Election bannerElection banner
Published:Updated:

`நான் கோமா ஸ்டேஜுக்கே போய்ட்டேன்!’ - சூர்யா - ஜோதிகாவுடனான சந்திப்பு குறித்து நெகிழும் அசார்

`நான் கோமா ஸ்டேஜுக்கே போய்ட்டேன்!’ - சூர்யா - ஜோதிகாவுடனான சந்திப்பு குறித்து நெகிழும் அசார்
`நான் கோமா ஸ்டேஜுக்கே போய்ட்டேன்!’ - சூர்யா - ஜோதிகாவுடனான சந்திப்பு குறித்து நெகிழும் அசார்

`நான் கோமா ஸ்டேஜுக்கே போய்ட்டேன்!’ - சூர்யா - ஜோதிகாவுடனான சந்திப்பு குறித்து நெகிழும் அசார்

கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் அசார், நடிகர் சூர்யாவிடம் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கையில் சூர்யா, ஜோதிகா அடங்கிய குடும்ப புகைப்படம்  இருந்தது. எப்போது நிகழ்ந்த சந்திப்பு, எப்படி இருந்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம். ``நான் ஜோதிகாவின் மிகப்பெரிய ரசிகன். நடன ஆசிரியர் சாண்டியிடம், `ஜோதிகா படத்துக்கு கோரியோகிராஃப் பண்ணீங்கனா சொல்லுங்க' என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். ஜோதிகா ஆசிரியையாக நடிக்கும் புதிய படத்தில் சாண்டி டான்ஸ்மாஸ்டராக உள்ளார். அவர் என்னை அழைத்து, இதுகுறித்து தகவல் சொன்னார்.

நான் நேற்று முன்தினம் ஸ்பாட்டுக்குச் சென்று ஜோதிகாவைப் பார்த்துப் பேசினேன். அப்போது சாண்டி, `கலக்கப்போவது  யாரு’ டைட்டில் வின்னர். ஆங்கர். பல்வேறு குரல்களில் பேசி அசத்துவார். குறிப்பாக, சூர்யா குரலை வேற லெவலில் பேசி அசத்துவார்' என்று கூறி ஜோதிகா மேடத்திடம் என்னை அறிமுகப்படுத்தினார். `தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு நான் டப்பிங் கொடுத்துள்ளேன். சூர்யா நடித்த விளம்பரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளேன். சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா பேசிய டையலாக்கைப் பேசி அவங்ககிட்ட காட்டினேன். அதைக் கேட்டு அவர் ஆச்சர்யமடைந்துபோனார். `எப்படி இப்படிப் பேசுறீங்க? அப்படியே இருக்கு' என அருகிலிருந்தவர்களிடம் பூரிப்புடன், `அப்படியே இருக்குல்ல' என்று சொன்னார். தொடர்ந்து என்னிடம், `நீங்க சூர்யாகிட்ட பேசிக் காட்டிருக்கீங்களா?’ என்று கேட்டார். ஓகே நான் ஒருநாள் கூப்ட்டு வர்றேன். பேசிக் காட்டுறீங்களா’னு கேட்டாங்க. `கண்டிப்பா மேடம்’னு சொன்னேன். மறுநாள் சூர்யா வந்துருக்காருனு கூப்டாங்க. உடனே நான் கெளம்பிப்போனேன்.

போகும்போது சும்மா போகக் கூடாதுனு சொல்லிட்டு, ஓவியரா இருக்கும் என் நண்பர் செல்வாவிடம், `சூர்யா, ஜோதிகா, அவங்க பொண்ணு, பையன் நாலு பேரும் சிரிச்சா மாதிரி ஒரு போட்டோ வேணும். போட்டோ புதுசா இருக்கணும். இதுவரை அவங்க நாலு பேரும் கைபோட்டு எந்தப் போட்டோவுலயுமே இல்ல. அத ஒரு பென்சில் ஆர்ட் வரைஞ்சு கொடுங்கனு சொல்லி, அதைக் கொண்டுபோய் கொடுத்தேன். அங்க போய்ட்டு, சூர்யா முன்னாடி கஜினி, சிங்கம், ஆறு பட டையலாக்கைப் பேசிக் காட்டினேன். `எனக்கு உங்கள ரொம்பப் பிடிக்கும் சார்; நான் உங்கள ரொம்ப லவ் பண்றேன் சார் அப்டினு சொன்னேன்'. அதுக்கு அவர், நாம் ஒண்ணும் பண்லங்க அப்பா அம்மாதான் எல்லாத்துக்கும் காரணம்’ அப்டினு சொல்லிக்கிட்டே ஜில்லுனு ஒரு காதல் படம் வந்து 10 வருஷமாச்சுல்ல என்று அந்த ஞாபகத்துக்குள் மூழ்கிப்போனார். `எனக்கும் நெறைய வாய்ஸ் வரும், எனக்கு எங்கப்பா வாய்ஸ் டிஃபால்டா இருக்கு. சில டையலாக் பேசும்போது கமல் உள்ள வந்துருவாரு' என்றார். பிறகு, என்னை பற்றிக் கேட்டார். நான் சூரியன் எஃப்எம்ல ஆர்.ஜே-வா இருந்தேன்.

பிறகு கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர். ஏன்டா தலைல எண்ணெய் வைக்கல படத்துல ஹூரோவா நடிச்சிருக்கேன்னு சொன்னேன். `ஹீரோவா வா?’ என்றார். `கண்டிப்பா நீங்க நல்லா வருவீங்க, கடின உழைப்பு என்னைக்கும் கைவிடாது’ என வாழ்த்தினார். ஜோதிகாவை பார்க்க அடிக்கடி சூர்யா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாராம். பொள்ளாச்சியில் என்.ஜி.டி ஹூட்டிங் முடித்து ஜோதிகாவை பார்க்க வரும்போது, ஜோதிகா என்ன பத்தி சொல்லிருக்காங்க. அப்படி நடந்ததுதான் அந்தச் சந்திப்பு. அந்த சந்திப்பு எனக்கு கோமா ஸ்டேஜ்போல இருந்தது. `உங்களைப்போல ஒரு பொண்ணதான் லவ் பண்ணணும்னு இருந்தேன். உங்க லவ் சக்சஸ் ஆகணும்னு நான் நெறைய தடவ பிராத்தனை பண்ணிருக்கேன்' என்று ஜோதிகாவிடம் கூறினேன். சாண்டி மற்றும் பென்சில் ஆர்ட்டை வரைந்த செல்வா, சூர்யா சாருக்கு நன்றி’’ என்றார் அசார். 
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு