தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

சென்னை முழுக்கச் சுத்திவருவோம்! - யஷிகா - ஒஷீன்

சென்னை முழுக்கச் சுத்திவருவோம்! - யஷிகா - ஒஷீன்
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை முழுக்கச் சுத்திவருவோம்! - யஷிகா - ஒஷீன்

சிஸ்டர்ஸ்

சென்னை முழுக்கச் சுத்திவருவோம்! - யஷிகா - ஒஷீன்

``அந்த தியேட்டருக்குள்ளே போனவங்க எல்லாரும், படம் ஆரம்பிச்சதுலேருந்து முடியுற வரைக்கும் தும்மிக்கிட்டே இருந்தாங்களாம். ஏன் சொல்லு?''

``தெரியலையா...''

``ஏன்னா, அது மசாலா படமாம்!’’

யஷிகா ஆனந்த் கொளுத்திப் போட, அவர் தங்கை ஒஷீன் ஆனந்த்தையும் தொற்றிக்கொள்கிறது மொக்கை ஜோக் ஃபீவர்.

``105-க்கும் 107-க்கும் இடையில என்ன இருக்கு சொல்லு?

`` `106'தானே...’’

``அதான் இல்லை. ரெண்டுக்கு நடுவிலும் ஜீரோதானே இருக்கு!’’

அக்கா, தங்கையின் அட்ராசிட்டியை நிறுத்த, இருவரையும் சென்டிமென்ட் சீனுக்குள் இழுத்தோம். அக்காவைப் பற்றி தங்கையும், தங்கையைப் பற்றி அக்காவும் பாசம் பகிர வேண்டும் என்பதே டாஸ்க்.

``நானும் என் தங்கச்சியும் நேரெதிர் கேரக்டர்ஸ். வீட்டுல அவதான் எல்லா வேலையும் செய்வா. எனக்கும் அவளுக்கும் ரெண்டு வயசு வித்தியாசம். எனக்காக  எப்பவும் எல்லா விஷயங்களுக்கும் சப்போர்ட் பண்றவ. அம்மா அப்பாகிட்ட நல்ல பெயர் வாங்கிறவ. நான் புல்லட் ஓட்டுவேன். அவ பல்சர் ஓட்டுவா. கராத்தே க்ளாஸ், ஸ்விம்மிங் க்ளாஸ்னு எல்லாத்துக்கும் ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம். லாங்டிரைவ் போவோம். எங்களுக்கு ஒரு தம்பி இருக்கான். அவன் பெயர் ரஜனீஷ் ஆனந்த். என்னைவிட அஞ்சு வயசு சின்னவன். இப்போ என்னைவிட உயரமாகிட்டான். என்னுடைய சின்ன வயசு ஜெராக்ஸ் அவன். எங்க மூணு பேர்ல நானும் தங்கச்சியும் பயங்கர க்ளோஸ். ஆனா, எனக்கும் தம்பிக்கும் சைலன்ட் அண்டர்ஸ்டாண்டிங் எப்பவும் இருக்கும்’’ - தன்னைப் பற்றிப் பேச ஆரம்பித்து தம்பி பாசத்தில் நிறுத்துகிற யஷிகாவை, செல்லமாக முறைக்கிறார் ஒஷீன்.

