அம்மா மலையாளம், அப்பா தெலுங்கு. இருப்பினும் தன்னைத் `தமிழ்ப் பொண்ணு' என அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புபவர், நடிகை சமந்தா. திருமணமாகியும் `நடிகையர் திலகம்', `ரங்கஸ்தலம்', `இரும்புத்திரை' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ``அழுகை யதார்த்தமா இருக்கணும்ங்கிறதுக்காக நடிக்கும்போது நான் கிளிசரின் பயன்படுத்தியது கிடையாது. நடிப்புன்னா அந்த அளவுக்குப் பிடிக்கும். அதனால, கல்யாணத்துக்கு அப்புறம் என்னால நடிக்காம இருக்க முடியல!'' என்றவர், கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார்.

``எல்லோரும் கல்யாணத்துக்கு அப்புறம் சமந்தா பர்ஃபாமென்ஸ் அடிப்படையிலான கதாபாத்திரங்களை நோக்கிப் போறாங்கனு பேசிக்கிறாங்களே. உங்களோட கதைத் தேர்வுகள் எப்படி இருக்கு?''

``நான் சினிமாவுக்குவந்து எட்டு வருடங்கள் ஆச்சு. கமர்ஷியல் படங்கள், கலைப் படங்கள்னு எல்லாவிதமான படங்களிலும் நடிச்சிட்டேன். இனி, பெண்களை மையமா வெச்சு எடுக்கப்படும் படங்கள்ல கவனம் செலுத்தணும்னு நினைக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்தவுடனேயே `யு-டர்ன்' மாதிரியான கதைகள்ல நடிச்சிருந்தா, யாருமே பார்த்திருக்க மாட்டாங்க. இப்போ சமந்தானா யாருனு எல்லோருக்கும் தெரியும். தனி ஆளா ஒரு படத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. இந்த நம்பிக்கையை மக்களுக்குக் கொடுக்குறதுக்கே எனக்குப் பல வருடங்கள் ஆச்சு. எனக்கு இப்போதான் பர்ஃபார்ம் பண்றதுக்கு அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர்கள் வருது. நடிக்க வந்ததுல இருந்து, கதைகளை நான்தான் முடிவு பண்றேன். இனியும் நான்தான் பண்ணுவேன்.''

``கல்யாணத்துக்குப் பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கு?''

``கல்யாணத்துக்குப் பிறகு வாழ்க்கை மொத்தமா மாறணும்னு எந்த அவசியமும் இல்லை. இதுக்கு முன்னாடி அதிகமா கோபப்படுவேன். இப்போ அதைக் குறைச்சிருக்கேன். எனக்கும் சைதன்யாவுக்கும் இடையில சண்டை வந்தா, அதைச் சமாதானப்படுத்துறதுக்கான முயற்சிகள் பண்ணிக்கிட்டிருக்கேன். தவிர, சைதன்யா எனக்காக நிறைய விட்டுக்கொடுக்கிறார்.''

``கதைத் தேர்வுகள்ல சைதன்யா தலையிடுறாரா?''

``நானும் சைதன்யாவும் மாலை 6 மணிக்கு மேல சினிமா சம்பந்தமான விஷயங்களைப் பேசமாட்டோம். எங்க படங்களை ஒருத்தருக்கொருத்தர் விமர்சிக்க மாட்டோம். கதைத் தேர்வுகள்லேயும் தலையிட மாட்டோம். சினிமா எங்க தொழில், அவ்ளோதான். அதை பர்சனலோட குழப்பிக்கக் கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கோம். தவிர, மாமா நாகார்ஜுனா, அத்தை அமலா ரெண்டுபேரும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்காங்க. எனக்கும் சைதன்யாவுக்கும் இடையில ஏதாவது சண்டைனாகூட அவங்க சைதன்யாவைத்தான் விட்டுக்கொடுத்துப் போகச் சொல்வாங்க.''

`` `சூப்பர் டீலக்ஸ்?'

``தியாகராஜன் குமாரராஜா சார் வழி, தனி வழி. அவரை மாதிரி வித்தியாசமான கதைகளை எழுத முடியாது. திறமை இருக்கிறவங்களை அங்கீகரிக்குறதுல சாருக்குத்தான் நான் முதலிடம் கொடுப்பேன். அவருக்கு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் எடுக்க விருப்பமில்லை. `சூப்பர் டீலக்ஸ்' படமும் ஹீரோவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிற கதை இல்லை. விஜய் சேதுபதி படத்துல இருக்கிறதனால, இது ஒரு ஹீரோ சப்ஜெக்ட் படம்னு நினைக்க வேண்டாம்.''

``தமிழ், தெலுங்கு ரெண்டுலயும் ஒரே நேரத்துல நடிக்கிறது எப்படியிருக்கு?''

``ஆரம்ப காலங்கள்ல இருந்தே இந்தச் சவாலை எதிர்கொள்ள நான் தயாராகிட்டேன். அதாவது, என்னுடைய சில தமிழ்ப் படங்கள் தெலுங்குல ரீமேக் ஆகியிருக்கு. சில படங்களுக்கு ஒரே நேரத்துல ரெண்டு மொழிகளிலுமே நடிச்சிருக்கேன். அதனால, எனக்கு அது பெரிய விஷயமா தெரியலை. என்கூட நடிக்கிற ஹீரோக்கள் ஒரு சீனுக்கு அப்புறம் தனியா ஓய்வெடுக்க ஆரம்பிச்சிருவாங்க. ஆனா, நான் மட்டும் ரெண்டு தடவை ஒரே சீனுக்கு வேற வேற மொழிகள்ல நடிக்கணும். கஷ்டம் இருந்தாலும், இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். ரெண்டு மொழி ரசிகர்களையும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது.''

``உங்க டிரஸ்ட் பற்றிச் சொல்லுங்க...''

``2013-ல `ப்ரத்யுஷா'ங்கிற ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சேன். சம்பாதிக்கிறதுல பாதியை இந்த டிரஸ்டுக்காகச் செலவழிக்கிறேன். ஆதரவற்ற குழந்தைகளுக்கான மருத்துவச் செலவு, படிப்புச் செலவு, அடிப்படை வசதிகள்னு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். சம்பாதிக்கிற எல்லாக் காசையும் தனக்கு மட்டுமே செலவழிக்கிற குணம் எனக்குக் கிடையாது. இந்த மாதிரியான சமூக சேவைகள்ல எல்லோரும் அவங்களால முடிஞ்ச அளவுக்குச் செய்யணும்னு எதிர்பார்க்கிறேன். இது மூலமா கிடைக்கிற மன அமைதிக்கு அளவே இல்லைனு சொல்லலாம். கேரள வெள்ளத்துக்குக்கூட இந்த டிரஸ்ட் மூலமா பண உதவி பண்ணியிருந்தேன். என் அம்மாவுக்கு, அவங்க பொண்ணு ஒரு நடிகைன்னு சொல்றதைவிட, சமூக சேவை பண்ணுறானு சொல்றதுலதான் சந்தோஷம்!''

``வாழ்க்கையில உங்களோட குறிக்கோள் என்ன?''

``நான் ஆங்கிலோ-இந்தியன் ஸ்கூல்ல படிச்சு, சர்ச் கேம்பஸ்ல வளர்ந்த பொண்ணு. இந்தச் சூழ்நிலையில வளர்ந்த எல்லோருக்குமே வெளிநாட்டுல செட்டில் ஆகணும்னு ஆசை இருக்கும். எனக்கும் ஆஸ்திரேலியாவுல செட்டில் ஆகணும்; அங்கே பிசினஸ் பண்ணணும்னு ஆசை இருக்கு. பார்ப்போம்!''

- சுஜிதா சென்