பிரீமியம் ஸ்டோரி

• சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘மாயோன்’. கிஷோர் இயக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார். சிபிக்கு ஜோடி, நடிகை தன்யா ரவிச்சந்திரன்.

மிஸ்டர் மியாவ்

• கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘கண்ணாடி’ என்னும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அன்யா சிங் நடித்துள்ளார். ரொமான்டிக் த்ரில்லர் ஜானர் படமான இதன் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும்.

• டாப்ஸி சமீப ஆண்டுகளாக பாலிவுட்டில் கோலோச்சுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழில் நடித்துவரும் அவர், “மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்டகால
ஆசை. அவர் ஹீரோயினைக் காட்சிப்படுத்தும் விதம் மிகவும் பிடிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரின் ஆகியோர் நடிக்கும் ‘Fun and Frustation’ படத்தின் இரண்டு ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவுபெற்றுள்ளது. இதை பாங்காக்கில் கொண்டாடியது படக்குழு. உற்சாகமான இந்தக் காட்சியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமன்னா. 

மிஸ்டர் மியாவ்

• விழுப்புரம் மாவட்டம் செவலபுரை கிராமத்தில் பழுதடைந்த அரசுப் பள்ளியை நடிகர் ராகவா லாரன்ஸ் புதுப்பித்துக் கொடுத்துள்ளார். பள்ளியைத் திறந்துவைத்த நடிகை ஓவியா, “நானும் அரசுப் பள்ளியில் படித்தவள்தான். தன்னம்பிக்கை இருந்தால் யாரும் பெரிய ஆளாக வரலாம். அரசுப் பள்ளிகளை நடிகர், நடிகைகள் தத்தெடுக்க முன்வரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

மிஸ்டர் மியாவ்

• நடிகை ஷகீலாவின் பயோபிக் உருவாகிவருகிறது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கும் இப்படத்தில் ஷகீலாவாக பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடித்துவருகிறார். அதற்காக, ஷகீலாவுடன் பழகி அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் கேமியோ ரோலில் ஷகீலாவும் நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்: 
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, உங்களுக்குள் ஏதேனும் மாற்றம்..?

ஜனனி ஐயர்:
எங்க வீட்ல எல்லாரும் என்கிட்ட ரொம்பப் பாசமா நடந்துப்பாங்க. எனக்குள்ளேயும் பாசம் இருந்தாலும் நான் அதிகமா வெளிக்காட்டிக்க மாட்டேன். பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிட்டு வந்தபிறகு நானும் பாசத்தை அதிகமா வெளிப்படுத்த ஆரம்பிச்சிருக்கேன்!

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

ப்ரியா பவானி சங்கர்:
அரியலூர்ல எடுத்த போட்டோ இது. சின்ன வயசு போட்டோ நிறைய இருந்தாலும், இதுதான் என் மனசுக்கு ரொம்ப நெருக்கம். சமீபமாக எடுத்த போட்டோ ஷூட்லகூட இதே ஸ்மைலிங் போஸ்தான் இருக்கும். ‘எப்போ பார்த்தாலும் இதே போஸ்தானா... வேற போஸே தெரியாதா’னு இந்த போட்டோவை வெச்சு ஃப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க!

சைலன்ஸ்

ரசாங்கம் படக்கதை விவகாரத்தில் இணை இயக்குநருக்குத் துணைபோனதில் திரைக்கதை மன்னர்மீது இல்லத்தரசிக்கும் வாரிசு நடிகருக்கும் கோபம். ‘பெரிய இடத்துப் பொல்லாப்பு எதற்கு?’ என்று சீறினார்களாம். இறுதியில் குடும்பத்தாரின் கோபத்தைத் தணிக்கவே ஹீரோவிடம் போனில் பேசினாராம் திரைக்கதை மன்னர்.

குண்டாகி, இளைத்து, சரித்திரப் படங்களில் நடித்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நாயகி அவர். ஆனால், தன்னைத் திரும்பிப்பார்த்துத் தாலிகட்ட ஒருவன் வரவில்லையே என்கிற வருத்தத்தில் தவிக்கிறார். இப்போது தனக்குப் பிடித்த இளைஞருடன் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை வாழ முடிவு செய்திருக்கிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு