முதன்முதலாக கறுப்பு - வெள்ளப் படங்களை வாங்கி ரிலீஸ் செய்து, சினிமாத் தொழிலில் காலடி வைத்தவர். பின்னர், படங்களின் உரிமையைப் பெற்று விநியோகஸ்தராக வளர்ந்தவர். `பைரவி' படத்தில் நடித்த ரஜினிக்கு, `சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வழங்கியவர்... இப்படியாக சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, பிரமாண்டமான தயாரிப்பாளராக வளர்ந்து நிற்பவர், `கலைப்புலி' எஸ்.தாணு. தனது சினிமாப் பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

``நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, வடசென்னை வண்ணாரப்பேட்டையில் குடித்தனம் இருந்தோம். அங்கே, பாம்பே ஹோட்டல் அருகில் பெரிய சுவரில், வண்ண வண்ண சினிமா போஸ்டர்கள் ஒட்டியிருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்து, ஒருநாள் நாமும் இதேபோல் பிரமாண்டமான போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என்று கனவு காண்பேன்.

1970-ம் ஆண்டில் ஜெமினி, ஏவி.எம், வாகினி ஃபிலிம்ஸ், சுஜாதா ஃபிலிம்ஸ், சத்யா மூவீஸ் என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களே இருந்தன. பிறகு ஏ.எல்.சீனிவாசன், எஸ்.ஏ.ராஜகண்ணு, கே.ஆர்.ஜி ஆகியோர் சினிமாவுக்குள் நுழைந்தனர். அப்போது, சினிமா விளம்பரம் செய்வதில் வித்தகராகத் திகழ்ந்தவர், சிந்தாமணி முருகேசன். அவரைப் போலவே நாமும் இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

1971-ல் மகாலட்சுமி தியேட்டரில் `நாணல்' படத்தையும் அடுத்து `பட்டணத்தில் பூதம்' படத்தையும் வாடகைக்கு எடுத்து காலைக் காட்சி, மதியக் காட்சி திரையிட்டோம். சினிமா வெளியீட்டில் என் முதல் முயற்சி வெற்றி பெற்றதால், அடுத்து ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த `சாரதா' படத்தை பிரின்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் விலைக்கு வாங்கி, ஆறு சென்டர்களில் திரையிட்டேன். அதுவும் வசூலை அள்ளியது. அடுத்து, அதே நிறுவத்தின் `மணப்பந்தல்' படத்தை வாங்கி வெளியிட்டேன். பிறகு, `கவலை இல்லாத மனிதன்' படத்தை வாங்கி ரிலீஸ் செய்தேன். அந்தப் படத்துக்கு, `சென்ற வார வசூலைக் கோணியில் அள்ளிக்கொண்டீர். இந்த வார வசூலுக்குக் கூடை எடுத்துப் புறப்பட்டீரோ?' எனச் சந்திரபாபுவிடம், எம்.என்.ராஜம் சொல்வதுபோல் டிசைன் செய்து நான் வெளிட்ட போஸ்டர், அப்போது பெரிதாகப் பேசப்பட்டது.ஆரம்பத்தில் சரியாகப் போகாத அந்தப் படம், நான் வெளியிட்ட வித்தியாசமான விளம்பரப் போஸ்டரால் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு வார இதழ் இதை `விளம்பரத்தில் நூதன முறை' எனப் பாராட்டியது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த `மலைக்கள்ளன்', `ஒளிவிளக்கு' படங்களின் நெகட்டிவ் உரிமை இப்போதும் என்னிடம்தான் இருக்கின்றது. தொடர்ந்து `ராமன் தேடிய சீதை,' `பல்லாண்டு வாழ்க', நடிகர் திலகம் சிவாஜி நடித்த `குங்குமம்', `பிராப்தம்', `ஞானஒளி,' கே.பாலசந்தரின் `இரு கோடுகள்', `வெள்ளிவிழா' படங்களையும் வாங்கி வெளியிட்ட நான், அந்தக் காலத்திலேயே தூர்தர்ஷனுக்காக சாட்டிலைட் உரிமையை வாங்கிக் கொடுத்தேன்.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன போஸ்டர்கள் அடித்தாலே போதுமானதாக இருந்தது. நான்கு பிட் போஸ்டர்கள் ஒட்டினாலே ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். அப்போது, முதன்முதலாக ரஜினி சார் ஹீரோவாக நடித்த `பைரவி' படத்துக்கு ஆறு பிட் போஸ்டர்கள் ஒட்டினேன். பொதுவாக எல்லோரும் ஒரே டிசைன் போட்டோவைத்தான் போஸ்டருக்குப் பயன்படுத்துவார்கள். `பைரவி' படத்தில் இடம்பெற்ற போட்டோக்களை ஸ்டில்ஸ் ரவியிடம் வாங்கி, ரஜினி சார் பாம்புத் தலையைத் தட்டுவதுபோல, துப்பாக்கியை ஸ்டைலாகப் பிடிப்பதுபோல, ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டிருப்பதுபோல... எனப் பலவிதமான போஸ்டர்களை ஒட்டினேன். அவற்றைப் பார்த்துவிட்டுச் சென்னையில் உள்ள ராஜகுமாரி, பிளாசா, அகஸ்தியா தியேட்டர்களில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.

ராஜகுமாரி தியேட்டருக்குப் படம் பார்க்க ரஜினி வருகிறார் என்பதைச் சொல்ல நான் அங்கு சென்றேன். அங்கே பஞ்சு அருணாசலம், கலைஞானம், இயக்குநர் பாஸ்கர் ஆகியோர் இருந்தார்கள். திடீரென கறுப்பு பேன்ட், ரோஸ் நிற அரைக்கைச் சட்டை அணிந்து, `எங்கே விநியோகஸ்தர்?' என்றபடி வந்தார், ரஜினி சார். எல்லோரும் என்னைக் கைகாட்ட, அருகில் வந்து அணைத்துக்கொண்டார். `ஃபென்டாஸ்டிக், பியூட்டிஃபுல் பப்ளிசிட்டி' என மனதாரப் பாராட்டினார். அப்போதுதான் முதன்முறையாக ரஜினி சாரைச் சந்திக்கிறேன். அடுத்து, சென்னை உரிமை வாங்கிய `அடுத்த வாரிசு' ஹிட்; பிறகு வெளிவந்த `கை கொடுக்கும் கை' படம் எல்லோருக்கும் நஷ்டம் அளித்தது. ஆனால், நான் வாங்கி வெளியிட்ட செங்கல்பட்டு ஏரியாவில் எனக்கு நல்ல லாபத்தைத் தந்தது.

பிறகு, சினிமா தயாரிக்கும் ஆசை வந்தது. என் பார்ட்னர் `கலைப்புலி' சேகரன் ஒரு கதையை வைத்திருந்தார். அதுதான், `யார்?' திரைப்படம். நல்லசக்திக்கும் தீயசக்திக்குமான போராட்டத்தை மையப்படுத்திய அந்தப் படம் பெரிய ஹிட். 1985-ம் ஆண்டு ஆங்கிலப் படத்துக்கும் இணையாக, ஒரு பொம்மையே கொலை செய்வது, புகையை ஒரு கேரக்டராக நடிக்க வைத்தது என நாங்கள் அதில் செய்த பல விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. ’யார்?’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்குமாறு ரஜினி சாரிடம் கேட்க... தன் வீட்டில் இருக்கும் ராகவேந்திரரை கும்பிடுவதைப்போல ஒரு காட்சியில் ரஜினி நடித்தார்.

சென்னை ஃபிலிம் சேம்பரில் `யார்?' படத்தின் 100-வது நாள் விழா நடந்தது. ஜெமினி மேம்பாலத்தைக் கட்டிய யாசின், டி.ராமானுஜம், ஏவி.எம்.சரவணன், ரஜினி சார் ஆகியோர் கலந்துகொண்டார்கள். `பணக்காரன் ஒருவனும் ஏழை ஒருவனும் நண்பர்களாக இருந்தார்கள். பணக்காரனிடம் எப்படிப் பழகவேண்டும் என்ற வித்தை தெரிந்த ஏழை நண்பன்தான் தாணு. இந்த மேடையில் இருப்பவர்களைப் பார்த்தாலே தாணுவின் பழகும் தன்மை தெளிவாகத் தெரியும். விரைவில் தாணு தயாரிக்கும் படத்தில் நான் நடிப்பேன்' என்றார்.

இதற்கிடையில் விஜயகாந்த்தை வைத்து `தெருப்பாடகன்' என்ற படத்தை நானே தயாரித்து இயக்கி, இசையமைத்து, பாடல்களையும் எழுதினேன். `தெருப்பாடகன்' ஆடியோ வெளியீடு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. கலைஞர் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொள்வார் என அறிவித்தேன். கலைஞருக்கு 50 அடியிலும், ரஜினி, விஜயகாந்த்துக்கு 45 அடியிலும் கட்-அவுட்கள் வைத்தேன்.

ஒருநாள் திடீரென ரஜினி சார் ஸ்ரீராகவேந்திரா மண்டபத்துக்கு வரச்சொன்னார்; போனேன். `தாணு, `யார்?' படத்தோட நிகழ்ச்சியில உங்களுக்கு ஒரு படம் பண்ணுவேன்னு சொன்னது ஞாபகமிருக்கா? நான் இப்போ மும்பை போறேன். கதையை ரெடி பண்ணிட்டு, நீங்களும் அங்கே வந்திடுங்க' என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். என்னோடு இருந்த ஒருவர் ஒரே வாரத்தில் உருவாக்கிய கதையுடன் மும்பை கிளம்பினோம். பொறுமையாகக் கதையைக் கேட்ட ரஜினி, `என்ன... தாணு, கமலுக்குச் சொல்ல வேண்டிய கதையை எனக்குச் சொல்றாரே?' என்றார். தொடர்ந்து, `நாளைக்கு ஹைதராபாத்ல இருந்து ஒருத்தர் கதை சொல்ல வர்றார். ஓ.கே ஆச்சுனா, நீங்கதான் தயாரிப்பாளர்' என்றார். ஆனால், அந்தக் கதையும் ஓகே ஆகவில்லை. அதனால், அந்த கால்ஷீட் தேதியை கவிதாலயாவுக்குக் கொடுத்தார். அதுதான் `அண்ணாமலை' திரைப்படம்.

அதற்குப் பிறகு இன்னொரு வாய்ப்பை எனக்கு ரஜினி வழங்கியபோது, அரசியல் சூழலால் என்னால் படம் எடுக்க இயலவில்லை. நான் அப்போதும் தவறவிட்ட வாய்ப்பு, சத்யா மூவீஸ் நிறுவனத்துக்குப் போனது. அந்தப் படம், `பாட்ஷா.'
அப்போதெல்லாம் சினிமாவில் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் என எதுவும் கிடையாது. எல்லாம் நம்பிக்கைதான். புதுப்படத்தை ஒரு தியேட்டரில் ரிலீஸ் செய்தால், அதே பகுதியில் இருக்கும் மற்றொரு தியேட்டரில் புதுப்படம் வெளியிட மாட்டார்கள். மேலும், மனரீதியாகவும் பணரீதியாகவும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திய காலம் அது.

இப்போதெல்லாம் சினிமா எடிட்டிங் அறையில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட சோஷியல் மீடியாவில் வெளியாகி, வைரல் ஆகின்றன. அந்தக் காலத்தில் பூதாகரமான சம்பவம் நடந்தால்கூட வெளியுலகத்துக்குத் தெரியாது.

எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில், புதுப்படங்களுக்குப் பூஜைபோடும் அன்றே தமிழ்நாடு முழுக்க பிசினஸ் முடிந்துவிடும். தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்களுக்குப் பணம் கொடுப்பார்கள். அந்தப் பணத்தை விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களிடம் தருவார்கள். முழுக்க முழுக்க விநியோகஸ்தர்களை தியேட்டர் அதிபர்களே வளர்த்தார்கள். ரஜினி, கமல் காலத்திலும் இதே நிலை நீடித்தது. ஒரு படம் தோல்வியடைந்தால், அந்த நஷ்டத்தைச் சரிகட்டும் விதமாக, அடுத்து தயாரிக்கும் படத்தைக் குறைவான விலைக்குக் கொடுக்கும் பெருந்தன்மையான நிலை இருந்தது.

ஏவி.எம் நிறுவனம் புதுப்படத்துக்குப் பூஜை போட்டால், விநியோகஸ்தர்கள் ரேஷன் கடை வரிசையில் நிற்பதுபோல் நிற்பார்கள். அந்தப் பணத்தை வைத்தே படத்தின் பட்ஜெட், நட்சத்திரங்களின் சம்பளம் அத்தனையும் முடித்துவிடுவார்கள். அப்போது, சினிமாவில் ஃபைனான்ஸியர்கள் என்ற தேவையே இருந்ததில்லை. கந்து வட்டி என்பது கிடையவே கிடையாது. காலப்போக்கில் விநியோகஸ்தர்கள் சிலர், `எக்ஸிபிட்டர்ஸ்'களாக மாறினார்கள். இந்த எக்ஸிபிட்டர்கள் தயாரிப்பாளர்களுக்குத் தரும் முன் பணத்துக்கு வட்டியும் வாங்கிக்கொண்டார்கள். புதுப்படங்களை வெளியிடுவதற்குத் திரையரங்க உரிமையாளர்களிடம் கமிஷனும் வாங்கிக்கொள்கிறார்கள். இதனால், இப்போது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபம் அனைத்தும் தனிநபருக்கே போகிறது. தமிழ் சினிமா, ஆரம்ப காலத்தில் ரிலீஸான திரைப்படங்கள் வருடக் கணக்கில் ஓடின. அதன் பிறகு வந்த படங்கள் மாதக் கணக்கானது. அடுத்து வாரக் கணக்கு. இப்போது சினிமாவின் ஆயுள், நாள் கணக்கில் நிர்ணயிக்கப்படுகிறது.

புதுப்படங்கள் ரிலீஸாகும் அன்றே திருட்டுத்தனமாக ஆன்லைனில் வந்துவிடுவதால், ஏ, பி, சி ஆகிய மூன்று சென்டர்களிலும் ஒரேநாளில் ரிலீஸ் செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்” எனத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சிக்கல் குறித்துப் பகிர்ந்துகொண்டவர், தொடர்ந்தார்...

`` `யார்?' பட விழாவில் என் படத்தில் நடிப்பதாக ரஜினி சார் சொன்னபோது, ஒரு வாரப் பத்திரிகை நிருபர் என்னை நோக்கி, `நீங்க சின்னப் படங்களுக்கே பெருசா விளம்பரம் செய்றீங்க. ரஜினியே கால்ஷீட் தர்றேன்னு சொல்றார். எப்படி விளம்பரம் செய்வீங்க?' எனக் கேட்டார். அப்போது `ரஜினி சார் படத்தின் விளம்பரம் வானத்தில் இருந்து செய்தி வரும்' எனப் பதில் சொன்னேன். 1984-ல் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 2015-ஆம் ஆண்டு விமானத்தில், `கபாலி' பட டைட்டிலோடு ரஜினி சார் முகத்தை வைத்து விளம்பரப்படுத்தினேன். இரண்டு வருடங்கள் ஆகிவிட்டாலும், இன்னமும் `கபாலி' விமானம் கம்பீரமாக வானத்தில் பறந்துகொண்டிருக்கிறது. எல்லோரையும்போல நானும் சந்தோஷமாக அதை அண்ணாந்து பார்க்கும்போது, வண்ணாரப்பேட்டை பாம்பே ஹோட்டல் பெரிய சுவரில் நான் ஆச்சர்யமாகப் பார்த்த சினிமா போஸ்டர் நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன!’’

- எம்.குணா, படம்: வீ.நாகமணி