Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

• கே.வி.ஆனந்த் படத்தின் இரண்டாவது ஷெட்யூலை முடித்த சூர்யா, ‘என்.ஜி.கே’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளப்போகிறார். இந்தப் படம் டிசம்பர் இறுதியில் ரிலீஸ் ஆகிறதாம்.

• ராம்குமார் - விஷ்ணு விஷால் காம்போவில் ‘ராட்சசன்’ வெற்றிபெற்றதையடுத்து, இதே கூட்டணியில் ‘முண்டாசுப்பட்டி 2’ உருவாகப் போகிறது. ராம்குமார், தனுஷை இயக்கும் படத்தை முடித்த பிறகு இந்தப் படம் தொடங்குமாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

• ராவணன் தங்கை சூர்ப்பணகையின் வாழ்க்கையைப் படமாக்குகிறார் டோலிவுட் இயக்குநர் பார்கவ். இதில் நடிப்பதாக இருந்த காஜல், கால்ஷீட் பஞ்சாயத்து காரணமாக விலகிவிட்டார். இப்போது படக்குழு, சமந்தாவிடம் கதை சொல்லியிருக்கிறதாம்.

மிஸ்டர் மியாவ்

• கர்நாடகாவின் ஆலூர் என்ற கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியைத் தத்தெடுத்திருக்கிறார் ப்ரணிதா. கழிவறை இல்லாததால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை என்பதால், முதல்கட்டமாக அப்பள்ளியில் கழிவறை கட்டச் சொல்லியிருக்கிறாராம்.

• பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் விஜயலட்சுமி ஒரு புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். சிம்புதேவன் இயக்கும் இப்படத்தை வெங்கட்பிரபு தயாரிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• நடிகைகள் பலரும் #MeToo ஹேஷ்டேக்குடன் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை வெளியில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ‘‘என் சிறு வயதில் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அந்த வயதில் எனக்கு எதுவும் தெரியவில்லை. குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்து வளர்த்தாலே பல பிரச்னைகளை தவிர்க்கலாம்” என்று கூறியிருக்கிறார் ரித்விகா.

மிஸ்டர் மியாவ்

• ‘சில சமயங்களில்’ படத்தைத் தொடர்ந்து, பிரியதர்ஷன் இயக்கும் நெட் ஃபிளிக்ஸ் படத்துக்கு ‘தி இன்விஸிபிள் மாஸ்க்’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் லீட் ரோலில் பூஜா குமார் நடிக்கிறார்.

கேள்வி கார்னர்

ங்கள் பெயரில் இருக்கும் சோஷியல் மீடியா பக்கங்களை ஃபாலோ செய்வதுண்டா?

மிஸ்டர் மியாவ்

கீர்த்தி சுரேஷ்: ஃபாலோ பண்றேன். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ட்விட்டரில் ரசிகர்களுடன் சாட் பண்றதை வழக்கமா வெச்சிருக்கேன். என் பெயர்ல இருக்கும் சோஷியல் மீடியா பக்கங்களைப் பார்க்கும்போது, என் ரசிகர்கள் என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கன்னு தெரியுது.

சைலன்ஸ்

தரவற்ற குழந்தைகளின் ரட்சகியான நடிகை, புளிப்பு மிட்டாய் சாப்பிட்ட மாதிரி புன்னகை பூப்பதில் கில்லேடி. நடிகையின் பரந்த மனத்தை எல்லோரும் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் வருமானவரிக் கணக்கு காட்டத்தான் இதைச் செய்கிறார் என நடிகைக்கு நெருக்கமானவர்கள் கண்சிமிட்டுகிறார்கள்.

ற்கெனவே ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்தபோது, அரசியல் வாரிசு நடிகர் கொடுத்த அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தராமல் டிமிக்கி கொடுத்தார் ஸ்வீட் நடிகை. இப்போது நடிகையின் கைவசம் தமிழ்ப் படங்கள் இல்லை. எனவே, தமிழ்ப்பட சான்ஸுக்காக அரசியல் வாரிசு நடிகருக்கு தூது விடுகிறது அந்த ஸ்வீட் ஸ்டால்.

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

ஷில்பா மஞ்சுநாத்:
மிஸ் கர்நாடகா அழகிப் போட்டியில கலந்துக்கிட்டேன். அந்தப் போட்டியின் ஃபைனல் ரிசல்ட்டை அறிவிக்கிறதுக்கு முன்னாடி ஒரு பதற்றத்தை கிரியேட் பண்ணுவாங்கல்ல, அப்போ எடுத்த போட்டோ இது. இந்த போட்டோ எடுத்த சில நிமிடங்கள்ல எனக்குதான் ‘மிஸ் கர்நாடகா’ பட்டம்னு அறிவிச்சாங்க. ஒரு நடிகையா நான் இப்போ இருக்கிறதுக்கு அந்த நாள்தான் காரணம். ஸோ, இந்த போட்டோ எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism