Published:Updated:

மாரி vs மாரி-2..! யார் வின்னர்? மாரி2 விமர்சனம்

மாரி vs மாரி-2..! யார் வின்னர்? மாரி2 விமர்சனம்

மாரி vs மாரி-2..! யார் வின்னர்? மாரி2 விமர்சனம்

மாரி vs மாரி-2..! யார் வின்னர்? மாரி2 விமர்சனம்

மாரி vs மாரி-2..! யார் வின்னர்? மாரி2 விமர்சனம்

Published:Updated:
மாரி vs மாரி-2..! யார் வின்னர்? மாரி2 விமர்சனம்

சாவின் கடவுளுக்கும் சாவைப் பற்றி கவலையே படாதவனுக்கும் இடையே நடக்கும் `டமால் டுமீல்' யுத்தமே `மாரி -2'.

மாரி vs மாரி-2..! யார் வின்னர்? மாரி2 விமர்சனம்

``லவ்வெல்லாம் நம்ம கேரக்டருக்கு செட்டாவாது. நமக்கு இந்தப் புறாங்கெல்லாம் இருக்குது, பசங்க இருக்குறானுங்க. போர் அடிச்சா தொல்லை கொடுக்க ஏரியா ஜனங்க இருக்குறாங்க. நான் ஃப்ரீயா ஜாலியா இதே மாதிரி இருந்துருவேன்" என ஶ்ரீதேவியிடம் சொல்லிவிட்டு மாஸாக ஹை ஸ்பீடில் நடந்துசென்ற மாரியின் வாழ்க்கையில் அடிதாங்கி, சனிக்கிழமையைத் தவிர, அவன் சொன்ன யாரும், எதுவும் உடனில்லை. மாரியின் காட்ஃபாதர் `நிலக்கரி' வேலு இறப்புக்குப் பின், `ஏரியா யார் கன்ட்ரோல்' என்பதில் வேலுவின் மகன் கலைக்கும் தாதா சிங்கையாவுக்கும் இடையே முட்டிக்கொள்கிறது. கலை, மாரியின் ஜிகிடி தோஸ்த். ஆக, மாரி இருக்கும்வரை கலையைத் தொட முடியாது என்பதால், மாரியைப் போட்டுத்தள்ளும் முயற்சிகள் சென்சுரி அடிக்கின்றன. இன்னொரு பக்கம், மாரியைக் கொல்வதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கும் பீஜாவும் சிறையிலிருந்து தப்பிக்கிறான். இப்படித் தன் ரத்தம் பார்க்க சுற்றி நிற்கும் கத்தி, அரிவாள், தோட்டாக்களிலிருந்து மாரி தப்பித்தானா, இல்லையா என அடுத்த 16 ஆண்டுகளுக்கு மாரியின் வாழ்க்கையில் நடக்கும், நடக்கப்போகும் கதையைக் காலத்தோடு மல்லுக்கட்டிச் சொல்லியிருக்கிறார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்ட் படமோ, கமர்ஷியல் படமோ... தனது பெஸ்ட்டைக் கொடுக்க தனுஷ் தவறுவதில்லை. மாரியாக மீண்டுமொரு முறை செமத்தியாகச் செய்திருக்கிறார். நக்கல், நையாண்டி, குறும்பு, கிண்டல், எகத்தாளம் போன்ற வார்த்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை வெளிக்காட்டி வெளுத்துவாங்கியிருக்கிறார், தனுஷ். இரண்டாம் பாதியில் வரும் அந்த ஆஸ்பத்திரி காட்சி, உச்சம். திரையில் தனுஷ் தெரியவே இல்லை, மாரி மட்டும்தான் தெரிகிறான். சூப்பர் ஹீரோ ஃபார்மேட்டில் மாரியின் கதாபாத்திரத்தை வடிவமைத்து தமிழகத்துக்கு ஓர் டெட்ப்பூலை வழங்கியிருக்கிறார், இயக்குநர். ஏரியாவுக்கே டார்ச்சர் கொடுப்பது மாரி, அந்த மாரிக்கே டார்ச்சர் கொடுக்கும் `அராத்து' ஆனந்தியாக சாய் பல்லவி. சனிக்கிழமை பேச்சைக் கேட்டு, மாரியை இம்ப்ரெஸ் செய்ய அவர் கொடுக்கும் `நளினமான வாக்'கும் `லைம்' பேச்சும் செம ரகளை. `துறுதுறு'வென ஹார்டின்களை அள்ளியிருக்கிறார். `ரவுடி பேபி' பாடலில் தனுஷை டாமினேட் செய்யும் அளவுக்கு தனது குத்தாட்டை வெளிக்காட்டினார், சாய் சாய்!

மாரி vs மாரி-2..! யார் வின்னர்? மாரி2 விமர்சனம்

மாரியின் நண்பன் கலையாக கிருஷ்ணா. தனக்குக் கொடுக்கபட்ட பாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். வில்லன் பீஜாவாக டோவினோ தாமஸ். தங்கப்பல், ஜடைமுடி, உடலெல்லாம் டாட்டூ என அவரின் லுக் செம! மற்றபடி, முதல் பாகத்தில் விஜய் யேசுதாஸ் என்ன செய்தாரோ அதையேதான் இவரும் செய்திருக்கிறார். பல சமயங்களில் `இவர் ஒரு முரட்டு வில்லன்' என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்துவிடுகிறது. ரோபோ சங்கர் மற்றும் கல்லூரி வினோத் இடையிடையே கொடுக்கும் கவுன்டர் காமெடிகள் ரசிக்கவைக்கின்றன. வரலெட்சுமி, மாஸ்டர் ராகவன், வித்யா ப்ரதீப், `சங்கிலி' முருகன், `அறந்தாங்கி' நிஷா என மற்ற நடிகர்களும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். 

