Published:Updated:

பறக்கும் விமானத்தை தரையிறங்க வைத்த பாடல்!

பறக்கும் விமானத்தை தரையிறங்க வைத்த பாடல்!
பிரீமியம் ஸ்டோரி
News
பறக்கும் விமானத்தை தரையிறங்க வைத்த பாடல்!

பறக்கும் விமானத்தை தரையிறங்க வைத்த பாடல்!

“என் ஊர் திருவண்ணாமலை பக்கத்துல ஒரு கிராமம். என் மனைவிக்குப் பூர்வீகம் இலங்கை. அவங்க பைலட்டா இருந்தாங்க. அப்போ கலிஃபோர்னியாவுல கொஞ்சநாள் வேலை பார்த்தாங்க. இந்தப் பாடலாசிரியருக்கு இந்த பைலட் எப்படிப் பழக்கம்னா, என் தோழி ஸ்ருதினு ஒருத்தங்க கலிஃபோர்னியாவுல இருக்காங்க. அவங்க என் பாடல்கள், கவிதைகளைப் பத்தி என்கிட்ட அடிக்கடி பேசுவாங்க. அப்போ ஒருநாள் `என் ஃபிரெண்ட் சவிதாஸ்ரீகிட்ட பேசுங்க’னு சொன்னாங்க. அப்போதான் முதன்முறையா ரெண்டுபேரும் பேசினோம். அவங்க மூலமாதான் சவிதா எனக்கு அறிமுகம். அந்த நட்பு, காதல்வரை கொண்டுவந்துச்சு. சரியாச் சொல்லணும்னா, அந்த சமயத்துல எனக்கு கார் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. எங்களோட முதல் சந்திப்பே எனக்கு நடந்த விபத்தாலதான் நடந்தது. அவங்களுக்கு சென்னையில ஒரு வீடு இருக்கு. லீவுக்கு ஊருக்கு வந்தவங்க விஷயம் தெரிஞ்சு, என்கூடவே இருந்து என்னைப் பார்த்துக்கிட்டாங்க. அந்த அன்பு அடுத்த கட்டத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுச்சு!” என நட்பு, காதலான கதையைச் சொல்கிறார், விவேகா. 

பறக்கும் விமானத்தை தரையிறங்க வைத்த பாடல்!

“நட்பு டு காதலை நீங்க சொல்லிட்டீங்க. காதல் டு கல்யாணம் எப்படினு நான் சொல்றேன். சம உரிமை வேணும்ல!” என்று கணவரைப் பார்த்தபடி, புன்னகையோடு உரையாடலைத் தொடங்குகிறார், சவிதா. “நாங்க லவ் பண்ண ஆரம்பிச்சு ரெண்டு மாசத்துலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். மத்தவங்க மாதிரி ஆறேழு வருடங்கள் வெயிட் பண்ணல. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். அந்தக் கல்யாணம் முடிஞ்சு ‘அலைபாயுதே’ படத்துல வர்ற மாதிரி அவங்கவங்க வீட்டுக்குப் போய் அவங்கவங்க வேலையைப் பார்க்க ஆரம்பிச்சோம். எப்படி எங்க பிளான்?” என்ற சவிதாவை இடைமறித்த விவேகா, “ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு முந்தைய நாள் அண்ணன்கிட்ட போன்ல, ‘காலையில கல்யாணம் பண்ணிக்கப் போறேன்; நீ வரணும். வரலைனாலும், நான் அவங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்’னு சொன்னேன். அண்ணனுக்கு இந்தக் கல்யாணத்துல உடன்பாடு இல்லை. ஆனா, வந்தார். அடுத்து நாலு மாசம் கழிச்சு, நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயத்தை வீட்ல சொன்னதும், ஷாக். அப்புறமென்ன, இருக்கிற எல்லாரையும் சமாளிச்சு ஒருவழியா முறைப்படி கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா, சவி வீட்ல எதிர்ப்பு இருந்தது. பிறகு, அதையும் சமாளிச்சு, ஒரு ரிசப்ஷனை வெச்சாச்சு!”

“எனக்குப் பாடல்கள் மேல அவ்வளவா ஆர்வம் கிடையாது.  ஆனா, இவர் எழுதிய ‘விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்’ பாட்டுக்கு நான் அடிமை!“ என்ற சவிதாவிடம், பைலட் அனுபவங்களைக் கேட்டோம். “கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த வேலையை விட்டுட்டேன்” என்று தன் கணவரைப் பார்க்க, “ஐயோ... இதுக்கு நான் காரணம் இல்லைங்க. ரொம்ப ஆசைப்பட்டுதான் அந்த வேலைக்குப் போனாங்க. ஆனா, ஐம்பதாயிரம் அடி உயரத்துல இருந்து பாராஷூட்ல குதிக்கிற சூழல் வரும். அந்த பயம்தான் வேலையைவிடக் காரணம். ஆனா, என்ன இருந்தாலும் இவங்க பைலட். ஒரு கணவரா எனக்கு அது ரொம்பப் பெருமையான விஷயம்” என்ற கணவரைத் தொடர்ந்த சவிதா, “குடும்பம்னு வந்துட்டா அந்த வேலை செட் ஆகாது. வேலையைவிட அதுவும் ஒரு காரணம். ஆனா, அப்பப்போ ஃப்ளைட்டைப் பார்க்கும்போது மனசுக்குள்ள சின்னதா ஒரு வருத்தம் வரும். ஆனா, வீட்ல நான்கு குழந்தைகளையும் சமாளிக்கிறதே பெரிய வேலையாச்சே... என்ன பார்க்குறீங்க? உங்களையும் சேர்த்துதான் நாலு குழந்தைகள்னு சொன்னேன்” என மனைவி சொன்னதும், விவேகா முகத்தில் மழலைச் சிரிப்பு... சிறப்பு!

