சினிமா
Published:Updated:

நாங்க சிரிச்சா தீபாவளி!

நாங்க சிரிச்சா தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
News
நாங்க சிரிச்சா தீபாவளி!

சினிமா

பெரியவர்களைவிட, பண்டிகையின் தித்திப்பு குழந்தைகளுக்கே முழுமையாக வசப்படும். நமக்குப் பிடித்தமான திரைச்சுட்டிகள் சிலரிடம் அவர்களின் தீபாவளி ப்ளான் குறித்துக் கேட்டோம்!

“மஞ்சள் கலர் டிரஸ் எடுக்கணும்!”

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அனைவரின் மனம் கவர்ந்த சுட்டி, மானஸ்வி. ‘ஓங்குவானாமே... ஓங்குடா... ஓங்குடா...’ என்ற இவருடைய அதட்டலுக்கு வாட்ஸ்அப்பெல்லாம் அதிர்ந்தது. இவர் தந்தை, நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி.

நாங்க சிரிச்சா தீபாவளி!

‘`அப்பாவும் நானும் ‘மியூசிக்கலி’யில் பின்னி எடுக்குறதுதான் எங்களுக்கு வீட்டுல பொழுதுபோக்கு. தீபாவளிக்குப் பட்டாசு, புது டிரஸ் எல்லாம் கிடைக்கப் போகுது. பாட்டி நிறைய ஸ்வீட்ஸ் செய்வாங்க. அதுல லட்டு டப்பாதான் முதல்ல காலியாகும். ஏன்னா, மானஸ்விக்கு லட்டுதான் ரொம்பப் பிடிக்கும். அப்புறம், ஒவ்வொரு தீபாவளிக்கும் அப்பாவும் அம்மாவும் எனக்கு ஒரு கிஃப்ட் கொடுப்பாங்க. அது சர்ப்ரைஸ்! இந்த வருஷம் எனக்கு மஞ்சள் கலர்லதான் டிரஸ் எடுத்துக் கொடுக்கணும்னு சொல்லியிருக்கேன். நல்லா இருக்கும்ல?!”

நாங்க சிரிச்சா தீபாவளி!

‘`சரவெடி, ராக்கெட், அக்கா!”

‘மெர்சல்’ படத்தில் விஜய்யின் மகனாக நடித்தவர் அக்‌ஷத். தற்போது விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருக்கிறார்.

நாங்க சிரிச்சா தீபாவளி!

‘`தீபாவளிக்கு ஜிப்பா எடுக்கப் போறேன். எங்க வீட்டுல நானும் அக்காவும் சேர்ந்து நிறைய பட்டாசு வெடிப்போம். நான் பெரிய பெரிய வெடியெல்லாம்கூட பயப்படாம வெடிப்பேன். சரவெடி வெடிக்கிறது த்ரில்லிங்கா இருக்கும். நாம வெச்ச ராக்கெட் அவ்ளோ உயரத்துல போறதைப் பார்க்கும்போது ரொம்ப ஹேப்பியா இருக்கும். ஆனா, ஒவ்வொரு வெடியை நான் பற்றவைக்கும்போதும் எங்க வீடே பதறி, ‘பார்த்துடா’னு சொல்லிட்டே இருப்பாங்க. நானும் அக்காவும் அவங்களைக் கிண்டல் பண்ணிட்டே பாக்ஸ் பாக்ஸா வெடி வெடிப்போம். இந்த தீபாவளிக்கு விஜய் அங்கிளோட படம் ரிலீஸ். டபுள் குஷிதான்!”

‘`தீபாவளி ஷூட்டிங் ஸ்பாட்லேயா..?!”

`றெக்க’ படத்தில் ‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடலில் சமர்த்துப் பையனாக முகம் காட்டிய ராகவன், படிப்பு, நடிப்பு இரண்டிலும் ஸ்டார். இவருடன் இப்போது இவர் தம்பியும் கேமராவில் கலக்குவதற்குத் தயாராக இருக்கிறார்.

