சசிதரூர் எழுதி, வெளியாகக் காத்திருக்கும் நூல், பிரதமர் மோடி பற்றியது. ‘THE PARADOXICAL PRIME MINISTER’ என்ற இந்த நூலில் பிரதமர் மோடியை வெளுத்து வாங்கியிருக்கிறாராம். `இது ஒரு 400 பக்க floccinaucinihilipilification’ என்று ட்விட்டரில் எழுதியிருந்தார். அதென்ன பிளோசினா....ஃபிகேஷன் என்று அகராதிகளைப் புரட்ட ஆரம்பித்தனர் நெட்டிசன்கள். ஒருவழியாகக் கடைசியில் ஒரு இங்கிலீஷ் டீச்சர் அந்தச் சொல்லுக்கான அர்த்தத்தைச் சொன்னார்: ‘ஒரு விஷயம் எவ்வளவு மோசமானது என்பதை அளக்கும் செயல்.’ இது மோடிக்குப் புரியுமா ஜி?

கர்நாடகாவின் செல்ல யானை 46 வயதான ‘ரவுடி ரங்கா.’ சென்ற ஆண்டு தசராவில் ரங்காவின் பிரமாண்டத்தைப் பார்த்து எல்லோருமே மிரண்டுபோனார்கள். இந்த ரவுடி ரங்கா சமீபத்தில் பஸ் மோதி இறந்துபோனது. இதனால் மைசூர்வாழ் மக்களெல்லாம் சோகத்தில் இருக்கிறார்கள். 2016-ல் ஒரு வன அலுவலரைத் தாக்கிக்கொன்றதன் மூலம் பிரபலமானது ரவுடி ரங்கா என்கிற காட்டுயானை. அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகிறது என வனத்துறையால் பிடிக்கப்பட்டது. பாகன் ஒருவரால் பழக்கப்படுத்தப்பட்ட பின் ரவுடி ரங்கா, சாது ரங்காவாக மாறி, அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில்தான் ரங்காவின் மீது காட்டுப்பகுதியில் அதிவேகமாக வந்த டூரிஸ்ட் பஸ் மோதி இறந்துபோயிருக்கிறது. RIP ரங்கா!

துர்காபூஜா கொல்கத்தாவின் அடையாளம். இந்த முறை கொல்கத்தாவின் அஹிரிடோலா (Ahiritola) பகுதி மக்கள் அதை வித்தியாசமாகக் கொண்டாட முடிவெடுத்தனர். துர்காபூஜை என்றாலே சாலைகளை நிறைக்கிற வண்ண வண்ணக் கோலங்கள்தான் அழகே... அந்தக்கோலங்களைப் பாலியல் தொழிலால் பாதிக்கப்படும் பெண்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். இந்தப்பகுதியில் வாழும் சாதாரண மக்கள் அந்தப்பெண்கள் படுகிற வேதனைகளைக் கோலங்களாக வரைந்து தங்கள் அக்கறையை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஒருலட்சத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் ‘தர்பார் மஹிலா சமன்வயா’ கமிட்டி இந்த ஆதரவை நெகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளது. ரசனை ரங்கோலி!

கார்த்தி அடுத்து நடிக்கும் படம் ‘தேவ்.’ ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை, புதுமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கிவருகிறார். ஷூட்டிங் தற்போது குலுமணாலியில் நடந்துகொண்டிருக்கிறது. படத்தின் ஒரு பகுதியை, எவரெஸ்ட் சிகரத்தின் அருகிலும் படமாக்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகளிலும் இருக்கிறார்களாம். அடுத்து ‘பாபநாசம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி என்கிறார்கள். கலக்குங்க கடைக்குட்டி!

தெலுங்குக்குப் போகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பு மூலம் ஏற்கெனவே ஆந்திராப் பக்கம் அறிமுகமாகியிருந்தாலும், ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கவிருப்பதில் டபுள் உற்சாகத்தில் இருக்கிறார் ஐஸ். டபுள் ஏன்? படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவாம். ஐஸ்லு ராஜேஷ்லு!

சமீபத்தில் நடித்த `மன்மர்ஸியான்’ செம ஹிட். பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகையாக இருக்கிறார் டாப்ஸி. இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். எத்தனையோ இயக்குநர்கள் கேட்டுக்கொண்ட போதும் தமிழ்ப்பட வாய்ப்புகளை மறுத்துவந்தவர், ‘மாயா’ இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கேம் ஓவர்’ படத்தின் கதையைக் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டிருக்கிறார். கேம் ஸ்டார்ட்ஸ்!

அலாவுதீனின் அற்புத விளக்கு கதை ஹாலிவுட்டில் படமாகிக்கொண்டிருக்கிறது. டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் பூதமாக நடித்துக்கொண்டிருப்பவர் வில்ஸ்மித்! ஆக்ஷன் படங்களின் மூலம் சூப்பர் ஸ்டாராக வலம்வந்தாலும் இதுமாதிரியான வாய்ப்பு வந்ததும் உடனே ஒப்புக்கொண்டு நடித்துக்கொடுத்திருக்கிறார். 1992-ல் அனிமேஷன் திரைப்படமாக வெளியான அலாவுதீனைத்தான் இப்போது ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்கள். படத்தை இயக்கிக்கொண்டிருப்பவர் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலுக்காகக் கொண்டாடப்படும் கைரிட்சி. ஹாலிவுட்டில் பூதம்!

ராஜஸ்தான் அமைச்சர் சம்புசிங் கிடேசர் என்பவர் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் ஒன்று நாடுமுழுக்கப் பரவலாக வைரலானது. பிரதமர் மோடி சுவச் பாரத் என்று விளம்பரம் பண்ணிக்கொண்டிருக்க ஒரு அமைச்சரே இப்படிச் செய்யலாமா என எல்லோருமே முகஞ்சுளிக்க... அமைச்சர் கொடுத்தார் பாருங்கள், ஒரு விளக்கம்... ‘`பொது இடங்களில் மலங்கழிப்பதுதான் தவறு. கூட்டமில்லாத இடத்தில் ஓரமாக சிறுநீர் கழிப்பது தவறில்லை. பொது இடங்களில் சிறுநீர்கழிப்பது நம் பழங்காலத்துப் பாரம்பர்யம்தான்’’ என்றிருக்கிறார். சிறுநீர்ப் பாசனத்துக்கான முயற்சியோ?