல்லாம அந்த ஃபீல்டுல ஜெயிக்கிறது கஷ்டம்னு தெரியும். அதனால நான் நடிப்பைப் பத்தி யெல்லாம் யோசிச்சதே இல்லை. அப்போ நான் ப்ளஸ் டூ படிச்சிட்டிருந்தேன். என் மாமா ஒருத்தர் துபாய்ல இருக்கார். அவரும் ‘96’ டைரக்டர் பிரேம் சாரும் காலேஜ்மேட்ஸ். பிரேம் சார், தன்னுடைய ஃபேஸ்புக்ல த்ரிஷாவோட லுக் அலைக்ல சின்ன வயசு கேரக்டர்ல நடிக்க ஆள் தேவைனு ஒரு போஸ்ட் போட்டிருந்தார். மாமாதான் எனக்கு அதைப் பத்திச் சொன்னார். என்கிட்ட த்ரிஷாவோட சாயலே இல்லையேனு யோசிச்சேன். ஆனாலும், என் குடும்பத்துல எல்லாரும் சப்போர்ட் பண்ணினாங்க. ஆடிஷன் போனேன். செலெக்ட் ஆயிட்டேன். அப்பகூட எனக்கு எல்லாமே கனவு மாதிரிதான் இருந்தது. படம் ரிலீஸாகி, இப்போ எல்லாரும் என் நடிப்பைப் பாராட்டறபோதுதான் எல்லாம் நிஜம்கிற நம்பிக்கை வந்திருக்கு.

பத்தாம்கிளாஸ் பொண்ணு எப்படி நடந்துப்பாளோ, அப்படித்தான் நான் நடிச்சேன். எங்க ரெண்டு பேருடைய சிரிப்பும் ஒரே மாதிரி இருந்ததா நிறைய பேர் சொன்னாங்க. ஐ யாம் ஹேப்பி...’’ - த்ரிஷா மாதிரியே சிரிக்கிற கெளரிக்கும் ஜானகிதேவிக்கும் தோற்றத்தில் இல்லாத அத்தனை ஒற்றுமையும் கேரக்டரில் இருப்பதுதான் ஆச்சர்யம்.

‘`ஜானகிதேவி ரொம்ப போல்டான பொண்ணு. நானும் அப்படித்தான். ஜானு மாதிரியே நானும் ரொம்ப லவ்விங் அண்டு கேரிங்.  ஜானு அளவுக்கு இல்லைனாலும் நானும் ஓரளவுக்குப் பாடுவேன்’’ - அடுக்குபவரிடம் அந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியுமா?

 `` ‘96’ மாதிரி பத்தாம்கிளாஸ் லவ்?''

‘`ஓ... அதுவா? படத்துல நடிச்சபோது எனக்கும் என் பள்ளிக்காலம் ஞாபகத் துக்கு வந்தது. எனக்கும் இன்ஃபாச்சுவேஷன் இருந்திருக்கு. ஆனா, ‘96’ பட ஜானு-ராம் அளவுக்கு அது சீரியஸான லவ்வெல்லாம் இல்லை. படம் பார்த்ததும் அந்த பர்சன்கிட்டருந்து வாழ்த்து வந்ததுதான் சர்ப்ரைஸ்’’ - இந்த முறை கெளரியாகச் சிரிக்கிறார்.

``அடுத்தென்ன?''

‘`ஜர்னலிஸம், சைக்காலஜி, இங்கிலீஷ்னு மூணும் சேர்ந்த ஒரு கோர்ஸ் பண்ணிட்டிருக்கேன். இலக்கியம் ரொம்பப் பிடிக்கும். டீன் ஏஜ்லேருந்தே என்னைச் சுற்றி நடக்கிற விஷயங்களையும் செய்திகளையும் கவனிக்கிற பழக்கம் உண்டு. பத்திரிகையாளர்களாலதான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்னு நம்பறேன்.  படிப்பை முடிச்சிட்டு ஒருவேளை நான் ஃபுல்டைம் ஜர்னலிஸ்ட்டானால், சமூக மாற்றத்துக்கான விஷயங்கள்தான் என் ஏரியாவா இருக்கும். சினிமாவில் எனக்குக் கிடைக்கிற பேரும் புகழும்கூட ஒரு ஜர்னலிஸ்ட்டா நான் சொல்ல நினைக்கிற விஷயங்களை ஈஸியா மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க உதவும்னு நம்பறேன்.

பெண்கள் பாதுகாப்புங்கிறது இன்னிக்குப் பெரிய பிரச்னையா இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை அதைத் தாண்டின இன்னொரு பிரச்னைக்கு உடனடித் தீர்வு தேவைனு நினைக்கிறேன். அது பசி. கோடிக்கணக்கான மக்கள்  பட்டினியில செத்துக்கிட் டிருக்காங்க. ஒருபக்கம் கன்னாபின்னானு உணவை வீணாக்கிற ஒரு கூட்டம்... இன்னொருபக்கம் உணவுக்குப் போராடற ஒரு கூட்டம். மனிதனுக்கு அடிப்படைத் தேவையான சாப்பாடு இல்லாத வாழ்க்கையைப் பார்க்கிறது மிகப்பெரிய அவலம். ஜர்னலிஸ்ட்டானதும் அந்தப் பிரச்னைக்காக வொர்க் பண்ணணும்னு நினைக்கிறேன்’’ - போராளியின் பொறுப்புடன் பேசுகிறவருக்கு வேறு பெருங்கனவுகள் இல்லை.

`‘96-னு ஒரு படம் என் வாழ்க்கையில இல்லைனா,  மாஸ்டர்ஸ் படிக்கிற திட்டத்தோடு மட்டும்தான் இருந்திருப்பேன். படம் பார்த்த மக்களுக்கு என்னையும் என் நடிப்பையும் பிடிச்சிருக்கு. என்கிட்ட நிறைய எதிர் பார்ப்புகள் இருக்கும்னு தெரியுது. ஆனா, இப்போதைக்கு எனக்கு எந்த அவசரமும் இல்லை. ஹீரோயின் ரேஸ்ல நான் இல்லை.

என் அண்ணா கோவிந்தும் என் காலேஜ்லதான் ஹெச்.ஆர்ல மாஸ்டர்ஸ் டிகிரி பண்றாங்க. அம்மா அப்பா சென்னையில இருக்காங்க. ஒருநாள் லீவு கிடைச்சாலும் அவங்களைப் பார்க்கச் சென்னைக்கு ஓடற சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்துப் பொண்ணு நான்.’’

கவர்கிறது கெளரியின் எளிமை!