Election bannerElection banner
Published:Updated:

"ராட்சசன், இரும்புத்திரை, இமைக்கா நொடிகள்... 2018-ன் திக் திகில் சினிமாக்கள்!"

"ராட்சசன், இரும்புத்திரை, இமைக்கா நொடிகள்... 2018-ன் திக் திகில் சினிமாக்கள்!"
"ராட்சசன், இரும்புத்திரை, இமைக்கா நொடிகள்... 2018-ன் திக் திகில் சினிமாக்கள்!"

நல்ல நல்ல த்ரில்லர் கதைகளுக்கு தமிழ்சினிமாவில் வரவேற்பு உண்டு. இந்த வருடம் த்ரில்லர் கதைகளுக்குக் கொஞ்சம் அதிகமாகவே வரவேற்பு கிடைத்தது. வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை த்ரில்லர் படங்கள் வந்த வண்ணம் இருந்தன. அப்படி, நமக்கு சீட்டின் நுனியில் உட்கார வைத்து திக் திக் திகில் தந்த படங்களின் தொகுப்புதான் இது!

ல்ல த்ரில்லர் கதைகளுக்கு எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. இந்த வருடம் த்ரில்லர் கதைகளுக்குக் கொஞ்சம் அதிகமாக வரவேற்பு கிடைத்தது. வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை த்ரில்லர் கதைகள் வந்த வண்ணம் இருந்தன. அப்படி, நமக்கு சீட்டின் நுனியில் உட்கார வைத்து திக் திகில் படங்களின் தொகுப்பு இது! #Rewind2018

இரவுக்கு ஆயிரம் கண்கள் :

"ராட்சசன், இரும்புத்திரை, இமைக்கா நொடிகள்... 2018-ன் திக் திகில் சினிமாக்கள்!"

க்ரைம் எழுத்தாளர்களின் பாக்கெட் நாவல்களை வாசித்திருக்கிறீர்களா?! அதுபோன்ற ஒரு க்ரைம் த்ரில்லர் கதைதான், 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. சுஜாதாவின் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரங்களான கணேஷ், வசந்த் பெயரைத்தான் இந்தப் படத்தின் துப்பறியும் கதாபாத்திரங்களுக்கு சூட்டியிருந்தார், இயக்குநர். சில இடங்களில் யதார்த்தம் மிஸ் ஆகியிருந்தாலும், மனிதர்களின் ஆசைதான் அவர்களை அழிவுக்குக் கொண்டுசெல்கிறது என்பதை முன்னும் பின்னுமாகப் பயணிக்கும் த்ரில்லர் திரைக்கதையில் சிறப்பாகப் பதிவு செய்தது, 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'.

இரும்புத்திரை :

"ராட்சசன், இரும்புத்திரை, இமைக்கா நொடிகள்... 2018-ன் திக் திகில் சினிமாக்கள்!"

'இந்த காலத்துத் திருடனுக்கு உன் வீட்டு சாவி தேவையில்லை. உன்னைப் பத்தின ஒரு சின்ன இன்ஃபர்மேஷனே போதும்!" - இப்படி சின்னச் சின்ன தகவல்களை வைத்துக் கொண்டு, டேட்டா யுகத்தில் நடக்கும் டிஜிட்டல் க்ரைம்களை 'த்ரில்' மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியது, 'இரும்புத்திரை'. டிஜிட்டல் தொடர்பான சினிமாக்களில் லாஜிக் மீறல்கள் அதிகம் இருக்கும். ஆனால், 'இரும்புத்திரை'யில் இருந்த பக்கா டீடெய்லிங் படத்தை சுவராஸ்யமாக்கியிருந்தது. 

யூடர்ன் : 

"ராட்சசன், இரும்புத்திரை, இமைக்கா நொடிகள்... 2018-ன் திக் திகில் சினிமாக்கள்!"

ஒரு பெண் பத்திரிக்கையாளர், தான் செய்யும் ஒரு அசைன்மென்ட் மூலமாக சந்திக்கும் பிரச்னைகளும், அடுத்தடுத்து அவருக்கு நடக்கும் சம்பவங்களும்தான், 'யூ டர்ன்'. கதையை 'ஒன் வுமன் ஷோ'வாக சமந்தா தாங்கினார். நம்முடைய சின்னச் சின்ன தவறுகள்கூட பிறருடைய வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விறுவிறு திரைக்கதையில் திகிலுடன் பதிவு செய்தது, 'யூடர்ன்'.

இமைக்கா நொடிகள் :

"ராட்சசன், இரும்புத்திரை, இமைக்கா நொடிகள்... 2018-ன் திக் திகில் சினிமாக்கள்!"

சிங்கத்தின் இரையை கழுதைப்புலி ஒன்று  தந்திரமாகப் பறித்துச்சென்றால், அந்த சிங்கம் என்ன செய்யும்?! - 'இமைக்கா நொடிகள்' படத்தின் கதை இதுதான். நயன்தாராவும், அனுராக் காஷ்யப்பும் போட்டி போட்டு தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். நிறைய ப்ளாஷ்பேக் காட்சிகள், லாஜிக் ஓட்டைகள், படத்தின் நீளம்... என சில குறைகள் இருந்தாலும், திடுக் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை  படத்தை கண் இமைக்காமல் பார்க்க வைத்தது.

ராட்சசன் :

"ராட்சசன், இரும்புத்திரை, இமைக்கா நொடிகள்... 2018-ன் திக் திகில் சினிமாக்கள்!"

பள்ளி மாணவிகளை மட்டும் கொடூரமாகக் கொலை செய்யும் சீரியல் கில்லருக்கும், அவனைப்  பிடிக்க விரட்டும் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் 'திக் திக்' நிமிடங்கள்தான். 'ராட்சசன்'. சைக்கோ கில்லர் திரைப்படங்களில் பெரும்பாலும் இரத்தம் சொட்டச் சொட்ட முகம் சுழிக்கும்படியான காட்சிகள் இருக்கும். ஆனால், அப்படியான காட்சிகளை வைக்காமல் இசை வழியே கொடூரங்களின் வீரியத்தை நமக்குள் ஏற்றி நிஜமாகவே பயமுறுத்தி அனுப்பியது, 'ராட்சசன்'.

துப்பாக்கி முனை :

"ராட்சசன், இரும்புத்திரை, இமைக்கா நொடிகள்... 2018-ன் திக் திகில் சினிமாக்கள்!"

யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்காகக் குறிவைக்கப்பட்ட ஒரு அப்பாவியைக் காப்பாற்ற போராடும் போலீஸ் அதிகாரியின் கதை, 'துப்பாக்கி முனை'. விறுவிறுப்பான திரைக்கதை, அசரடிக்கும் திருப்பங்கள் எனப் பல சிறப்பம்சங்களோடு படமும் ஸ்டைலிஷாக இருந்தது. கொலைக்கு கொலை சரியல்ல என்பதை ஒரு போலீஸ் அதிகாரிக்கு உணர்த்தியது, 'துப்பாக்கி முனை'.

2018-ல் வெளியான பெரும்பாலான த்ரில்லர் திரைப்படங்கள் யோசிக்க அவகாசம் கொடுக்காமல் திகில் தந்ததோடு, சமூகத்திற்குத் தேவையான கருத்துகளையும் பதிவு செய்து அசத்தியிருந்தது. இந்தப் படங்கள் மட்டுமல்ல, இந்த ஆண்டு வெளியாகி, த்ரில் அனுபவங்களைக் கொடுத்த படங்கள் பற்றி கமென்ட் பாக்ஸில் பகிர்ந்துகொள்ளலாமே!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு