Published:Updated:

`வி மிஸ் யூ வில்ஸ்மித்!’ - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் டிரெய்லர் #MIBInternational

`வி மிஸ் யூ வில்ஸ்மித்!’ - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் டிரெய்லர் #MIBInternational
`வி மிஸ் யூ வில்ஸ்மித்!’ - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் டிரெய்லர் #MIBInternational

தோர் ஹீரோவாக நடிக்கும் மென் இன் பிளாக்  இன்டர்நேஷ்னல் ஸ்பின் ஆஃப் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மென் இன் பிளாக். காமிக்ஸ் கதையை அடிப்படையாகக் கொண்டு காமெடி ஜானரில்  உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை பாரி சோனன்ஃபெல்ட் என்பவர் இயக்கினார். மூன்று பாகங்களைக் கொண்ட இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 1997-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து மென் இன் ப்ளாக் 2 கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. இரண்டாவது பாகம் வெளியாகி பத்துவருடங்கள் கழித்து படத்தின் மூன்றாம் பாகம் 2012-ம் ஆண்டு வெளியானது. படத்தில் வில் ஸ்மித் மற்றும் டாம்மி லீ ஜோன்ஸின் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 2012-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த 10-வது படம் என்ற சாதனையைப் படைத்தது மென் இன் பிளாக் 3. அமெரிக்க டாலரில் 624 மில்லியன் வசூலைக் குவித்தது .

இந்த நிலையில், படத்தின் புதிய ஸ்பின் ஆப் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மென் இன் ப்ளாக் இன்டர்நேஷனல் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் வில் ஸ்மித் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. மாறாக தோர் படங்களில் நடித்து வரும் க்ரிஸ் ஹெம்வர்த் நடித்துள்ளார்.  பார்ஸ்ட் அன் ஃப்யூரியஸ் 8-ஐ இயக்கிய கேரி க்ரே இந்தப் படத்தை  இயக்கியுள்ளார். இந்தப் படம் அடுத்தாண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த மென் இன் பிளாக் படங்கள் நம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு காமிக்ஸான மலிபு (Malibu) காமிக்ஸ் புத்தகங்களை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.