#MeToo குற்றச்சாட்டுகளில் சிக்கி, பரபரப்பாகப் பேசப்பட்டவர் நானா படேகர். தனுஸ்ரீ தத்தா அவர்மீது வைத்த குற்றச்சாட்டுகளையடுத்து இப்போது பாலிவுட்காரர்கள் அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைப்பதில் தயக்கம் காட்டத் தொடங்கியுள்ளனர். ‘ஹவுஸ்ஃபுல்’ படத்தின் நான்காம் பாகத்தில் நானாபடேகர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அதே பாத்திரத்தில் `பாகுபலி’ வில்லன் ராணா டகுபதி நடிப்பார் என்று அறிவித்துள்ளது படக்குழு. இதே படத்திற்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டிருந்த சஜித்கானும் மாற்றப்பட்டிருக்கிறார். அவர்மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு எழுந்ததே காரணம். க்ளீன் போல்டு!

ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது. ரிச்சா சத்தா ஷகீலாவாக நடிக்கிறார். இப்படத்தைப் பத்திரிகையாளரும் கன்னட இயக்குநருமான இந்திரஜித் லங்கேஷ் இயக்கவிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஷகீலாவின் சுயசரிதை நூலை அடிப்படையாகக்கொண்டு இப்படம் எடுக்கப்படுகிறது. இப்படத்தில் ஷகிலாவும் ஒரு சிறியவேடத்தில் நடிப்பதோடு, பட வேலைகளிலும் திரைக்கதையிலும் உதவிகள் செய்திருக்கிறார். வெயிட்டிங்!

2012-ல் இந்திப்பக்கம் ஒதுங்கிய இலியானா அங்கேயே கூடாரம் போட்டு நடித்துவருகிறார். ஆறாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்னிந்தியாவுக்குத் திரும்பிவருகிறார் இலியானா. தமிழ்ப்படத்துக்கு அல்ல... தெலுங்குப்படத்துக்கு. ரவிதேஜா நாயகனாக நடிக்கும் `அமர் அக்பர் ஆன்டனி’ படத்தில் இலியானாதான் ஹீரோயின். தமிழுக்கும் வாங்க தோழி

‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இந்த முறை வில்லன் இல்லையாம். முதல்முறையாக யுவன்ஷங்கர் ராஜா சிவகார்த்திகேயனுக்கு இசையமைக்கவிருக்கிறார். படப்பிடிப்பு பிப்ரவரி 2019-ல் தொடங்கும் என்கிறார்கள். இதற்கடுத்து சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கோலிவுட் பரபரக்கிறது. இது முழுக்க முழுக்க பக்கா மாஸ் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமாம். குறும்புத்திரை

திருவனந்தபுரத்தில் மேட்ச் என்றால் பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்வது இந்திய கிரிக்கெட் அணியின் வழக்கம். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தபோது, அணியின் முக்கியவீரர்களும் ரவிசாஸ்திரியும் பத்மநாபசுவாமி கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனைக்குப் பிறகு பேசிய ரவிசாஸ்திரி ``அனைவரும் கேரளாவுக்கு வரவேண்டும், இந்த மாநிலத்திற்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும்’’ என்று வேண்டுகோளும் வைத்தார். Batமநாதசுவாமி!

எத்தியோப்பியாவின் முதல் பெண் அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சாஹ்லே-வொர்க் செவதே. ஆப்பிரிக்கக் கண்டத்தில் அதிபராகப் பதவியேற்கவிருக்கும் முதல் பெண் அதிபர் இவரே. பாலின சமத்துவக் கொள்கைகளில் அதிக நம்பிக்கையுடைய எத்தியோப்பிய பிரதமர் அபிய் அஹ்மெத்தின் 20 நபர் கேபினட்டில் பாதிப் பேர் பெண்கள்தாம். இந்தப் பிரதமர் - அதிபர் கூட்டணி உலக நாடுகளின் மொத்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. முழுக்க முழுக்க ஆண்களால் மட்டுமே நிரப்பப்பட்ட அதிபர் பதவியை மட்டுமல்ல... இதற்கு முன்பாக ஆப்பிரிக்காவுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரநிதிதியாகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கான ஐ.நா அலுவலகத் தலைமையாகவும் தேர்வான முதல் பெண்ணும் சாஹ்லேதான். சமூக வலைதளங்கள் முழுவதும் ஃபர்ஸ்ட் உமனுக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. சல்யூட் மேடம்!

கோவாவில் நாளுக்கு நாள் செல்ஃபி எடுக்க முயன்று இறந்துபோகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு ‘நோ செல்ஃபி ஜோன்கள்’ எனச் சிலபகுதிகளை அறிவித்திருக்கிறது. இங்கெல்லாம் `திருஷ்டி லைஃப் சேவிங் லைஃப் கார்ட் ஏஜென்ஸி’ என்கிற நிறுவனம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு செல்ஃபி எடுப்பதைத் தடுக்கும் என அறிவித்திருக்கிறார்கள். சிவகுமாருக்குப் பிடிச்ச நியூஸ்!

கார்த்தியாயினி அம்மாதான் கேரளாவில் சென்றவார வைரல். 96 வயதாகும் இந்தப் பாட்டிம்மா கேரளாவில் அடிப்படைக்கல்விக்கான தேர்வினை எழுதித் தேர்ச்சியடைந்திருக்கிறார். அடுத்து பத்தாம்வகுப்புத் தேர்வு எழுதவும் தயாராகி வருகிறார். துப்புரவுத் தொழிலாளியான கார்த்தியாயினி அம்மா படிப்பறிவற்றவர்; இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். தன் ஆறு குழந்தைகளைக் கரைசேர்ப்பதற்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர். சமீபத்தில் கேரள அரசு, மாநிலம் முழுக்க பள்ளி செல்லாதவர்களுக்குக் கல்வி கிடைக்க `அக்ஷர லட்சம்’ என்ற திட்டத்தைத் தொடங்கியது. அதில் ஆர்வத்தோடு சேர்ந்து அடிப்படைக் கல்வி பெற்று, தேர்விலும் வெற்றிபெற்றுள்ளார். 96ன்னாலே ஹிட்டுதான்!