`மைனா' படத்தின்மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். `காஸ்டிங் கவுச்', `பாலியல் வன்கொடுமை', `பர்சனல் வாழ்க்கை' என எந்தக் கேள்வி கேட்டாலும் அத்தனை நிதானமாக எதிர்கொள்கிறார், அமலா பால்.

``எங்களுக்குத் தெரியாத அமலா பால் பற்றிச் சொல்லுங்க...''

``நான் ரொம்ப ஹோம்லியான பொண்ணுன்னு பலருக்கும் தெரியாது. குடும்பத்தோட ரொம்ப இணக்கமா இருப்பேன். அம்மாவை மீறி நான் எதையும் செய்யமாட்டேன். என் பிறந்தநாளைக் குடும்பத்தோடதான் கொண்டாட நினைப்பேன். நண்பர்களோட அதிகமா வெளிய போறதில்லை. குறிப்பா, பார்ட்டிக்கு... நண்பர்களை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்துதான் பேசுவேன். எந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனாலும் ஃபிரீயா இருக்கும்போது, குடும்பத்தை அந்த இடத்துக்குக் கூட்டிட்டுப்போய்ச் சுத்திக்காட்டுவேன். எல்லாத்தையும் மிகைப்படுத்திப் பேசுறதுனால, என்னை `டிராமா குயின்'னு நண்பர்கள் சொல்வாங்க. கதை சொல்றது பிடிக்கும்; அடுத்தவங்களைப் பேசவிடாம, குறுக்கே பேசுறது பிடிக்கும்; டிராவல் பிடிக்கும். `அதெல்லாம் பண்ணக் கூடாது, ஆபத்து'னு சொன்னா, அதை ட்ரைப் பண்ணிப் பார்க்கப் பிடிக்கும். சுருக்கமா ஹிப்பி ஸ்டைல் பொண்ணு நான்.''

``அம்மா சப்போர்ட் உங்களுக்கு எந்தளவுக்கு உதவியா இருக்கு?''

``அம்மா என் ரோல்மாடல். சின்ன வயசுல ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்த்தது அவங்கதான். அம்மா இல்லைனா, எங்க குடும்பமே இப்போ இருந்திருக்காது. எப்போதாவது நான் தளர்ந்து போனா... எங்க அம்மாவை நினைச்சுப் பார்த்தா ஸ்ட்ராங் ஆயிடுவேன். எனக்குக் குழந்தை பிறந்து, நான் ஒரு அம்மா ஆகும்போது, பத்து சதவிகிதம் எங்க அம்மா மாதிரி நடந்துகிட்டா போதும். நான் ஒரு சிறந்த தாய் ஆகிடுவேன். என்ன மாதிரியான கஷ்டம் வந்தாலும், என் அம்மா எனக்குப் போதும்; எல்லாம் சரியாகிடும்!''

`` `ஆடை' எப்படிப்பட்ட படம்?

``பெரும்பாலான பெண்களை மையமிட்ட கதைகள்ல, ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு, குடும்பத்தைத் தாங்கி, நல்ல நிலைமைக்குக் கொண்டுவர்ற கிளிஷே காட்சிகள்தான் இருக்கும். அப்படிப் பல கதைகள் கேட்டு, சோர்வா இருந்தப்போதான், `ஆடை' படத்தோட கதை என்கிட்ட வந்துச்சு. ஆனால், ஆடை நான் நினைச்ச கதைகள்ல இருந்து வித்தியாசமா இருந்தது. எனக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கும் இது முக்கியமான படமா இருக்கும்னு நம்புறேன்.''

``புது டீம்கூட வொர்க் பண்ற அனுபவம் எப்படி இருக்கு?"

``இப்போ நடிச்சுட்டிருக்கிற மூன்று படங்களுமே அறிமுக இயக்குநர்களோடதுதான். `அதோ அந்தப் பறவைபோல' படத்துல இயக்குநர் மட்டுமல்ல, எல்லோரும் புதுசு. ஆனா, அந்தக் கதை ஓர் அனுபவமிக்க டீம்கிட்ட இருந்து வர்ற கதையா இருந்தது. தொடர்ந்து புதுசா சினிமாவுக்கு வர்றவங்களோட வொர்க் பண்ண ஆசைப்படுறேன். ஏன்னா, அவங்க ஐடியாஸ் ரொம்பப் புதுசா இருக்கும்.''

`` `அதோ அந்தப் பறவைபோல' படத்துக்காக அதிகமா டிராவல் பண்ணுனீங்களாமே?"

`` `மைனா' படத்துக்குப்பிறகு இன்னொரு படத்துல அந்தளவுக்குக் கஷ்டப்படுவேன்னு நினைக்கலை. `அதோ அந்தப் பறவைபோல' ஷூட்டிங் ஆந்திராவுல தலக்கோணம்கிற இடத்துல நடந்தது. நாற்பது அடி உயர மரத்துல ஏறி, மூணு மணிநேரம் அதுல உட்கார்ந்து ஷூட்டிங் நடத்தினோம். எனக்கு அட்வெஞ்சர் பிடிக்கும். ஏதோ ஓர் ஆர்வத்துல ஏறி, ஒண்ணும் ஆகாதுங்கிற நம்பிக்கையில் உட்கார்ந்துட்டேன். ஆனா, துரதிர்ஷ்டவசமா கீழ விழுந்துட்டேன். கையில அடி. இந்தப் படத்துக்காக பைக் ரைடிங்கும் பண்ணியிருக்கேன்.''