“அவங்களுக்கு நான் என்ன பாட்டு எழுதுறேன்னுகூட தெரியாது. சில நேரங்கள்ல எழுதின பாட்டை பாடிக் காட்டுவேன் அவ்ளோதான். ஆனா, நான் எழுதுற காதல் பாடல்கள்ல அவங்க கலந்திருக்காங்க. ‘மொளச்சு மூணு இலையே விடல’, ‘எழு வேலைக்காரா’ இந்த ரெண்டு பாட்டும் என் சவிக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்களுக்குப் பாடல்கள்ல அதிக ஆர்வம் இல்லைங்கிறதே, எனக்கான முழு சுதந்திரத்தைக் கொடுக்குது” என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பறக்கும் விமானத்தை தரையிறங்க வைத்த பாடல்!“எனக்கு அவரோட கேரக்டர் ரொம்பப் பிடிக்கும். வேலையையும் குடும்பத்தையும் குழப்பிக்க மாட்டார். குடும்பம்னு வந்துட்டா எதைப் பத்தியும் யோசிக்க மாட்டார்.” எனத் தன் கணவரிடம் தனக்குப் பிடித்தவற்றை சவிதா பகிர்ந்துகொள்ள, விவேகா தொடர்கிறார். “எனக்கு அவங்களோட குழந்தைத்தனம்தான் ரொம்பப் பிடிச்சுப்போகக் காரணம். இன்னைக்கு வரை அது அவங்ககிட்ட இருக்கு. தவிர, எனக்கு ஈழத்தமிழ்ப்பற்று இருக்கு. அதனாலேயே இவங்களை இன்னும் அதிகமாப் பிடிக்கும். சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டாங்க. ஒரு ரகசியம் சொல்லவா... அவங்கதான் முதல்ல என்கிட்ட காதலைச் சொன்னாங்க. இன்னைக்குவரை இந்த விஷயம் அவங்க வீட்டுக்குத் தெரியாது. நான்தான் சொன்னேன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க.

நான்தான் எங்க வீட்ல கடைக்குட்டி சிங்கம். என் அக்காக்களுக்கு என் மேல இருந்த பாசம் இப்போ என் மனைவிக்குக் கிடைக்குது. அதைவிட என் அப்பா அவங்களுக்கு ரொம்ப க்ளோஸ். பெரிய பொண்ணு செந்தளிரும், பையன் செங்கதிரும் என்னை மாதிரி! நடுப்பொண்ணு இசைத்தளிர் மட்டும் இவங்க கேரக்டர். எனக்குக் குடும்பம்தான் உலகம்” என்று மனைவியின் கைகளைப் பற்றிக்கொள்கிறார், விவேகா.

“அவர் வீட்ல செம ஜாலி. நான்தான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். அப்போதான் சரியா இருக்கும்” என்ற சவிதாவை இடைமறித்த விவேகா, “நான் குழந்தைகள் விஷயத்துல ஜனநாயகவாதி. என் பெரிய மகளுக்கு சின்ன நூலகம் வெச்சுக் கொடுத்திருக்கேன். அதையெல்லாம் படிச்சுட்டு என்கிட்ட கதை சொல்லச் சொல்வேன். அவளுக்கு அவங்க அம்மா மாதிரி வானியல் மேல ஆர்வம் இருக்கு. என் மனைவியைவிட என் குழந்தைகள் என் பாட்டை பயங்கரமா ரசிப்பாங்க. பையன் ‘ஜிங்குனமணி’, ’கருத்தவன்லாம் கலீஜாம்’ பாட்டைக் கேட்டா அதைப் பாடிக்கிட்டே ஆடவும் ஆரம்பிச்சுடுவான்” என்று தங்கள் மகனிடம் பாட்டு பாடச் சொல்லி அதைப் பெற்றோர் ரசித்து முத்தம் கொடுக்கும் காட்சி அழகு!  

“ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி, வருடம் 50 மாணவர்களுக்கு இலவசக் கல்வி கொடுக்கணும்னு ஆசை. அதுக்கான வேலைகள் தாம்பரம் பக்கத்துல நடந்துக்கிட்டு இருக்கு. அப்புறம், அடிப்படை வசதிகளே இல்லாம எந்நேரமும் பீதி படர்ந்தே இருக்கும் வடக்கு இலங்கைப் பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கணும் என்பது, எங்க ரெண்டு பேரோட கனவு. நிச்சயம் அதுவும் சாத்தியப்படும்னு நம்புறோம்!” என்கிறார்கள், இருவரும்!

உ.சுதர்சன் காந்தி - படம் தே.அசோக் குமார்