Published:Updated:

`காளி ஆட்டத்தைக் காண நானும் வெயிட்டிங்!’ `பேட்ட’ அனுபவம் பகிரும் `ஆடுகளம்’ நரேன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`காளி ஆட்டத்தைக் காண நானும் வெயிட்டிங்!’ `பேட்ட’ அனுபவம் பகிரும் `ஆடுகளம்’ நரேன்
`காளி ஆட்டத்தைக் காண நானும் வெயிட்டிங்!’ `பேட்ட’ அனுபவம் பகிரும் `ஆடுகளம்’ நரேன்

`காளி ஆட்டத்தைக் காண நானும் வெயிட்டிங்!’ `பேட்ட’ அனுபவம் பகிரும் `ஆடுகளம்’ நரேன்

வெளியான சில நிமிடங்களிலேயே `தலைவா, வேற லெவல்’ எனப் `பேட்ட’ டிரெய்லரை கொண்டாடத் தொடங்கிவிட்டனர் ரஜினி ரசிகர்கள். `2.0' 'டெக்னாலஜி ரஜினி'யைக் காட்டிலும் 'பேட்ட' டைப் ரஜினியைத்தான் அவரின் ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கிறது. 'பார்க்கத்தானே போற, இந்தக் காளியோட ஆட்டத்தை' என ரஜினி அறிமுகமாகிறபோது, 'இது ச்சும்மா ட்ர்யெலர்தாம்மா, மெயின் பிக்சர் பார்க்கத்தானே போற' எனக் கூடவே குதூகலிக்கிறது அவரரின் ரசிகர் படை.

டிரெய்லரில் 'யார்றா அவன்' என ரஜினி குறித்துக் கேட்கிற 'ஆடுகளம்' நரேனிடம் பேசினோம்.

``என்னோட நீண்ட நாள் கனவுங்க. வாழ்நாள் கனவுன்னுகூட சொல்லலாம். அது இப்பதான் நனவாகியிருக்கு. டைரக்டர் கார்த்திக் சுப்பராஜுக்கு இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கறேன். படத்துல கமிட் ஆனதுல இருந்தே எனக்கு ஒரு பதற்றம் இருந்துட்டே இருந்தது. ஆனா, முதல் நாள் ஷூட் அன்னைக்கு நான் அவரைக் கவனிக்காத சமயத்துல அவரா 'வாங்க வாங்க'ன்னு பக்கத்துல வந்து அவரே கூப்பிட்டார். கை கால் உதறல் எடுக்க, `வணக்கம் சார்'னு சொன்னேன். 'உங்க பட்ங்களைப் பார்த்திருக்கேன், ரொம்ப நல்லா நேச்சுரலா, ரியலிஸ்டிக்கா நடிக்கிறீங்க'ன்னார். `உங்க கூட நடிக்கிறது கனவு சார்'னு சொன்னேன். அவரோட பிராண்ட்ல சிரிச்சார். அதேபோல ரொம்ப சாதாரணமா பழகினார். 'பேட்ட'யின் மிச்ச அனுபவத்தை ரிலீஸுக்குப் பிறகு பேசறேனே' என்றவர், 'சொல்லப்போனா நானும் ரஜினி சார் ரசிகனே. அந்தக் காளி ஆட்டத்தைப் பார்க்க நானும் வெயிட்டிங்' எனச் சிரிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு