Published:Updated:

`நான்கு விதமான காதல் கதை'! - சமுத்திரக்கனியின் `சில்லுக் கருப்பட்டி' டீசர்

`நான்கு விதமான காதல் கதை'! - சமுத்திரக்கனியின் `சில்லுக் கருப்பட்டி' டீசர்
`நான்கு விதமான காதல் கதை'! - சமுத்திரக்கனியின் `சில்லுக் கருப்பட்டி' டீசர்

சமுத்திரக்கனி, சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள `சில்லுக் கருப்பட்டி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான `தொண்டன்' படத்தில் அவருடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்தார் நடிகை சுனைனா. இந்தப் படத்தில் சுனைனா நடிப்பு பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு `சில்லுக் கருப்பட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. `பூவரசம் பீப்பீ' படத்தை இயக்கிய ஹலீதா ஷமீன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி, சுனைனாவுடன் `ஓகே கண்மணி' படப் புகழ் லீலா சாம்சன், `தெய்வத்திருமகள்' சாரா அர்ஜூன், காலா மணிகண்டன் ஆகியோரும் நடிக்கின்றனர். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என நான்கு ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வசனங்கள் ஏதும் இல்லாமல் இசையுடன் காதல் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த டீசர் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா இணைந்து வெளியிட்டனர்.