Published:Updated:

மாஸ்! மாஸ்!! மாஸோ மாஸ்!!! மாஸுக்கெல்லாம் மாஸ்!!!! அப்படியிருக்கிறது #KGF

கார்த்தி
ப.சூரியராஜ்
மாஸ்! மாஸ்!! மாஸோ மாஸ்!!! மாஸுக்கெல்லாம் மாஸ்!!!! அப்படியிருக்கிறது #KGF
மாஸ்! மாஸ்!! மாஸோ மாஸ்!!! மாஸுக்கெல்லாம் மாஸ்!!!! அப்படியிருக்கிறது #KGF

ஓர் ஏழைச் சிறுவன் எப்படி டான் ஆகிறான் என்னும் ஒன்லைனை வைத்து மீண்டும் ஒரு திரைப்படம். ஆனால், அதன் மாஸ் மொமன்ட்டுகளில் தெறிக்கவிடுகிறது இந்த #KGF

1951ல் இரு சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒன்று ராக்கி என்னும் ராஜா பிறக்கிறான். இன்னொன்று கோலார் தங்க சுரங்கங்களில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த ஒட்டுமொத்த தங்க சாம்ராஜ்யத்துக்கும், ராக்கி எப்படி தலைவனாகிறான் என்பது தான் KGF. 

சிறுவயதில் ராஜாவுக்கு பாலுக்கு பதில் லட்சியத்தை ஊட்டி வளர்க்கிறார், அவனது தாய். " நீ எப்படி வாழப்போறியோ எனக்குத் தெரியாது.ஆனா சாகும்போது, இந்த உலகமே மதிக்குற பெரிய பணக்காரனத்தான் சாகணும்' என சத்தியம் வாங்கிவிட்டு மர்கயா ஆகிவிடுறாள். ராஜாவின் ஒரே குறிக்கோள் பணக்காரன் ஆவது.

தமிழ் மாஸ் படங்களில் நான்கு மாஸ் மொமன்ட் காட்சிகள் இருந்தாலே அதிகம். தெலுகு என்றால், ஒரு எட்டு இருக்கலாம். 170 நிமிட KGF முதல் பாகத்தில் 150 நிமிடங்களுக்கு மாஸ் காட்சிகள் மட்டும் தான். 

மாஸ்! மாஸ்!! மாஸோ மாஸ்!!! மாஸுக்கெல்லாம் மாஸ்!!!! அப்படியிருக்கிறது #KGFஏழு வயது சிறுவனான ராஜா போலீஸ் தலையில் பீர் பாட்டிலை அடித்துவிட்டுச் செல்கிறான். அனைத்து போலீஸும் அவனை அந்த ஏரியா முழுக்க தேடுகிறார்கள். அசால்ட்டாக மீண்டும், அந்த மொட்டைத் தலை போலீஸ் அடிபட்டு , விழுந்துகிடக்கும் இடத்துக்கு வருகிறான் ராஜா. " அடிச்சது யாருன்னு உனக்கு தெரியாதுல்ல. அதான் . அடிச்சது ராக்கி " என சொல்லிவிட்டு, மீண்டும் இன்னொரு பாட்டிலால் அடிக்கிறான்.ராக்கி கதாப்பாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும், மாஸைக் கூட்டிக்கொண்டே இருக்கிறது.

ராக்கியாக கன்னட நடிகர் யாஷ். அடியாளின் கையை உடைத்து, அதிலேயே தன் தலைமுடியை கோதும் அளவுக்கு மாஸ் காட்டுகிறார் மனிதர். படத்தின் ஒரே ரிலீஃப் காதல் காட்சிகள் தான். இவர் செய்யும் ரொமான்ஸ் எல்லாம் குபீர் சிரிப்பு ரகம். கன்னட ரசிகர்களுக்குப் பிடிக்கும் போல. நாயகி ரீனாவாக அறிமுக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. மீந்துபோகும் ஒரு பாட்டில் சரக்கை யார் குடிப்பது என்பதில் தான் ஹீரோ, ஹீரோயினுக்கு காதலே வருகிறது.  மற்ற அனைத்து நடிகர்களுமே தாடிக்குள் தங்கள் முகங்களை புதைத்து வைத்திருப்பதால், யார் எவரென கண்டுபிடிக்க சற்று சிரமமாக இருக்கிறது. இந்த முழு கதையையும் பொறுமையாகக் கேட்கும் நபராக மாளவிகா ( ஜே ஜே படத்துல வருவாங்களே ) நடித்திருக்கிறார். 

குஷ்கா சாப்பிடலாம் என வரும் பாய் ஒருவர், ராக்கி ஒரு கும்பலிடம் பிடிபட்டுவிட்டான் என்றதும், ஜாலியாக பிரியாணி சொல்லு என்கிறார். தட் ஸ்கெட்ச் ராக்கிக்கு இல்ல கும்பலுக்கு மொமன்ட். தமிழ் வசனங்கள் எழுதியவரின் கைகளில் 'மாஸ்' என பச்சை குத்த வேண்டும். " நான் பத்து பேர அடிச்சு டான் ஆகல.நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்." " காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு, கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும் "." யுத்தத்துல யாரு மொதல்ல அடிக்கறாங்கறது கணக்கில்ல. மொதல்ல யாரு கீழ விழறங்கறது தான் கணக்கும். " கேங்க கூட்டிட்டு வர்றவன் கேங்ஸ்டர்.. ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர் " " கொஞ்ச சிதறுர ரத்தத்தே பார்த்தே நீ பயப்படறேன்னா, இனி இங்க ரத்த ஆறே ஓட போகுது ". ஆனால், டப்பிங் அவசரத்திலோ என்னவோ, மாரி2வில் வந்த If you are bad, I am Your dad எல்லாம் எடுத்து விளையாடியிருக்கிறார்கள். இல்லை, ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருந்து எடுத்திருப்பாங்களோ. இன்டெர்வல்லில், நாமே ஸ்நேக்ஸ் கவுன்டரில், " ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ்னா மசாலா இருக்கணும். மசாலானா பாப்கார்ன் இருக்கணும். பாப்கார்ன் மசாலா எங்கடா " என ஹை டெசிபலில் கத்த வேண்டியதிருக்கிறது.

மாஸ்! மாஸ்!! மாஸோ மாஸ்!!! மாஸுக்கெல்லாம் மாஸ்!!!! அப்படியிருக்கிறது #KGF


டிரெய்லர் வெறு சாம்பிள் தான்மா என்பது போல், ஒவ்வொரு ஃபிரேமிலும் செட்டும், பின்னணி இசையும், ஸ்டன்ட் காட்சிகளும் படத்தின் மாஸோ மாஸ் மொமன்ட்டுகளை ஏகத்துக்கும் கூட்டுகிறது. மாஸ் மட்டும் தான் படமா என்றால் சத்தியமாக இல்லை. நான்லீனியராக சொல்லப்படும் திரைக்கதை சுவாரஸ்யத்தைக் கூட்டவே செய்கிறது. நேரம் செல்ல செல்ல, விலகும் முடிச்சுகள், புதிதாக வரும் வில்லன்கள், KGF நிலத்தின் அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும் அரசியல் சதுரங்க வேட்டைகள் என அதகளம் செய்கிறது பிரசாந்த் நீலின் திரைக்கதை. காதல் காட்சிகள், தமன்னாவின் ஐட்டம் டான்ஸ் பாடல் என சில கன்னட காம்ப்ரமைஸ் இருந்தாலும், அதையெல்லாம் கடந்து ஈர்க்கிறது இந்த #KGF . புவன் கௌடாவின் ஒளிப்பதிலும், ஷிவகுமாரின் கலை இயக்கத்திலும் அல்லு கிளப்புகிறது கோலார் தங்க சுரங்கத்தின் செட். கழுகுப் பார்வையில் விரியும் ஒவ்வொரு ஃபிரேமும் பட்டாசு. பாடலின் வரிகள் புரியவில்லை என்றாலும், கன்னடத்தில் கேட்க கூஸ்பம்ப் ஏற்றுகிறது. 

மாஸ்! மாஸ்!! மாஸோ மாஸ்!!! மாஸுக்கெல்லாம் மாஸ்!!!! அப்படியிருக்கிறது #KGFஇரண்டாயிரம் பேரைக் கொன்றாலும், ராக்கிக்கு ஒரு கீறல் கூட விழாது என ஆண்டாண்டு காலமாய் இருக்கும் கேங்ஸ்டர் பட லாஜிக்குகளுக்கு KGF மட்டும் விதிவிலக்கல்ல. அதே போல் புனைவு என்பதால், KGF என்னும் இடத்தின் கதையை கொத்துப் பரோட்டா ஆக்கிவைத்திருக்கிறார்கள்.

மாஸ் ரசிகர்களுக்கு செம்ம தீனி போடும் #KGFன் இரண்டாம் பாகத்தைக் காண ரத்தம் படிந்த கைகளோடும் மண்ணில் புதைந்த முகங்களோடும் வெறித்தன வெயிட்டிங்.
 

அடுத்த கட்டுரைக்கு