சினிமா கலை, இலக்கிய வடிவங்களில் மிக முக்கியமானது; எளிமையானது; வலிமையானது. ஒவ்வொரு நாட்டின், மொழியின், இனத்தின் கலாசார, பாரம்பர்யத் தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள, சினிமாதான் முக்கியக் கருவி. அப்படிப்பட்டப் படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பது சிரமமான விஷயம்தான். இந்த மலரில் நீங்கள் தவறவிடக் கூடாத சில உலக சினிமாக்களை அறிமுகம் செய்கிறோம்.

“அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே, `விண்ணுக்கு முதலில் யார் பயணம் செய்வது?' என்கிற போட்டி உச்சத்தில் இருந்த 1960-களைக் களமாகக்கொண்ட கதை இது. அமேசான் நதியில் மனிதத் தோற்றமுடைய வித்தியாசமான உயிரினம் ஒன்று அமெரிக்கர்களுக்குக் கிடைக்கிறது. அதை வைத்து எல்லாச் சோதனைகளும் செய்கிறார்கள். அங்கு வேலை செய்யும் எலிசாவுக்கு (சேலி ஹாக்கின்ஸ்) பேச்சு வராது. அடுக்கடுக்கான பாதுகாப்புகள்கொண்ட அந்தக் கூடத்தில், மலரவே கூடாத இடத்தில், மலரவே கூடாத விதத்தில், மலர்கிறது எலிசாவின் காதல். அதுதானே காதல்! இயக்குநர் கில்லர்மோ டெல் டோரோவின் பெரும்பாலான படங்களில் மெல்லிய அளவிலேனும் ஒரு ஃபேன்டஸி இழை நீண்டுகொண்டே இருக்கும். அதில் வரும் ஃபேன்டஸி கதாபாத்திரத்திற்காக நம்மை ஏங்கவைப்பார். அதை இதிலும் சாத்தியப்படுத்தியிருக்கிறார். சிறந்த இயக்குநர், சிறந்த படம் போன்ற பிரிவுகளில் ஆஸ்கர் விருதைப் பெற்றது ‘தி ஷேப் ஆஃப் வாட்டர்.’ ”

“கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின் ( ஆல் அபவுட் ஈவ் - 1950 , டைட்டானிக் - 1997 ) ஒரு படம் 14 ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் அந்தக் கதையில் எந்தவிதமான பிரமாண்டமும் கிடையாது. காதலும் காதல் நிமித்தமுமான கதை. சினிமாவில் நாயகி ஆகிவிட வேண்டும் என்கிற முனைப்போடு சுற்றும் மியாவாக எம்மா ஸ்டோன். ஜேஸ் இசைக்கலைஞர் செபஸ்டியனாக ரியான் கோஸ்லிங். இருவருக்குமான காதல், ஈகோ, சண்டை, சகலமும்தான் கதை. இறுதியில் இருவரும் தத்தமது துறையில் சாதித்தார்களா, கரம் பிடித்தார்களா என்பதனை அழகியலுடன் சொல்கிறது லா லா லேண்டு. க்ளைமேக்ஸில் வரும் அந்த ஐந்து நிமிட ஃபாஸ்ட் ஃபார்வர்டு காட்சி, கண்டிப்பாக காதலர்களாய் இருக்கும் அனைவரின் மனதிலும் ஓடியிருக்கும். அதுதான் படத்துக்கு இதயங்களை அள்ளிக்குவித்தது.”

மோனா (Moana)

தன்னுடைய போலினேசிய தீவில், தன் மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறாள் சிறுமி மோனா. கடலுக்கு அருகில் செல்ல அந்தக் கிராமம் முழுக்கத் தடை இருந்தாலும், சிறுவயது முதலே கடல் மோனாவைக் கொண்டாடித் தீர்க்கிறது. அந்தத் தடையைப் போக்க டீ-ஃபெட்டி என்னும் தேவதையின் இதயத்தை மீண்டும் மீட்டு, அவளிடம் திருப்பித்தர வேண்டும். தடையைப் போக்க முடிவெடுக்கிறாள் மோனா. அதற்குத் துணையாக அவள் தேர்ந்தெடுப்பது டெமிகாட் மௌயி. இருவரும் சேர்ந்து அங்கு செல்ல, அப்போது நடக்கும் களேபரங்களும், காமெடிகளுமே கதை. ஆப்பிரிக்கச் சிறுமியைக் கதையின் நாயகியாகத் தேர்வு செய்தது, WWE ராக் மௌயி கதாபாத்திரத்துக்குக் குரலுதவி கொடுத்தது என மோனா பலருக்கு ரொம்ப ஸ்பெஷல். படத்தில் வரும் ‘How Far I'll Go’ பாடல், வைரல் ஹிட்.

கொரியாவில் இருக்கும் ஜப்பானிய வாரிசான ஹிடேக்கோவை, அவளின் மாமா கொசுக்கி பாதுகாத்து வருகிறான். ஆனால், அவன் கெட்டவன்; அவளை மீட்க வந்திருப்பதாகக் காதல் வலை வீசும் ஃபுஜிவாராவும் கெட்டவனே. ஹிடேக்கோவின் பணிப்பெண்ணான ஷூ-கியும் கெட்டவள்தான். இவர்களை எல்லாம் கடந்து ஹிடேக்கோ எப்படித் தப்பிக்கிறாள்; அவளுக்கு யார் உதவுகிறார்கள் என்பதைச் சொல்கிறது `தி ஹேண்ட்மெய்டன்.' ‘ஓல்டு பாய், லேடி வெஞ்சன்ஸ், தர்ஸ்ட்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த தென்கொரியாவின் பார்க்-சான் வூ இப்படத்தை இயக்கியிருக்கிறார். நூடுல்ஸ் அளவுக்குக் குழப்பமான கதை. ஆனால், யார் யார் காலை வாருகிறார்கள் என்பதை மிகவும் அழகாகச் சொல்லி, ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்க்கும்போது அதிசயிக்கவைக்கிறார் பார்க் - சான் வூ.

ராக்கி, அலெக்ஸ், மணி - இந்த மூவரும் திருடர்கள். கண் பார்வையற்ற நார்மனின் வீட்டில் மூன்று லட்சம் டாலர் பணம் இருக்கிறது என தகவல் கசிய... நார்மனின் வீட்டுக்குள் நுழைந்து, அதைக் களவாட முடிவு செய்கிறார்கள். ஆனால், அங்கு இருப்பதோ 10 லட்சம் டாலர்கள். கண் பார்வையில்லாத நார்மன், வீட்டிலுள்ள எல்லா விளக்குகளையும் அணைத்துவிடுகிறான். அடுத்து என்ன நடக்கிறது... வீட்டில் இந்த நால்வர் இல்லாமல், வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்... யார் உயிரோடு தப்பித்தார்கள் என்பதை சீட் நுனி த்ரில்லராக தந்திருக்கிறார், உருகுவே இயக்குநர் ஃபிடே அல்வரேஸ் (Fede Alvarez). சில 18 ப்ளஸ் காட்சிகள் இருந்தாலும், சமீபத்தில் வந்ததில் சின்னச் சின்ன திருப்பங்களுடன், இரண்டாம் பாதியிலும் ஆச்சர்யப்பட வைத்த சினிமா இதுதான். தமிழில் ரீமேக் செய்ய பெர்ஃபெக்ட்டான கதைக்களம்!

டைரெல் கார்ப்பரேஷன் எனும் நிறுவனம் வேலைக்காக `ரெப்லிகன்ட்ஸ்'ஸை உருவாக்குகிறார்கள். வேலை செய்யாமல், அடாவடி செய்யும் ரெப்லிகன்ட்ஸை முடித்துக்கட்ட, பிளேடு ரன்னர்களை நியமிக்கிறார்கள். முதல் பாகத்தின் (1982) பிளேடு ரன்னர் (ஹாரிசன் ஃபோர்டு) என்ன ஆனார்; இந்தப் பாகத்தின் பிளேடு ரன்னர் (ரியான் கோஸ்லிங்) மனிதனா அல்லது ரெப்லிகன்ட்டா போன்ற பல கேள்விகளுக்கு, ஆழமாகவும் அழகாகவும் அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாகப் பதில் சொல்லியிருக்கிறது, `பிளேடு ரன்னர் 2049' . அவசரகதியான இந்தச் சூழலில் வெளியான Scifi கிளாஸிக் இந்தத் திரைப்படம். 1982-ல் வெளியான பாகத்தில் 2019-ன் காலகட்டத்திலும், 2017-ல் வெளியான பிளேடு ரன்னர் 2049-ம் ஆண்டைக் காலகட்டமாக வைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. 13 முறை ஆஸ்கர் விருத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர் ரோகர் டீகின்ஸுக்கு இந்தப்படம்தான் ஆஸ்கர் விருதை வாங்கிக் கொடுத்தது.

இந்த உலகம் முழுக்கக் கண்களற்ற உயிரினங்கள் உலவுகின்றன. சத்தத்தின் மூலமே அவை மனிதர்களையும் பிற விலங்குகளையும் வேட்டையாடிக் கொல்கின்றன. இவற்றிடமிருந்து அபாட்டும், கர்ப்பமாக இருக்கும் அவரின் மனைவியும், குடும்பத்தினரும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதை 90 நிமிட திரில்லராக, 2020-ல் நடக்கும் கதையாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜான் கிரஸன்ஸ்கி. ரியல் லைஃப் ஜோடியான ஜான் கிரஸன்ஸ்கியும் எமிலி பிளன்ட்டும் இதில் ரீல் ஜோடிகள். இறுதி விநாடி வரை வித்தியாசமானதொரு சைலன்ட் த்ரில்லர் அனுபவத்தைத் தரவல்லது, `எ கொயட் ப்ளேஸ்.'