``பாலிவுட் படத்துல நடிக்கப்போறீங்க. எப்படிக் கிடைச்சது இந்த வாய்ப்பு?"

``பாலிவுட் சினிமா வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கு. தமிழ் சினிமா போலித்தனமா இருக்கு. இங்கே அரைச்ச மாவையே அரைச்சுக்கிட்டிருக்காங்க. இப்போ காலம் மாறிடுச்சுல்ல... அதுக்கேத்த மாதிரி சினிமாவும் மாறணும். நல்ல கதைக்குப் பெரிய பட்ஜெட் ஒதுக்கலாம். ஆனா, தமிழ்ல கமர்ஷியல் படங்களுக்குத்தான் பெரிய பட்ஜெட் ஒதுக்குறாங்க. அந்த லாஜிக் இன்னுமே எனக்குப் புரியலை. சில விஷயங்கள் நம்ம கலாசாரம், பண்பாட்டுக்கு எதிரா இருக்குனு மறைச்சு வெச்சிருக்கோம். எல்லா விஷயத்தையும் பேசுற விதத்துல பேசணும். `திருட்டுப்பயலே 2' படத்தை வேறொரு பெரிய ஹீரோ பண்ணியிருந்தா, இன்னும் பெரிய வெற்றி கிடைச்சிருக்கும். அதுல கமர்ஷியல் யுக்திகள் அதிகமா இல்லை. இருந்திருந்தா, இன்னும் கொண்டாடியிருப்பாங்க. பாலிவுட்ல அப்படியெல்லாம் இல்லை. நான் நடிக்கிற பாலிவுட் படம், த்ரில்லர் கதை. அர்ஜுன் ராம்பால் ஜோடியா நடிக்கிறேன். நரேஷ் மல்ஹோத்ரா படத்தை இயக்குறார். இந்தக் கதை என் கேரக்டரை மையப்படுத்தியே நகரும். இந்த மாதிரி ஒரு படத்துக்காகத்தான் பல நாளா காத்துட்டிருந்தேன்.''

``சினிமாவில் பாலியல் வன்கொடுமைப் பிரச்னை உங்களுக்கு நடந்திருக்கா?"

``எல்லா இடத்திலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்துகிட்டுதான் இருக்கு. கத்துவா சிறுமி வழக்குக்குப் பிறகு, சட்டம் மாறியிருக்கு. சினிமாவுல எனக்கும் ஆரம்ப காலங்களில் இந்தப் பிரச்னை இருந்தது. ஆனா, அதுக்கு `நோ' சொல்ற தைரியம் எனக்கு இருந்துச்சு. இது ஒருத்தரோட பர்சனல் விஷயம். யாரும் உங்களை இதற்காக வற்புறுத்தமாட்டாங்க. நல்ல சினிமா எடுக்கணும்னு நினைக்கிறவங்க, நடிகைகள்கிட்ட இப்படி நடந்துக்க மாட்டாங்க. ஒருவேளை, `நீ இப்படி நடந்துகிட்டாதான் சினிமாவுல நடிக்க முடியும்'னு சொன்னா, நான் அந்தப் படத்துல நடிக்கவே மாட்டேன். சினிமாவுல மட்டுமல்ல, எந்த இடத்திலும் இப்படி நடக்கும். தவிர, எனக்குத் தெரிந்து சினிமாவுல மட்டும்தான் பாலியல் தொல்லை குறைவு. மற்ற துறைகள்ல நடக்கிறதை நாம பெருசா பேசாததனால, இது பெருசா தெரியுது.''

``தனிப்பட்ட வாழ்க்கையில உங்களுக்கு நடந்த பிரச்னைகள் குறித்து..?"

``நான் ரொம்ப நேர்மையா இருக்கிற ஆள். சினிமாவுக்காக ஒரு முகம், சமூகத்துக்காக ஒரு முகம், பர்சனல் வாழ்க்கைக்காக ஒரு முகம் எல்லாம் எனக்குக் கிடையாது. நான் என் உணர்வுகளை மறைக்க முயற்சி செய்யலை. ஒரு ரிலேஷன்ஷிப் தோல்வியில் முடியும்போது, பலபேர் பொண்ணுங்களைத்தான் தப்பா பேசுவாங்க. நான் அதிகமா டிராவல் பண்றதால, எனக்குச் சோகமே இல்ல; சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சுக்கிறாங்க. இதை நான் சோஷியல் மீடியாவுல பதிவு பண்ணாம அமைதியா இருந்தா, நான் சோகமா இருக்கிறதாவும் என் வாழ்க்கையில நடந்ததை நினைச்சு வருத்தப்படுறதாவும் பேசுவாங்க. சமூகத்துக்காக நான் அப்படி ஒரு முகமூடி போட்டுக்கமாட்டேன். நான் உண்மையா இருக்கேன்; அதனால எல்லாரும் தப்பா நினைக்கிறாங்க. `ஆடை' பட போஸ்டரைப் பார்த்துட்டுச் சிலர் தவறான கமென்ட்ஸ் பண்ணியிருந்தாங்க. ஒரு போட்டோவை எப்படிப் பார்க்கணும்ங்கிறது அவங்கவங்க கண்ணோட்டம். ஆனா, இப்படியான நெகட்டிவ் விஷயங்கள் எப்போவும் என்னை பாதிக்காது. ஏன்னா, என்னைப் பாசிட்டிவா வெச்சுக்க எனக்குத் தெரியும்.''

- சுஜிதா சென்