சினிமா
Published:Updated:

திராவிட அழகிகள்!

திராவிட அழகிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
திராவிட அழகிகள்!

சினிமா

‘அட... யார் இந்த ஹீரோயின்?’ என ரசிகர்கள் கவனம் ஈர்த்த இந்த வருடத்தின் நாயகிகள் நால்வர்... 

திராவிட அழகிகள்!

ஷில்பா மஞ்சுநாத்

திராவிட அழகிகள்!``சொ
ந்த ஊர் பெங்களூரு. காலேஜ் டைம்ல ‘மிஸ் கர்நாடகா’ பட்டம் வாங்கினேன். அப்புறம் மாடலிங் ஆசை தொத்திக்கிச்சு. அந்தச் சமயத்துலதான் பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ஆனாலும் ஒரு தயக்கம் இருந்துச்சு. சில மேடை நாடகங்கள், வீதி நாடகங்கள் நடிச்சு நடிப்புன்னா என்னன்னு தெரிஞ்சுட்டு, அப்புறம்தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தேன். விஜய் ஆண்டனி தயாரிப்பு நிறுவனத்துல இருக்கிற சான்ட்ரா என்னுடைய போட்டோவை கிருத்திகா மேம்கிட்ட காட்டியிருக்காங்க. ‘இவங்க மாடர்னா இருக்காங்க, நமக்கு கிராமத்து சாயல் முகம்தான் சரியா இருக்கும்’னு தவிர்த்துட்டாங்க. ஆனா அப்புறமா கிருத்திகா மேம் என்னைக் கிராமத்து லுக்ல பார்த்ததும் ஓகே சொல்லிட்டாங்க. இப்படித்தான் எனக்கு ‘காளி’ பார்வதி ரோல் கிடைச்சது. இப்போ இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி படத்துல ஹரீஷ் கல்யாணோட நடிச்சு முடிச்சிருக்கேன். மாடர்ன் ஷில்பாவா இந்தப் படத்துல என்னை நீங்க பார்க்கலாம்.” 

திராவிட அழகிகள்!

ஐஸ்வர்யா மேனன்

‘‘நா
ன் பிறந்தது ஈரோடு. ஆனா, சின்ன வயசுலேயே சென்னையில் செட்டில் ஆன பக்கா சென்னைப் பொண்ணு நான். காலேஜ் படிக்கும்போது, மாடலிங் மீது ஆர்வம் இருந்தது. அந்தச் சமயத்துலதான் ‘வீரா’ பட வாய்ப்பு வந்தது. ஆனா, வீட்டுல ரெட் சிக்னல் காட்டிட்டாங்க. அடம்பிடிச்சுதான் அதை கிரீன் சிக்னலா மாத்தினேன். அப்புறம் ‘தமிழ்ப்படம் 2’ படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்தது. இப்போ ஒரு தெலுங்குப் படத்துல கமிட் ஆகியிருக்கேன். நான் இப்போ செம பிஸி!’’

திராவிட அழகிகள்!

நிஹாரிகா

‘‘சொ
ந்த ஊர் ஆந்திரா. நான் ஏன் சினிமாவுக்கு வந்தேன்னு சொல்றதுக்கு முன்னாடி என்னுடைய குடும்பத்தைப் பத்தி சொல்றேன்; என்னுடைய பெரியப்பா பெயர் சிரஞ்சீவி, சித்தப்பா பவன் கல்யாண், அப்பா நாகபாபு, கசின்ஸ் ராம்சரண், அல்லு அர்ஜூன், அண்ணா வருண். இப்பப் புரிஞ்சதா? இப்படி ஒரு குடும்பத்தை வெச்சுட்டு நான் சினிமாவுக்கு வரலேன்னாதானே ஆச்சர்யம்? தெலுங்குல வெளியான ஒரு வெப் சீரிஸ்லதான் நான் முதல்ல நடிச்சேன். அப்புறம் ‘ஒக்க மனசு’ பட வாய்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்ல ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்துல நடிச்சேன். என்னுடைய போட்டோ பார்த்துட்டு நடிக்கக் கூப்பிட்டார் டைரக்டர். படத்துடைய கதை அப்பாவுக்குப் பிடிச்சதால நானும் ஓகே சொல்லிட்டேன். இதுல நடிச்சதுக்கு அப்புறம் சில தமிழ்ப் படங்கள் வாய்ப்பு வருது. நல்ல கதாபாத்திரமா இருந்தா உடனே டிக் அடிச்சுடுவேன்!”

திராவிட அழகிகள்!

இவானா

“எ
ன்னுடைய சொந்த ஊர் கேரளா. சின்ன வயசுலேயே படங்கள் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். ப்ரித்விராஜ் நடிச்ச ‘மாஸ்டர்ஸ்’ படம்தான் என்னுடைய முதல் படம். அதுக்கப்புறம் ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ படத்துல கமிட் ஆனேன். அதைப் பார்த்துட்டுதான் பாலா சார் என்னை ‘நாச்சியார்’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார். என்னுடைய உண்மையான பெயர் அலினா. ‘நாச்சியார்’ படத்துக்காகத்தான் `இவானா’ன்னு பெயரை மாத்திக்கிட்டேன். என் அப்பா ‘பிதாமகன்’ படத்துக்குத் தீவிர ரசிகர். பாலா சார்கிட்ட இருந்து போன் வந்தப்போ என்னைவிட  அவர்தான் செம ஹேப்பி. அப்போ நான் 12வது படிச்சிட்டிருந்தேன். சென்னையில ஷூட் ஆரம்பிச்சப்போ, குடும்பத்தோட சென்னை கிளம்பி வந்துட்டாங்க. அதைப் பார்த்து சிரிச்ச பாலா சார், ‘உங்க பொண்ணைக் கஷ்டப்படுத்த மாட்டேன், கவலைப்படாதீங்க’னு சொன்னார். இப்போகூட தமிழ்ல ஒரு முன்னணி நடிகர்கூட நடிக்கிறேன். ஆனா, யார்னு சொல்ல மாட்டேனே... அது சஸ்பென்ஸ்!”  

சனா