பிரீமியம் ஸ்டோரி

தமிழைத் தாண்டி, பிறமொழிகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிலிருக்கும் சில படங்கள்... 

அக்கரை சினிமா!

சை ரா நரசிம்ம ரெட்டி

ந்தியா சுதந்திரம் அடைவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு `உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ என்னும் சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியுள்ளார். அவரின் கதைதான் இந்த ‘சை ரா நரசிம்ம ரெட்டி’.  நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்க, ‘பாகுபலி’க்கு அடுத்து மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. தந்தையின் 151-வது படத்தை மகன் ராம்சரணே தயாரிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் ஜெகபதி பாபு, நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா, சுதீப் என ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. அதுபோக அமிதாப் பச்சன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். படம் 2019 ஏப்ரலில் வெளியாகவிருக்கிறது.

அக்கரை சினிமா!

கேதார்நாத்

சு
ற்றுலாத் தலமான கேதார்நாத்தை மையமாகக் கொண்டு நகரும் ஒரு காதல் கதைதான் படம். வழக்கம்போல மேல்தட்டுப் பெண்ணுக்கு, வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவனின் மீது காதல், அதைச் சுற்றி நடக்கும் பிரச்னைகள் என டெம்ப்ளேட் கதைதான். இருந்தாலும் படத்தில் கேதார்நாத்தில் நடந்த பேரிடர் பெரும்பங்கு வகிக்கும் என்பதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப்படத்தில் சயீஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் நாயகியாக அறிமுகமாகிறார். ‘ராக் ஆன்’, ‘கை போ சே’ போன்ற படங்களை இயக்கிய அபிஷேக் கபூர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சாராவுக்கு ஜோடியாக ‘தோனி’ புகழ் சுஷாந்த் சிங்க் ராஜ்புத் நடித்திருக்கிறார். பட டீஸர் சமீபத்தில் வெளியானது. சில விநாடிகளே வருகிற வெள்ளக்காட்சிகள் எல்லோரையும் மிரளவைத்திருக்கிறது. படம் டிசம்பர் 7 அன்று திரைக்கு வருகிறது.

அக்கரை சினிமா!

மூத்தோன்   

‘கா
யம் குளம் கொச்சுண்ணி’க்குப் பிறகு நிவின் பாலி நடிக்கும் படம். கீது மோகன்தாஸின் கதைக்கு, அனுராக் காஷ்யப் எழுதிய இந்தப் படத்தின் திரைக்கதை `2016ம் ஆண்டு சன்டேன்ஸ் திரைப்பட விழா’வில் விருது வென்றது. அதனாலேயே இந்தப் படம் ஏக எதிர்பார்ப்பில் இருக்கிறது. மலையாளத்தில் கீது மோகன் தாஸ் வசனமெழுத, இந்தி வசனம் அனுராக் காஷ்யப். ‘96’ படத்தின் மூலம் காதலின் இசையில் உருக வைத்த கோவிந்த் வசந்தாவும் இந்தி இசையமைப்பாளரான சினேக கன்வல்கரும் ‘மூத்தோன்’ படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள். லட்சத்தீவுகளில் வாழும் 14 வயதுடைய சிறுவன், காணாமற்போன அண்ணனைத் தேடிப் பயணிப்பதே கதைக்கரு.

அக்கரை சினிமா!

கேப்டன் மார்வெல்

லகம் முழுக்கவுள்ள சூப்பர் ஹீரோ பிரியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம். ‘கேப்டன் மார்வெல்’ என்ற பெண் சூப்பர் ஹீரோவின் முதல் படம். மார்வெல் காமிக்ஸின் மகா மெகா படமான `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ இந்த வருடம் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் வில்லன் தானோஸுக்கும் அவெஞ்சர்ஸ் பட்டாளத்துக்கும் நடைபெற்ற மாபெரும் யுத்தத்தில் சூப்பர் ஹீரோக்களில் பாதிப்பேர் அழிந்துவிட, ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் உலகைக் காப்பாற்ற `கேப்டன் மார்வல்’லை உதவிக்கு அழைப்பதுபோல ஒரு காட்சி இருக்கும். யார் அவர் என்ற கேள்விக்கு விடையாக இந்தப் படம் இருக்கும். 2019 மார்ச் அன்று திரைக்கு வருகிறது.

அக்கரை சினிமா!

Pet Sematary

1989-ல்
வெளியான `பெட் செமட்ரி’ இன்றுவரை பயமுறுத்தும் கிளாஸிக் ஹாரர் படம். ஸ்டீபன் கிங் இதே பெயரில் எழுதிய நாவல்தான் இந்தப்  படத்துக்கான அடிப்படை. இப்போது அதே படத்தை மீண்டும் ரீமேக் செய்திருக்கிறார்கள்.  ஒரு டாக்டர் பெருநகரத்தை விட்டுவிட்டு ஒரு கிராமத்துக்குத் தன் குடும்பத்துடன் குடியேறுகிறார். பின்புதான் அவர்கள் குடியேறி இருக்கும் இடம் ஒரு காலத்தில் செல்லப் பிராணிகளைப் புதைக்கும் இடுகாடு என்பது தெரிகிறது. அந்தச் சமயத்தில் விபத்தில் அவரின் சிறுவயது மகன் இறந்துவிட, அந்தப் பிணத்தைப் புதைக்க அவர் அந்த இடுகாட்டுக்குச் செல்கிறார். அதற்கடுத்து அரங்கேறும் திகில் சம்பவங்கள்தான் படம். ‘பேரமவுன்ட் பிக்சர்ஸ்’ வெளியிடும் இந்தப் படம் 2019 ஏப்ரலில் திரைக்கு வரவிருக்கிறது. இது முந்தைய படத்தைவிட அதிகமாகவே பயமுறுத்தும் என்கிறது படக்குழு.

அக்கரை சினிமா!

வைரஸ்

அக்கரை சினிமா!ந்த ஆண்டு மே மாதம் கேரளாவையே புரட்டிப்போட்ட நிகழ்வு நிபா வைரஸ் தாக்குதல். நிபா உருவாக்கிய அதிர்வலைகளை அடிப்படையாகக் கொண்டு `வைரஸ்’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் மலையாளத்தில் தயாராகியுள்ளது. சென்ற ஆண்டு வெளியான `மாயநதி’ படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஆஷிக் அபு இந்தப் படத்தைத் தயாரித்து இயக்குகிறார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்துத் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். ரேவதி, பார்வதி, ரீமா கல்லிங்கல், டொவினோ தாமஸ், ஆசிஃப் அலி, ரம்யா ரம்பீசன், காளிதாஸ் ஜெயராம் எனப் பெரும் நட்சத்திரக் கூட்டம் இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. நிபா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சேவை செய்து உயிரை விட்ட நர்ஸ் `லினி’ கதாபாத்திரத்தில் ரீமா கல்லிங்கல் நடிக்கிறார். செப்டம்பரில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் கூட நிபா வைரஸ் தாக்குதலின்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தைக் கொண்டே டிசைன் செய்துள்ளனர் படக்குழுவினர்.

ர.சீனிவாசன் - சா.ஜெ.முகில் தங்கம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு