Published:Updated:

“எங்க வாழ்க்கை இப்போ வெப் சீரிஸ்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“எங்க வாழ்க்கை இப்போ வெப் சீரிஸ்!”
“எங்க வாழ்க்கை இப்போ வெப் சீரிஸ்!”

“எங்க வாழ்க்கை இப்போ வெப் சீரிஸ்!”

பிரீமியம் ஸ்டோரி

“மதுரைக்கும் மீனாட்சிக்கும் என் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு எப்பவுமே இருந்துக்கிட்டே இருக்கு. மதுரையில் தங்கியிருந்து, காலேஜ் படிச்ச நாள்கள் பசுமையானவை. என் முதல் படமான ‘தவமாய் தவமிருந்து’ ஷூட்டிங் மதுரையிலதான் நடந்தது. அந்தப் படத்தில் எனக்கு ஜோடியா நடிச்சவங்க பேரு மீனாள். டெலிவிஷன்ல என் முதல் சீரியல், ‘மதுரை’. அந்தத் தொடர்ல என் ஜோடியா அறிமுகமான ஸ்ரீஜாவின் கேரக்டர் பெயர், மீனாட்சி. அந்த ஸ்ரீஜாவே பிறகு எனக்கு மனைவியா அமைஞ்சாங்க... இப்போ நான் நடிச்சுக்கிட்டு இருக்கிற ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரின் கதை மதுரையை மையமாகக் கொண்டது. தேடினா இதுபோல இன்னும்கூட பல சுவாரசியமான விஷயங்கள் சிக்கலாம்.”

மதுரையில் மீனாட்சி தரிசனம் முடித்துத் திரும்பியிருந்த செந்தில் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே, அதை ஆமோதித்துத் தலையசைக்கிறார், ஸ்ரீஜா. வடசென்னையில் பிறந்த செந்திலையும், கேரளாவில் பிறந்த ஸ்ரீஜாவையும் தம்பதி ஆக்கிய பெருமை தமிழ் சீரியல் ரசிகர்களையே சேரும். 

“எங்க வாழ்க்கை இப்போ வெப் சீரிஸ்!”

கல்யாணம், பிறகு கொஞ்சம் பிரேக், அடுத்து, ‘மாப்பிள்ளை’ சீரியலில் மறுபடியும் ஜோடி,  அது முடிந்ததும் இப்போது ‘கல்யாணம் கண்டிஷன்ஸ்  அப்ளை’ என்ற வெப் சீரிஸ் என்று தொடர்கிறது இருவரின் காதலும் கலையும் இணைந்த கலர்ஃபுல் பயணம்.

“ ‘உன்னை நான்தான் நடிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டதா வெளியில பேசறாங்க’ன்னு செந்திலும் அப்பப்போ எங்கூட கோபிச்சுக்குவார். கல்யாணத்துக்குப் பிறகு  ‘மாப்பிள்ளை’ சீரியல்ல நடிச்சோம். அந்த சீரியல் டக்குனு முடிஞ்சிடும்னு நாங்க எதிர்பார்க்கலை. அதேநேரம், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரும் எங்களுக்காக உருவாக்கப்பட்ட கதைதான். ரெண்டுபேரையும் டபுள் ஆக்ட் பண்ணச் சொல்லி அந்த சீரியல் கதையைச் சொன்னாங்க. எங்களுக்கும் ஆசைதான். ஆனா, எனக்குக் கொஞ்சம் ஹெல்த் பிரச்னை; ரெஸ்ட் தேவைப்பட்டது. தவிர, ரெண்டுபேரும் ஷூட்டிங் ஷூட்டிங்னு ஓடிக்கிட்டே இருந்தா, ஃபேமிலியை யார் பார்த்துக்கிறது? அதனால, நான் ஒதுங்கிக்கிறேன்னு சொன்னேன். அவர் மட்டும் கமிட் ஆகி, நடிச்சார்.

“எங்க வாழ்க்கை இப்போ வெப் சீரிஸ்!”சமைக்க, கணவருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சாப்பாடு கட்டி எடுத்துட்டுப்போக, அவர் வந்ததும் ஷூட்டிங் ஸ்பாட் கதைகளைக் கேட்க... இப்படியே என்னோட பொழுதுகள் போயிட்டிருக்கு. என்ன ஒண்ணு,  இப்பல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்ல நடக்கிறதை செந்தில் எடிட் பண்ணியே சொல்றாரோன்னு தோணுது. எவ்ளோ விஷயங்கள் அங்கே நடக்கும், எனக்குத் தெரியாதா? சேஃப் கேம் ஆடுறாராம்” எனச் சிரிக்கிறார் ஸ்ரீஜா.

சீரியலில் சேர்ந்து நடித்து நிஜ வாழ்விலும் இணைந்த இவர்களின் சொந்தக் கதைதான் ‘கல்யாணம் கன்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற பெயரில் தற்போது வெப் சீரிஸ் ஆகியிருக்கிறது.

“சீரியல்ல நடிக்காத போதும், எனக்கு இப்போ பல வகையில உதவி பண்ணிக்கிட்டு இருக்காங்க, ஸ்ரீஜா. என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர் இப்போ இவங்கதான். ரேடியோ மூலம் அறிமுகமானேன். அந்தத் தொடர்புல சினிமாவுக்கு வந்தேன். நான் நடிச்ச சில படங்கள் சரியா போகலை. அதுக்காக அப்படியே ஒதுங்கிடலை. என்னைப் பொறுத்தவரை ரேடியோ, டிவி, சினிமா, வெப் சீரிஸ்னு எல்லாத் தளங்களிலும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்!” என்கிறார்.

அன்பும் ஆதரவுமாகத் தோளில் சாய்ந்துகொள்கிறார் ஸ்ரீஜா.

அய்யனார்ராஜன் - படம் வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு