Published:Updated:

தனுஷை `அசுரன்’ ஆக்கும் வெற்றிமாறன்!- அடுத்த ஹிட்டுக்கு ரெடியாகும் கூட்டணி

தனுஷை `அசுரன்’ ஆக்கும் வெற்றிமாறன்!- அடுத்த ஹிட்டுக்கு ரெடியாகும் கூட்டணி
தனுஷை `அசுரன்’ ஆக்கும் வெற்றிமாறன்!- அடுத்த ஹிட்டுக்கு ரெடியாகும் கூட்டணி

வெற்றி மாறன் - தனுஷ் வெற்றிக் கூட்டணியின் 3-வது திரைப்படம்தான் `வடசென்னை’ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. 


 

சென்னை வளசரவாக்கத்தில் தனுஷ், வெற்றி மாறன், அமீர், சந்தோஷ் நாராயணன், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


 

வடசென்னை ரிலீஸாவதற்கு முன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய அமீர் பல்வேறு முக்கியத் தகவல்களை போட்டுடைத்தார். அதில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் அடுத்த படம் பற்றியும் பேசியிருந்தார். வெற்றிமாறன் குறித்து அவர் பேசுகையில், `வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியின் 3-வது படம் `வடசென்னை'. ஒரு இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் 3 படத்துக்கான நட்பு சினிமாவில் பார்க்க முடியாத அரிதான ஒன்று. சில இயக்குநர்கள் ஒரு திரைப்படம் முடிந்ததுமே ஹீரோவுடன் ஈகோ பிரச்னை வந்துவிடுகிறது. ஆனால், வெற்றி மாறனால் மட்டும்தான் ஒரு நடிகருடன் எந்தப் பிரச்னையுமின்றி 3  படங்களைக் கொடுக்க முடியும். மேலும் அவரால் மட்டும்தான் தனுஷை வெவ்வேறு டைமன்ஷனில் காட்ட முடியும். தனுஷை வைத்து இயக்கப்போகும் அடுத்த படத்தின் கதையையும் வெற்றி மாறன் என்னிடம் சொல்லிவிட்டார். மிகவும் சிறப்பாக இருக்கிறது’ என்று முடித்தார் பிரமிப்புடன்.  

அமீர் கூறியதுபோல் வெற்றிமாறன் தனுஷை வெவ்வேறு டைமன்ஷனில் காட்டி வருகிறார். வடசென்னை ரிலீஸை தொடர்ந்து, தற்போது இந்த வெற்றிக் கூட்டணியின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கு `அசுரன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.


 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் தனுஷ், `மாரி 2 படத்தின் வெற்றிச் செய்தி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், எனது அடுத்த படமான `அசுரன்' அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி. வெற்றிமாறன் இயக்க, தாணு சார் தயாரிக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனோடு `அசுரன்' ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்.