சினிமா
Published:Updated:

“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

சினிமா

“ஜெயலலிதா பயோபிக்ல நான் நடிக்கிறதா வெளிவந்த செய்திகள் உண்மை இல்லை. ஓப்பனா சொன்னா,

“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

இன்னொரு பயோபிக் படத்துல என்னால் நடிக்க முடியுமானு தெரியலை. ரசிகர்கள் எல்லோரும் என்னை சாவித்திரி அம்மாவாகப் பார்க்கிறதே போதும்.!” - டிரேடுமார்க் சிரிப்புடன் பேசத் தொடங்குகிறார் கீர்த்தி சுரேஷ்.

“ ‘சண்டைக்கோழி 2’ ஆரம்பித்ததில் இருந்து ஷூட்டிங் முடியும் வரை எப்படி இருந்துச்சு?”

“மீரா ஜாஸ்மின் இடத்தை நிரப்பணும்னு நினைக்கும்போது ரொம்ப பயமா இருந்துச்சு. லிங்குசாமி சார்தான், நம்பிக்கை கொடுத்தார்.  எனக்கு நடிச்சுக் காட்டுற வெகுசில இயக்குநர்களில் லிங்கு சாரும் ஒருத்தர். இதுவரை ஸ்பாட்ல அவர் கோபப்பட்டு நாங்க பார்த்ததில்லை. நானும் அவரும் சேர்ந்து விஷால் சாரைக் கலாய்ச்சுக்கிட்டே இருப்போம்.”

“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

“ ‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு கதைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்கள்ல நடிக்கணும்னு நினைக்கிறீங்களா?”

“எனக்கு கமர்ஷியல் படம், கதைக்கு முக்கியத்துவமுள்ள படம்... ரெண்டும் தேவை.பெரிய கமர்ஷியல் பட வாய்ப்புகள் நம்மைத்தேடி வரும்போது அதைத் திறம்பட பயன்படுத்திக்கணும். அதேநேரம் ‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு கண்டிப்பா நான் கதைத் தேர்வுகள்ல கவனமாதான் இருப்பேன்.”

“ ‘நடிகையர் திலகம்’ படத்துல சாவித்திரியோட நடித்த பழைய தமிழ் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலைனு விமர்சனம் வந்துச்சே?!”

“அடிப்படையில் அது தெலுங்குப் படம். அதனாலதான், எம்.ஜி.ஆர் சார், சிவாஜி கணேசன் சாரோட நடித்த படங்களைப் பற்றி அதில் அதிகமா இல்லை. மத்தபடி, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காம படக்குழு ஒருபோதும் இருந்ததில்லை. படக்குழுவினர் முயற்சி பண்ணியும் சில காட்சிகளை வைக்க முடியல. படத்துக்காக ஆராய்ச்சிகள் பண்ண ஆரம்பிச்சப்போ, சாவித்திரி அம்மாவோட ஒரேயொரு ரேடியோ பேட்டி மட்டும்தான் எங்களுக்குக் கிடைச்சது. படம் பார்த்துட்டு பலபேர் தமிழ்க் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்னு சொன்னாங்க. எல்லாமே சாவித்திரி அம்மாவோட கதைகள்தானே... அது தமிழாக இருந்தால் என்ன, தெலுங்காக இருந்தால் என்ன?!”

“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

“சினிமாப் பின்னணி கொண்ட குடும்பத்துலருந்து வந்தவங்க நீங்க. வீட்டுல உங்க நடிப்புக்கு என்ன ரியாக்‌ஷன் கிடைக்கும்?”

“வெளி ஆள்கள் பரவாயில்ல, சொந்த வீட்டுல நடிப்பைப் பற்றி வாய் திறக்கமாட்டாங்க. அம்மா அதிகபட்சமா, ‘டான்ஸ் நல்லா ஆடியிருக்கலாம், காஸ்ட்யூம்ஸ் வேறமாதிரி இருந்திருக்கலாம்’னு சொல்லியிருக்காங்க. அப்பா சுத்தம். ஆனா, நடிக்க ஆரம்பிச்ச காலத்துல, ‘நடிக்க வருமா, நடிச்சிருவியா’னு சந்தேகத்தோட கேட்டவர், இப்போ என்மேல நம்பிக்கையோட இருக்கார்!”

“அறிமுக ஹீரோவுடன் நடிப்பீங்களா?”

“எனக்குக் கதைதான் முக்கியம். படத்துல நமக்கு முக்கியமான ரோலாக இருந்தா, யார்கூட வேணும்னாலும் நடிக்கலாம்.”

“நீங்க நடிக்கிற மலையாளப் படம் பற்றி...”

“நாலு வருடத்துக்குப் பிறகு ஒரு மலையாளப்படம் பண்றேன்.  பிரியதர்ஷன் சார் இயக்கத்துல, அவரோட பொண்ணு கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறாங்க. மோகன்லால் சார் முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறார். ஒரு சீன நடிகர் இந்தப் படத்துல இருக்கார். இது ஒரு வரலாற்றுப் படம்.” 

“உங்க பாட்டியும் சினிமாவுல நடிக்கிறாங்களே?!”

“பாட்டிக்கு இப்போ நிறைய வாய்ப்புகள் வருது. நான்தான் அவங்களை நடிக்காதீங்கனு சொல்லிக்கிட்டிருக்கேன். ஏன்னா, அவங்களுக்கு உடல்நிலை சரியில்லை. இப்படிப்பட்ட நிலையில நடிப்பு அவசியமான்னு யோசிக்கிறேன். ஆனா, பாட்டி பயங்கர சுட்டித்தனம். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துலகூட சில காட்சிகள்ல நடிச்சிருந்தாங்க. ‘தாதா 87’ படத்துல அவங்களுக்கு ரொமான்ஸ் பாட்டே இருக்கு. சீக்கிரம் நடிச்சுக்கொடுத்துட்டு வர்றமாதிரி கேரக்டர்கள் அமைஞ்சா, அவங்க தாராளமா நடிக்கட்டும்னு நினைப்பேன்.”

“அக்கா ரேவதி சுரேஷ் இயக்குநர் ஆகுறாங்களாமே?!”

“அக்கா கல்யாணம் முடிஞ்சு பெங்களூருல செட்டில் ஆகிட்டாங்க. மாமா அமேசான்ல வேலை பார்க்கிறார். ‘ரேவதி கலாமந்திர்’ங்கிற அப்பாவோட தயாரிப்பு நிறுவனத்தை அக்காதான் கவனிச்சுக்கிறாங்க. 1993-ல கேரளாவுல இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினோம். இதுவரை 25 படங்கள் தயாரிச்சிருக்கோம். தவிர, ‘ரேவ்ஸ் டிசைன்’ என்ற ஆர்ட் நிறுவனத்தையும் அக்கா தொடங்கியிருக்காங்க. இதுக்கு முன்னாடி அக்கா, ஷாருக்கானோட ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனத்துல வேலை பார்த்துகிட்டிருந்தாங்க. அவங்களுக்கு இயக்குநர் ஆகணும்னு கனவு. என்கிட்ட இரண்டு கதைகள் சொல்லியிருக்காங்க. அப்பாவோட சேர்ந்து கூடிய சீக்கிரம் படம் எடுப்பாங்கனு நினைக்கிறேன். ‘மரக்கார்- அரபிக்கடலின்டே சிம்ஹம்’ங்கிற மலையாளப் படத்துல இயக்குநர் பிரியதர்ஷன் சார்கிட்ட உதவி இயக்குநரா இருக்காங்க.” 

“மீம் கிரியேட்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?”

“ஆரம்பத்துல மீம்களை ஜாலியாதான் எடுத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. யார் வீடியோவை நீங்க நிறுத்தி நிறுத்திப் பார்த்தாலும், முகம் அப்படித்தான் இருக்கும். எல்லோருக்கும் இது பொருந்தும். ஆனா, எனக்கு மட்டும் மீம் கிரியேட்டர்கள் எதுக்கு இதைப் பண்ணணும்... எனக்கும் மனசு இருக்கு, கஷ்டப்படுவேன்னு ஏன் நினைக்கமாட்டேங்கிறாங்க?”

ஏம்பா கீர்த்தியைக் கஷ்டப்படுத்துறீங்க?

- சுஜிதா சென்

“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

விஜய்:  “நான் விஜய் சாரோட ரசிகை. சின்ன வயசுல ‘போக்கிரி’ படத்தின் 100-வது நாள் நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தேன். அப்போ அவர் காட்டிய டாட்டா எனக்குத்தான்னு நினைச்சு, சிரிச்சேன். வெளியில எப்படி இருக்காரோ, பர்ஷனலாவும் அப்படித்தான் நடந்துக்குவார். அமைதிக்கு மறுபெயர் அவர். ஆனா, சில சமயங்கள்ல ‘இவரா இப்படிப் பேசுறார், ஜோக் அடிக்கிறார்’னு ஆச்சர்யப்படவும் வைப்பார்.”

“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

சூர்யா: “அதிகமா பேசமாட்டார். அமைதியோ அமைதி.”

“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

விக்ரம்: “ஷூட்டிங் ஸ்பாட்ல அத்தனை பேரையும் சரிசமமா மதிக்கக்கூடிய நபர், விக்ரம் சார். ஹியூமர் சென்ஸ் அதிகம். இவர்கூட இருந்தா பாசிட்டிவ் எனர்ஜி அதிகமா கிடைக்கும். கூட நடிக்கும்போது, எனக்கான நடிப்பையும் அவரே சொல்லிக் கொடுத்திடுவார்.”

“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

சிவகார்த்திகேயன்: “சிவகார்த்திகேயன், சூரி ரெண்டுபேருமே சிரிப்பு மத்தாப்புகள். எப்போ பார்த்தாலும் ஜோக் அடிச்சுக்கிட்டே இருப்பாங்க. காமெடி, ஹீரோயிஸம் ரெண்டையும் சரியா செய்யக்கூடிய நடிகர் சிவா.”

“கதையும் முக்கியம்; கமர்ஷியலும் அவசியம்!”

விஷால்: “பொறுப்பான நடிகர். இரவு பகல்னு எப்போ ஷூட்டிங் நடத்தினாலும், அவர் சோர்ந்து பார்க்கவே முடியாது.”