`மாரி'யின் பாசிட்டிவ் அம்சங்கள் அத்தனையும் அழுங்காமல் குழுங்காமல் அளவு குறையாமல் `மாரி 2'வுக்கு எடுத்து வந்திருக்கிறார். இருப்பினும் கதையெனப் பார்த்தால் அதே `பாட்ஷா', `நாயகன்' டைப் கதைதான் மாரியுடையதும். சின்ன வித்தியாசம் இதில் `அப்சைடு டவுன்' திரைக்கதையை அப்ளை செய்திருக்கிறார், இயக்குநர் பாலாஜி மோகன். முதல் பாதியில் விறுவிறுவென நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் அப்படியே அடங்கி உட்கார்ந்துவிடுகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகளையும் எளிதாக கணிக்க முடிந்தது. போக, இரண்டாம் பாதி முழுக்க `இன்ஃபார்மர், இன்ஃபார்மர்' என்ற வசனமும், விறுவிறுப்பும் மட்டுமே வந்து போகிறது. இறுதியில் அந்த டிவிஸ்ட்டையும்  சரிவரப் பயன்படுத்தாமல் ஏப்ரல் ஃபூல் சொல்லிவிடுகிறார், இயக்குநர். `மாஸ் ஓவர்டோஸ்'தான் முதல் மாரியின் முக்கியக் குறை. அதில் செய்த அதே தவற்றை `மாரி 2'விலும் செய்திருக்கிறார்கள். எல்லாக் காட்சிகளும் மாரியின் மாஸ் மொமன்டுக்காகக் காத்திருந்து, காத்திருந்து முடிகிறது. `மாரி' பேசும் வசனங்கள் பெரும்பாலும் முதல் பாகத்திலிருந்து அப்படியே கடத்தப்பட்டிருப்பதால், எளிதில் கணித்துவிட முடிகிறது. ``பொண்ணுங்க என்ன பொருளா", ``ஊர்ல பொண்ணுங்க என்னென்னமோ சாதிக்குது. நீ என்னடான்னா சமைச்சுப் போடுறேன், வீட்டைப் பெருக்குறேங்கிற" போன்ற வசனங்கள் தரம். தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு வரும் சம்பிரதாயம், கமர்ஷியல் படங்களில் லாஜிக் எதிர்பார்க்கக் கூடாது என்பது. இருந்தாலும், போலீஸிடமிருந்து தப்பிக்கும் பீஜா, ஊருக்குள் எந்த பயமுமின்றி போக்குவரத்துமாக இருக்கிறார். போலீஸ் என்ன உறங்குகிறதா? 

மாரி vs மாரி-2..! யார் வின்னர்? மாரி2 விமர்சனம்

முதல் பாகத்தில் மாஸ் மொமன்ட்டுகளை மலையுச்சியில் தூக்கி நிறுத்தியது, அனிருத்தின் பி.ஜி.எம். அந்த உயரத்தில் நின்றுகொண்டு தனுஷ் `செஞ்சுருவேன்' என்று சொல்லும்போதெல்லாம் சிலிர்த்துபோய் சில்லறையை விட்டெறிந்தது ரசிகர்கள் கூட்டம். அந்தக் கூட்டத்தை அப்படியே தக்கவைத்துக்கொண்டது, யுவனின் இசை. ஆல்ரெடி வெளிவந்த மூன்று பாடல்களும் ஹிட்! அதோடு சேர்த்து பி.ஜி.எம்மும் அப்ளாஸை அள்ளியிருக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளில் தனி கவனம் பெறுகிறது. படத்தில் நிறைய சண்டைக் காட்சிகளிருந்தும், அவை படமாக்கப்பட்டுள்ள விதம் அலுப்பு உண்டாக்காமல் காப்பாற்றியிருக்கிறது. கமர்ஷியல் படங்களுக்கான கத்தரியைச் சரியாக எடுத்துக் கத்தரிருத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே. ஆனால், அதுவும் மாரியின் மாஸ் மொமன்ட்களுக்காகக் கொஞ்ச நேரம் காத்திருக்கிறது. `ரௌடி பேபி' பாடலில் அசத்தியிருக்கிறார் கொரியோகிராஃபர் பிரபுதேவா. `மாரி' என்றதும் நினைவுக்கு வருவது வட்டக் கண்ணாடியும், பூப்போட்ட சட்டைகளும்தாம். அப்படி, `மாரி 2'வில் மாரிக்கு மட்டுமல்லாது பீஜா, கலை, அராத்து ஆனந்தி என எல்லோருக்கும் தனித்தனி ஸ்டைல் கொடுத்திருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர், வாசுகி பாஸ்கர். அமரனின் கலை இயக்கம் படத்தின் ஃப்ளேவரைக் கூட்டியிருக்கிறது. 

முதல் பாகம் போலவே 'செஞ்சிருக்கும்' மாரிக்கு கங்கிராட்ஸ். நெக்ஸ்ட் ரவுண்ட் எப்போ மாரி?

கனா விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism