Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• சாய் பல்லவி நடிப்பில் ‘என்.ஜி.கே’, ‘மாரி 2’ ஆகிய படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. தெலுங்கில் சர்வானந்துடன் ஒரு படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். தொடர்ந்து, புதிய படத்தில் ராணா டகுபதிக்கு ஜோடியாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

• ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இந்தியா முழுக்கப் பயணம் செய்யும் இளைஞனின் கதை என்பதால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

மிஸ்டர் மியாவ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• ப்ளு வேல்’ விளையாட்டை மையப்படுத்தி அறிமுக இயக்குநர் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிகை பூர்ணா நடித்துவருகிறார். இதில் அவருக்கு போலீஸ் அதிகாரி கேரக்டராம்.

• இஸ்ரோவால் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் ஒரு படத்தில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன் நடிக்கின்றனர். நித்யா மேனன்,
டாப்ஸி ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.

மிஸ்டர் மியாவ்

• ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்ற தகவல் வெளியானது. ஆனால், இப்போது காஜல் அகர்வாலை நடிக்கவைக்கப் பேச்சு நடத்திவருகிறார்கள்.

• சிம்பு - சுந்தர்.சி காம்போவில் உருவாகும் ‘வந்தா ராஜாவாகதான் வருவேன்’ படத்துக்குப் பிறகு விஷாலை இயக்குகிறார் இயக்குநர் சுந்தர்.சி. இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். ஏற்கெனவே, விஷாலுடன் ‘கத்திச்சண்டை’ படத்தில் தமன்னா நடித்திருக்கிறார்.  

மிஸ்டர் மியாவ்

• ‘தேவி 2’, ‘நர்மதா’, ‘தானா’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் பிஸியாக இருக்கும் நடிகை நந்திதா, ஹீரோயின் சென்ட்ரிக் ஜானரில் புதிதாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

யார் டைரக்‌ஷனில் நடிக்க வேண்டுமென்று ஆசை?

ப்ரியா பவானி சங்கர்: “எனக்கு கெளதம் மேனன் சாரை ரொம்பப் பிடிக்கும். அவர் படங்களில் ஹீரோயின்களை அப்டேட்டா காட்டுவார். அதனால, அவர் டைரக்‌ஷன்ல நடிக்கணும்னு ஆசை.”

போட்டோ ஷாப்

சீரியல் நடிகை ஸ்ரீஜா செந்தில்

“தமிழ்ல நான் நடிச்ச முதல் சீரியலின் கேரக்டர் பெயர் மீனாட்சி. அதுல ஜோடியா நடிச்ச என் கணவர் செந்திலுக்கு படிப்பு, முதல் படம் என மதுரையுடன் நிறையத் தொடர்புகள் இருக்கு. அதனால,
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எங்களுக்கு ஸ்பெஷல். அங்கே ஒருமுறை போனபோது
எடுத்த போட்டோதான் இது!”

மிஸ்டர் மியாவ்

சைலன்ஸ்

• பெரிய பட்ஜெட், பெரிய பேனர், பெரிய நாயகன் சகிதமாக அரச படத்தில் நடித்ததால் உற்சாகத்தில் இருந்தார் புகழ் நடிகை. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் பெரிதாகப் போகவில்லை... நாயகியின் ராசிதான் காரணமாம் என்று சிலர் கிளப்பிவிட, நடிகை அப்செட்.

• ஹீரோ முத்தமிட உதடு தந்த ஹீரோயின் அவர். ஹீரோக்களுடன் நெருங்கி நடிப்பதில் தாராளம் காட்டியவர். இப்போதோ, காதலனைக் கைப்பிடிப்பது கன்ஃபார்ம் ஆனதால், கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் நடிகை போடும் முதல் கண்டிஷனே... படத்தில் நெருக்கமான காட்சி கூடாது என்பதுதானாம்.