சினிமா
Published:Updated:

ஆண் தேவதை - சினிமா விமர்சனம்

ஆண் தேவதை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண் தேவதை - சினிமா விமர்சனம்

ஆண் தேவதை - சினிமா விமர்சனம்

டம்பரமே முன்னேற்றமென நினைக்கும் மனைவி; அத்தியாவசியம் போதுமென வாழும் கணவன். இரு குழந்தைகளுக்குப் பெற்றோரான இந்தத் தம்பதிக்கு இடையேயான காதல் மோதல் நெகிழ்வு மகிழ்வுகளே ‘ஆண் தேவதை.’

ஆண் தேவதை - சினிமா விமர்சனம்

குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள  ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ ஆகிறார் இளங்கோ. வேலைக்குச் சென்று கார், லோன், வீடு... என மிடில் கிளாஸ் வாழ்க்கையை மீறிய பாய்ச்சலைக் காட்டுகிறார் ஜெஸ்ஸி. இருவருக்குமான உரையாடலில் எழும் ‘வாழ்றதுக்காக வேலைக்குப் போறோமோ, வேலைக்குப் போறதுக்காக வாழ்றோமா?’ என்ற கேள்விக்குப் பதிலே படம்.

ஆண் தேவதை - சினிமா விமர்சனம்

இளங்கோவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு, அவரது டிரேடு மார்க்கான, உரிய அறிவுரைகளை அள்ளி வழங்கும் கதாபாத்திரம். சில இடங்களில் சிறப்பு; சில இடங்ளில் அலுப்பு. ஜெஸ்ஸியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், கணவரைப் பிரிந்த தனிமை, குழந்தைகள் மீதான பரிவு, ஆடம்பரத்தின் மீதான ஆசை, வேலைமீதான காதல் என அத்தனை உணர்வுகளையும் நேர்த்தியாகக் கடத்துகிறார். குழந்தை நட்சத்திரங்கள் கவின், மோனிகா கொள்ளையழகு. மோனிகாவின் கேள்விகள் பல இடங்களில் சுவாரஸ்யம்; ராதாரவி,  சுஜா வரூணி, காளி வெங்கட், ஹரீஷ் பேரடி என, கதையைச் சுற்றவைக்கும் கதாபாத்திரங்கள்.

ஆண் தேவதை - சினிமா விமர்சனம்
ஆண் தேவதை - சினிமா விமர்சனம்

‘ரெட்டச்சுழி’ தாமிராவுக்கு இது ரெண்டாவது சுழி. அழுத்தமான கதைதான்; ஆனால் திரைக்கதையில் கவனம் இல்லாததால், ஆமைவேகத்தில் நகர்கிறது படம். அபார்ட்மென்ட், சில வீடுகள்... குறைந்த இடங்களையே சுற்றும் கதைக்கு முடிந்த அளவுக்கு பிரமாண்டம் கூட்டியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். ஜிப்ரானின் பின்னணி இசை அதிருப்தியும் இல்லை, ஆச்சரியமும் இல்லை!

குழந்தை வளர்ப்பு, கடன் வாழ்க்கையின் அவலம், கணவன்  மனைவி உறவில் இருக்கும் சிக்கல்கள், ஆடம்பர வாழ்வின் போதை எனப் பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறது கதை.  ஆனால், ஸ்லோமோஷனில் நகரும் காட்சிகளும், அடுத்து இதுதான் நடக்கும் என்ற கணிப்பும் திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கிறது.

- விகடன் விமர்சனக் குழு