நாங்க சிரிச்சா தீபாவளி!

‘`விஜய் சேதுபதி அங்கிளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னொரு விஷயம் சொல்லட்டுமா... விஜய் சேதுபதி அங்கிளுக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும்; ‘டார்லிங்’னு சொல்வார். தீபாவளிக்கு எப்பவும் என் தம்பி நிறைய வெடி வெடிப்பான், நான் டி.வி-யில ஸ்பெஷல் புரொகிராம்ஸ் பார்த்துட்டிருப்பேன். இந்த தீபாவளிக்கு ஷூட்டிங் ஏதாவது இருந்தா, ஷூட்டிங் ஸ்பாட்லதான் கொண்டாடணும். அதுவும் ஜாலியா இருக்கும்ல?!”

‘`அஜித் அங்கிள் என்னோட ‘பிக் ஃப்ரெண்ட்’!”

பல விளம்பரங்களிலும் வந்து நமக்கு ‘ஹாய்’ சொல்கிறார், யுவினா பார்த்தவி. ‘வீரம்’ படத்தில் தன் க்யூட் ரியாக்‌ஷன்களால் ரசிக்கவைத்த குட்டிப்பூ. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

நாங்க சிரிச்சா தீபாவளி!

‘`அஜித் அங்கிளை நான் ‘பிக் ஃப்ரெண்ட்’னுதான் கூப்பிடுவேன். தீபாவளிக்கு என்னோட பிக் ஃப்ரெண்டுக்கு விஷ் பண்ணணும். அப்புறம், ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து பட்டாசு வெடிக்குறது செம ஜாலியா இருக்கும். அம்மா செய்ற போளி சூப்பரா இருக்கும். காலையில சாமி கும்பிட ஒண்ணு, பட்டாசு போடும்போது ஒண்ணு, சாயங்காலம் ஒண்ணுனு நான் அன்னிக்கு நிறைய புது டிரஸ் மாத்திட்டேயிருப்பேன். ஆனா, இந்த வருஷ தீபாவளிக்கு நான் எங்கே இருப்பேன்னே தெரியலை. ஷூட்டிங் டேட்ஸ்!”

‘`கொஞ்சமா வெடி வெடிக்கணும்!”

சன் டி.வி ‘குட்டீஸ் சுட்டீஸ்’ நிகழ்ச்சியின் மூலம் சினிமா வாய்ப்பு பெற்று, ‘வேதாளம்’ படத்தில் அறிமுகமானவர் மோனிகா.

நாங்க சிரிச்சா தீபாவளி!

‘`காலையில அம்மா சன் ரைஸ் ஆகுறதுக்கு முன்னாடியே எழுப்பி விட்டுடுவாங்க. காக்ரா சோலி, வெஸ்டர்ன் டிரஸ்னு ரெண்டுமே அம்மா வாங்கிக் கொடுக்குறதா சொல்லியிருக்காங்க. வழக்கமா வீட்டுலதான் வெடி வெடிப்போம். இந்தத் தடவை பீச்ல போய் வெடிக்கலாம்னு அம்மாகிட்ட கேட்டிருக்கேன். போன தடவை நிறைய நிறைய வெடி வெடிச்சேன். ஆனா, இந்த வருஷம் கொஞ்சமா வெடிக்கணும். ஏன்னா, அதனால நிறைய பொல்யூஷன் ஆகுதாம். ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ்கூட தீபாவளி பத்தி பேசிட்டிருந்தப்போ, ‘நீங்களும் கொஞ்சமா வெடிங்கப்பா’னு சொன்னேன். அவங்களும் `ஓகே’ சொல்லிட்டாங்க. நீங்களும் `ஓகே’ சொல்வீங்களா ப்ளீஸ்?!”

-  வெ.வித்யா காயத்ரி