அட, நம் ஊர் `கோலமாவு கோகிலா' இல்லை; இது மெக்ஸிகன் அனிமேட்டட் கோகோ. மிகல் என்ற குட்டிச் சிறுவனுக்கு எல்லாமே இசைதான். ஆனால், செருப்புத் தைக்கும் குடும்பத்துக்கு எந்த மொழியிலும் பிடிக்காத ஒரே வார்த்தை கோகோதான். அவன் தாத்தாவின் தாத்தா, இசையில் சாதிப்பதற்காக வீட்டை விட்டுக் கிளம்பிவிட, குடும்பமே இம்முடிவை எடுக்கிறது. கல்லறைத் திருவிழாவில் தன் மூதாதையர்களைச் சந்திக்கும் மிகல், தன் பாட்டனாருக்கு என்ன ஆனது; உண்மையான இசைச் சக்ரவர்த்தி யார் என்பதை வெளிக்கொண்டுவருகிறான். படம் பார்த்ததும், மறைந்த நம் முன்னோர்களின் நினைவுகளை இப்படம் நிச்சயம் எழுப்பும். படத்தில் வரும் ‘உன் போகோ லோகோ’ பாடலும், ‘ரிமம்பர் மீ’ பாடலும் பலரது ஃபேவரைட். சிறந்த அனிமேஷன் திரைப்படம், சிறந்த பாடல் (ரிமம்பர் மீ) ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதைப் பெற்றது கோகோ.

சென்ற ஆண்டு வெளியாகி, ஆஸ்கர் விருதுகளில் சிறந்த கதாநாயகி, சிறந்த துணை நடிகர் விருதுகளை வாங்கி, பலரது பாராட்டைப் பெற்றது இந்தத் திரைப்படம். உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு இந்தப் படம் ஓர் எடுத்துக்காட்டு. மில்ட்ரெட் ஹேய்ஸின் மகள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள். ஏழு மாதங்களாகியும் கொலை செய்தது யார் என போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ஊரில் எல்லோருக்கும் தெரியும்படி, மூன்று பில்போர்டுகளில் கொலை பற்றிய வாசகங்களை எழுதுகிறாள் மில்ட்ரெட். செய்தி, மீடியாக்களுக்குப் பரவுகிறது. மீண்டும் அந்தக் கொலைச் சம்பவம் சூடுபிடிக்கிறது. ஆனாலும், எவ்விதத் தீர்வும் எட்டப்படாமல் நாள்கள் கடக்கின்றன. இறுதியில் என்ன நடக்கிறது என்பதை எமோஷனலாகச் சொல்கிறது, மார்டின் மெக்டோனக் இயக்கிய `த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசௌரி.'

ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ஆக் ஷன் கதை. ஆனால், அதே சூடு குறையாமல் ஒரு காதல் கதை பார்க்க விரும்புபவர்களுக்கு, `ேபி டிரைவர்'தான் நல்ல சாய்ஸ். இந்த இரண்டின் சங்கமம்தான் எட்கர் ரைட் எழுதி இயக்கிய `பேபி டிரைவர்.' பேபியின் காதில் டின்னடஸ் என்னும் பிரச்னை காரணமாக, ரீங்காரம் போன்ற ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். அதைத் தவிர்க்க, அவன் பாடல்கள் கேட்டுக்கொண்டே பிறர் சொல்வதைக் கவனித்துக்கொண்டிருப்பான். ஒரு கொடூரமான பாஸ் (கெவின் ஸ்பேஸி ) செய்யும் கடத்தல்களில் பேபி ( அன்சல் எல்கார்ட் ) தான் டிரைவர். எல்லாவற்றையும் ஸ்மார்ட்டாக முடிக்கும் பேபிக்குச் சோதனை ஆரம்பிக்கிறது. உடன் இருந்த டீம், போலீஸ் என எல்லாம் துரத்த அவர்களிடமிருந்து காதலியைக் காப்பாற்றி எப்படிக் கரம்பிடித்தான் என்பதுதான் பேபி டிரைவர். மின்னல் வேகத் திரைக்கதை, அதிரடியான பாடல்கள், வித்தியாசமான மேக்கிங் போன்றவற்றால் ஈர்க்கிறது பேபி டிரைவர்.

- கார்த்தி