Published:Updated:

``என் அழகுக்குக் காரணம் இதுதான்!" - `நந்தினி' மாளவிகா வேல்ஸ்

``என் அழகுக்குக் காரணம் இதுதான்!" - `நந்தினி' மாளவிகா வேல்ஸ்
``என் அழகுக்குக் காரணம் இதுதான்!" - `நந்தினி' மாளவிகா வேல்ஸ்

ன் டிவி `நந்தினி' சீரியல் மூலம் புகழ்பெற்றவர், நடிகை மாளவிகா வேல்ஸ். தன் நடிப்பு மற்றும் பர்சனல் விஷயங்கள் குறித்துப் பகிர்கிறார்.

``மலையாள சீரியல்களில் தொடர்ந்து நடிச்சுகிட்டு இருக்கேன். `நந்தினி'தான் என் முதல் தமிழ் சீரியல். பெரிய ஹிட்டான இந்த சீரியல், போன வாரம்தான் நிறைவடைந்தது. அதில், ஜானகி, சீதானு டூயல் ரோல்ல நடிச்சேன். பேயா நடிச்சது புதுமையா இருந்துச்சு; ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ஆனா, என்னுடைய ரோல் இன்னும் கொஞ்ச காலம் டிராவல் பண்ற மாதிரி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். இந்த சீரியல் மூலம் நிறைய பயனுள்ள விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, தமிழ் தெரியாம ரொம்பவே சிரமப்பட்டேன். இப்போ தமிழில் புது வாய்ப்புகள் வருது. சீக்கிரமே புது சீரியல்ல என்னைப் பார்க்கலாம். 

நடிப்பு தவிர, டான்ஸ்ல அதிக கவனம் செலுத்துறேன். மத்தபடி ஓய்வு நேரங்கள்ல குடும்பத்தினருடன்தான் அதிக நேரம் செலவிடுவேன். சமைக்கத் தெரியாது. ஆனா, நல்லா சாப்பிடுவேன். வேகவைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள்தான் அதிகம் சாப்பிடுவேன். வெளியூர் ஷூட்டிங் முடிஞ்சதும் உடனே கேரளாவுக்கு வந்திடுவேன். எங்க ஊர் பருவநிலை ரொம்பக் குளுமையா இருக்கும். இதுதான் என் அழகுக்குக் காரணம். அடுத்து சினிமாவுல நடிக்க ஆசைப்படறேன். அதுக்காக இன்னும் என் அழகுல அதிக அக்கறை காட்டுறேன்" எனப் புன்னகைக்கிறார் மாளவிகா வேல்ஸ்.