Published:Updated:

`அதற்காக நான் இன்னும் வருத்தப்படுகிறேன்’- மனம் திறந்த கரீனா கபூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`அதற்காக நான் இன்னும் வருத்தப்படுகிறேன்’- மனம் திறந்த கரீனா கபூர்
`அதற்காக நான் இன்னும் வருத்தப்படுகிறேன்’- மனம் திறந்த கரீனா கபூர்

`அதற்காக நான் இன்னும் வருத்தப்படுகிறேன்’- மனம் திறந்த கரீனா கபூர்

பொதுவாக சினிமாத் துறையில் உள்ள பல நடிகர், நடிகைகள் தங்களின் படிப்பை முடிக்கும் முன்னரே சினிமாவில் நடித்து பெரும் நட்சத்திரமாக மாறுகின்றனர். அதன் பின் பலருக்கு தங்கள் படிப்பைத் தொடர முடியவில்லை எனக் கூறி நாம் கேட்டதுண்டு. அதேபோல் பாலிவுட் நடிகை கரீனா கபூர் தன் படிப்பு குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் ரேடியோ ஒன்றில் பேசிய நடிகை கரீனா, ``என் நடிப்பு வாழ்க்கையைச் சற்று பொறுமையாக தொடங்கியிருக்கலாம் எனப் பலமுறை யோசித்துள்ளேன். 17 வயதிலேயே நான் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன். இன்னும் படித்திருக்கலாமோ என இப்போது வேதனைபடுகிறேன். அதற்காக நான் இன்றளவும் வருத்தப்படுகிறேன். 

ஆனால், இப்போது உள்ள காலகட்டத்தில் படிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. நான் பட்டப்படிப்புகூட முடிக்கவில்லை. ஆனால் என் மகன் தைமூரை அப்படி இருக்க நான் அனுமதிக்க மாட்டேன். அவனை நிறைய படிக்கவைப்பேன். அதன் பின் அவனுக்கு என்ன தேவையோ  அதை அவனே தேர்ந்தெடுக்கட்டும். தைமூரை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதே என் ஒரே ஆசை” எனத் தெரிவித்துள்ளார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு