Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

இணையம்

twitter.com/BoopatyMurugesh

வாழ்க்கையில் பிரச்னை விஜய் சேதுபதி படம் மாதிரி வாரம் ரெண்டு வருது. நல்ல விஷயம் அஜித் படம் மாதிரி அப்டேட் கூட கிடைக்க மாட்டேங்குது.

வலைபாயுதே

twitter.com/thoatta

அடிக்கிற வெயிலையும் அரசாங்கத்தோட சுறுசுறுப்பையும் பார்த்தா, இவங்க வந்துட்டுப்போன சென்னை வெள்ளத்துக்குத்தான் இப்ப ‘ரெட் அலர்ட்’ கொடுத்திருப்பாய்ங்கன்னு தோணுது.

facebook.com/gkarlmax

இடைத்தேர்தலையே ரெட் அலர்ட்டு போட்டு நிறுத்துறானுவ... மெயின் தேர்தலெல்லாம் இனிமே நடக்குமான்னே தெரியல... இந்த லட்சணத்துல டெய்லி ஒருத்தர் அரசியல் பிரவேசம்...  . 

facebook.com/writermugil

‘96’ படம் வந்த பிறகு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று லட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூற்றெட்டு ‘ஸ்கூல் வாட்ஸப்’ குரூப்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டதாகவும், அவற்றிலும் பூ, புஷ்பம், புய்ப்பம், புசுபுசு குழந்தை புகைப்படப் பொன்மொழிகளுடன் குட்மார்னிங், குட்நைட் மெஸெஜுகள் தினமும் ஒரு TB அளவுக்குப் பகிரப்பட்டதால் அதில் அறுபத்தியேழு சதவிகித குரூப்கள் நான்கைந்து நாள்களிலேயே கடை சாத்தப் பட்டதாகவும் பிடீஐ செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வலைபாயுதே

facebook.com/RedManoRed

‘ஆணுக்கு சரிநிகர் பெண்; பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை; பத்து மாசம் சுமந்து பாருங்க தெரியும்’னு பேசிட்டு சிலிண்டர் தூக்குறது, சீலிங் ஃபேன் தொடைக்கிறதுக்கு எல்லாம் ஆண்கள தேடுறது. 

twitter.com/shivaas_twitz

வலைபாயுதே

சாப்பாடு, கருத்து இரண்டையும் பரிமாறலாம்... திணித்தல் கூடாது..! 

twitter.com/ShivaP_Offl

வாழ்க்கை டேமேஜ் ஆக யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம், ஆனா லிவர் டேமேஜ் ஆக யாரோ ஒரு உயிர் நண்பன்தான் காரணமாக இருப்பான்.  

வலைபாயுதே

twitter.com/comman_tamilan

வீட்ல cook பண்ணி சாப்பிடுறவங்கள விட book பண்ணி சாப்பிடுறவங்க அதிகமாயாச்சு.. 

twitter.com/shivaas_twitz

நட்பின் அருமை கல்யாண வீட்டில் தாம்பூலப் பை போட ஆள் இல்லாதபோது தெரியும்..!

twitter.com/Kozhiyaar

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பதைக் கேள்விப்பட்டப்பதான், இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் அத்துக்கிட்டுப் போச்சு!  

வலைபாயுதே

twitter.com/sultan_Twitz

‘எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு’. அடுத்து எம்.ஆர் ராதாவை விசாரணை ஆணையத்துக்கு நேரில் வர உத்தரவிடுவாரோ?!

twitter.com/shivaas_twitz

வலைபாயுதே

எடப்பாடி டு மோடி :பெட்ரோல் விலை விஷயத்துல உம்முன்னு இருக்கேன்...

ஹெச். ராஜா விஷயத்துல கம்முன்னு இருக்கேன்...

என்னை ஜம்முன்னு பார்த்துக்கோங்க ஜி..!  

வலைபாயுதே

twitter.com/Kannan_Twitz

வலைபாயுதேநேத்து நைட் வண்டியை கேட் முன்னாடியே மறந்து நிப்பாட்டிட்டேன், சாவி கூட எடுக்கலை. இப்போ எழுந்ததும் சாவிய காணோம்னு பதறியடிச்சிட்டுப் போய் வண்டியப்பார்த்தா வண்டி அங்கனவே இருந்துச்சு! பெட்ரோல் மட்டும் திருட்டுப் போய்ருக்கு. மோடி ஜி-க்கு நன்றிகள்!

twitter.com/shivaas_twitz

வாட்ஸப் குட் மார்னிங் மெசேஜ் அனுப்ப தேவையானவை:

சூரிய உதய படம் - 1 (கடற்கரையில் எடுத்தது), தத்துவம் - 1

காபி கப் - 1, புத்தர் உருவம் - 1, கடற்கரைக் காலடித் தடம் - 4 (அ) 5

பறவைகள் - 2, கூழாங்கற்கள் (பெரியது) - 5, பூக்கள் - தேவையான அளவு

சைபர் ஸ்பைடர்