Published:Updated:

`வெள்ளைக்காரன் மொழியாகத் தமிழ் இருந்திருந்தால்?' -  ஹிட் அடிக்கும் நந்தாவின் `ழகரம்' டிரெய்லர்!

`வெள்ளைக்காரன் மொழியாகத் தமிழ் இருந்திருந்தால்?' -  ஹிட் அடிக்கும் நந்தாவின் `ழகரம்' டிரெய்லர்!
`வெள்ளைக்காரன் மொழியாகத் தமிழ் இருந்திருந்தால்?' -  ஹிட் அடிக்கும் நந்தாவின் `ழகரம்' டிரெய்லர்!

நடிகர் நந்தா, ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் பிசியாகியுள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், `ழகரம்'. அறிமுக இயக்குநர் க்ரிஷ் இயக்க, கதிரேசன் என்பவர் தயாரித்துள்ளார்.

கதாநாயகியாக குரியாகோஸ் என்பவர் நடித்துள்ளார். கவா கம்ஸ் எழுதிய 'ப்ராஜெக்ட் ஏகே' என்ற புத்தகத்தைத் தழுவி கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார்.விசாகப்பட்டினம், சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரியிலும் ஷூட்டிங் நடத்தப்பட்டது. சிறுசிறு குறிப்புகளைக் கொண்டு ஒரு புதையலைத் தேடிப்போகும் இளைஞர்கள், அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா என்பதை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

இதற்காக, திருவிடந்தையில் செட் அமைத்து காட்சிகள் படமாக்கப்பட்டது.  படப்பிடிப்பு முடிந்துவிட்டநிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இசை, காட்சி அமைப்புகள், படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதையலைத் தேடும் கதையம்சம்கொண்ட `மரகத நாணயம்' `குலேபகாவலி' போன்ற திரில்லர் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்துவருகிறது. அந்த வரிசையில் தற்போது, `ழகரம்'  இணைந்துள்ளது.