சினிமா
Published:Updated:

முதன்முதலாக...

முதன்முதலாக...
பிரீமியம் ஸ்டோரி
News
முதன்முதலாக...

முதன்முதலாக...

முதன்முதலாக...

மதுமிதா

``சி
ன்னச் சின்னத் தொகையா சேர்த்துவெச்சு ஒரு பெரிய பொருள் வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதுக்கப்பறம் ஒரு உண்டியல் வாங்கி, ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கிற்குப் போகும் போதும் அதுல 200 ரூபாய் போடணும்னு முடிவு பண்ணினேன். 43,000 ரூபாய் சேர்ந்தது. அந்தக் காசுல ஒரு டிவி வாங்கினேன். இந்த சம்பவம் நடந்தது ஆறு வருஷத்துக்கு முன்னாடி. நான் முதன்முதலா காசு சேர்த்து வைத்து வாங்கியதால அந்த டிவி ரொம்ப ஸ்பெஷல் எனக்கு!”

முதன்முதலாக...

கருணாகரன்

``எ
ங்க அப்பா அந்தமானுக்கு டிரான்ஸ்ஃபர் ஆனார். அந்த நேரத்துல அப்பாதான் ஊருல இல்லையேனு, அவர் எனக்கு வாங்கிக் கொடுத்த பைக்கை வித்துட்டேன். அதில் கிடைச்ச பணத்தை  வெச்சு பேங்காக் போயிட்டேன். அப்புறம் அதை நினைச்சு மனசு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தேன். பிறகு, சினிமாவுக்கு வந்து சம்பாதிச்ச காசை வெச்சு எங்க அப்பாவுக்கு முதல் முதலா கார் வாங்கிக் கொடுத்தேன். அதனால எங்க அப்பாவும் ஹாப்பி... நானும் செம ஹாப்பி.’’

முதன்முதலாக...

ஆங்கர் பாவனா

‘`நான் படிச்சது பி.டெக். ஃபைனல் இயர்ல காலேஜ்ல ‘கேம்பஸ் இண்டர்வியூ’ நடந்தது. இண்டர்வியூ அறை. ‘சி ப்ரோகிராம்’ங்கிற ஒரு வார்த்தையோடுதான் எனக்கான கேள்வி தொடங்குச்சு. தெரிஞ்ச மாதிரி ஆரம்பிச்சு, உளறி கடைசியில் ‘எனக்குத் தெரிஞ்ச ஒரே சி, ஏபிக்கு அடுத்து வர்ற சி தான்’னு சிரிச்சிட்டேன். கேள்வி கேட்டவங்களும் சிரிச்சிட்டாங்க. ‘நீங்க ஆர்வத்தோட வந்ததே போதும். சரி கிளம்புங்க’ன்னு சொல்லிட்டாங்க. ஆச்சர்யம் என்னன்னா ஒரு வாரத்துல அந்தக் கம்பெனியில இருந்து எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். அதுதான் நான் போன முதல் இண்டர்வியூ.’’

முதன்முதலாக...

நடிகர் விஜய் வசந்த்

“ரொ
ம்ப சின்ன வயசில இருந்தே ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சுட்டேன். முறையான கிரிக்கெட் கோச்சிங் போக ஆரம்பிச்சது, எட்டாவது படிக்கும் போதுதான். எனக்கு அப்பா முதன் முதலா வாங்கிக்கொடுத்த பேட் ‘க்ரே நிக்கோல்ஸ்’. அப்போ ‘க்ரே நிக்கோல்ஸ்’ங்கிற ஃபாரின் பிராண்ட் பேட்டை நம்ம ஊர்ல யாரும் அதிகம் வெச்சிருக்க மாட்டாங்க. அது வாங்கி ஒரு வாரம், அழுக்காகக் கூடாதுனு கவரைக்கூடப் பிரிக்காமல் வெச்சிருந்தேன். பந்து அழுக்காகிடுச்சுன்னா போடக் கூடாதுன்னு சொல்லிடுவேன். அந்த முதல் பேட் எப்பவும் எனக்கு ஸ்பெஷல்தான்!’’ 

முதன்முதலாக...

ப்ரியாபவானி சங்கர்

’’சின்ன வயசில நானும் என் கசின் பிரதரும் பொருட்காட்சிக்குப் போகும்போது, அங்கே இருக்கிற கடைகளில் சீப்பு, பென்சில் இதையெல்லாம் திருடிட்டு வந்துருவோம். இதுதான் என் முதல் திருட்டு. ஒருமுறை பாண்டிச்சேரில அப்பாகூட மார்க்கெட்டுக்குப் போனப்ப அங்கே இருந்த ப்ளம்ஸ் கடையில ஒரு பழத்தை சுட்டுட்டேன். அப்பா பார்த்துத் திட்டி, பழத்தைக் கடைக்காரர்கிட்ட கொடுத்துட்டு ஸாரி கேட்டேன். அதுக்கப்புறம் அந்தப் பழக்கத்தை விட்டுட்டேன்.”

முதன்முதலாக...

RJ ராஜவேல் நாகராஜன்

``நா
ங்க ஒரு விவசாயக்குடும்பம். ஆனா, காலப்போக்கில் விவசாயம் பண்ண முடியாம நிலங்களை விற்றுவிட்டோம். அதுக்கப்பறம் நான் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு, எந்த ஊரில்  நிலத்தை எல்லாம் வித்தோமோ அதே ஊர்ல நிலம் வாங்கணும்னு முடிவு பண்ணி ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கினேன். அந்த நிலத்தில் விவசாயம் செஞ்சு, பயிரெல்லாம் விளைஞ்சு நிக்கிறதைப் பார்க்கும் போது எனக்குள்ள ஒரு சந்தோஷம். முதன்முதலா நான் வாங்கின நிலமும், அதில் அறுவடை செய்த பயிரும் எனக்கு என்னைக்குமே ஸ்பெஷல்தான்.’’ 

முதன்முதலாக...

ரம்யா பாண்டியன்

``ரொ
ம்ப நாளாவே மாடித்தோட்டம் போடணும்னு ஆசைப்பட்டுட்டு இருந்தேன். நான் மாடியில பூச்செடியெல்லாம் வளர்த்திருக்கேன். அதெல்லாம் எனக்கு பெருசா தெரியலை. காய்கறிகள் விளைய வைக்கணும்னு ஆசைப்பட்டேன். கத்திரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், தக்காளினு சில விதைகள் வாங்கிப் போட்டேன். அந்த விதை முளைச்சு, காய்கறிகளைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது. வீட்டுல நான் முதன்முதலா விளைய வெச்ச காய்கறிகளை வெச்சு சமையல் செஞ்சு சாப்பிடும்போது பெருமையாகவும் இருந்துச்சு.’’

முதன்முதலாக...

தேவதர்ஷினி

``எ
னக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸ்னா வராது. நான் நடிக்க வந்ததுக்கு அப்பறம் விஜய் டிவியில இருந்து, `ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சிக்கு ரியல் லைஃப் ஜோடிகள் வேணும்னு என்னையும் சேத்தனையும் கூப்பிட்டாங்க. சேத்தன் என்கிட்ட, ‘போகலாமா’னு கேட்டார். `எனக்கு டான்ஸ் தெரியாது; என்னால நீயும் எலிமினேட் ஆகிடுவ... பரவா யில்லைனா வரேன்’னு சொல்லிட்டுத் தான் அந்த ஷோவுக்குப் போனேன். என்னால பண்ணவே முடியாதுனு நான் நினைச்ச ஒரு விஷயத்தை முதன்முதலா ஒரு டிவி ஷோல பண்ணுனது; என்னால மறக்கவே முடியாத ஒண்ணு. கல்யாணத்துக்கு அப்பறம் நான் பண்ணுன விஷயங்களில் எனக்கு ரொம்பப் பிடிச்சதும் இதுதான்.’’