சென்னை முழுக்கச் சுத்திவருவோம்! - யஷிகா - ஒஷீன்

``அன்னிக்கு என் தங்கச்சி பர்த்டே. ரெண்டு பேரும் ஃபுல் ஒயிட்ல பேய் மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு தலையை விரிச்சு விட்டுக்கிட்டோம். எங்க வீடு இருக்கிற கீழ்ப்பாக்கம் ஏரியா, ராத்திரியில பயங்கர அமைதியா இருக்கும். ரோடுல சுவருக்குப் பின்னாடி மறைஞ்சு உட்கார்ந்துகிட்டோம். யாராவது வர்றாங்கனு தெரிஞ்சா திடீர்னு அவங்க முன்னாடி குதிப்போம். பல பேர் ஆடிப்போயிருக்காங்க. தலைதெறிக்க பயந்து ரிவர்ஸ்ல ஓடியிருக்காங்க. நான் பைக் ஓட்டுவேன். தங்கச்சி என் முதுகுல ஒட்டின மாதிரி எதிர்ப்பக்கம் பார்த்துக்கிட்டு உட்கார்ந்து வருவா. இப்படியே சென்னை முழுக்கச் சுத்திவருவோம். அடுத்த வீட்டு காலிங் பெல்லை அடிச்சுட்டு ஓடிடுவோம். பலமுறை மாட்டிக்கிட்டிருக்கோம். ஆனா, பாவம்போல மூஞ்சியை வெச்சுக்கிட்டு எஸ்கேப் ஆகிடுவோம்.

ஸ்கூல்ல நாங்க அடிக்கிற லூட்டி வேற லெவல். ஸ்டூடன்ட்ஸோட ஷூக்களை மாத்தி மாத்தி வெச்சிடுவோம். லஞ்ச் பாக்ஸ்லேருந்து சாம்பார் சாதத்தை எடுத்து ஷூஸ்குள்ள நிரப்பி வெச்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி இருப்போம்.

அம்மாவும் அப்பாவும் நிறைய டிராவல் பண்ணுவாங்க. ஃபாரின் போயிட்டு வரும் போது ஷாம்பூ பாக்கெட்ஸ், டீ பாக்கெட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வருவாங்க. அம்மா அப்பா வீட்டுல இல்லாத டைம்ல பசிக்கும். காசு வெச்சுட்டுப் போக மாட்டாங்க. அதனால வீட்டுக்கு வெளியில கெட்டில் வெச்சு டீ போட்டு பிசினஸ் பண்ணுவோம். 40 ரூபாய் சேர்ந்தா சிப்ஸ் பாக்கெட் வாங்கிச் சாப்பிடுவோம். கோவா போனபோது நிறைய கிளிஞ்சல்கள் கொண்டு வந்தோம். ஒருவாட்டி அதைவெச்சு வீட்டுக்கு வெளியில கடை போட்டு வித்தோம். கஸ்டமரைப் பிடிச்சிட்டு வர்றது தங்கச்சி வேலை. விற்கிறது என் வேலை. ஆளுக்குப் பாதி ஷேர் எடுத்துப்போம்.

என்னைவிடவும் என் தங்கச்சி ரொம்ப மெச்சூர்டு. நல்லா படிப்பா.  அவ ஒரு க்ளாசிக்கல் டான்ஸர். அவளுடைய அரங்கேற்றம் நடந்த போது நான் இங்கே இல்லை. ஆனாலும், அவ்வளவு சந்தோஷப்பட்டேன். இப்போ 12-வது படிக்கிறா. எனக்கு அவதான் தலை வாரிவிடுவா. மேக்கப் பண்றது, நெயில் பாலிஷ் போடுறதுனு என்னை அவளுடைய குழந்தை மாதிரி பார்த்துப்பா. நான் பையன் கணக்கா, ரெளடி மாதிரி சுத்துவேன். என்னை அவதான் பொண்ணா மாத்துவா. எனக்காக  ஸ்பெஷலா அவ பண்ற பாவ் பாஜி செமயா இருக்கும். `பிக் பாஸ்’ வீட்டுல என் தங்கச்சி இடத்தைத்தான் ஐஸ்வர்யாவுக்குக் கொடுத்தேன்னு சொல்லலாம். ஐஸ்வர்யா என்னைவிட வயசுல பெரியவள். ஆனாலும், என்னை அவ தங்கச்சி மாதிரிப் பார்த்துக்கிட்டா. ஐஸ்வர்யா ஏன் எனக்கு அவ்வளவு ஸ்பெஷல்னு கேள்வி கேட்கிறவங்களுக்கெல்லாம் இதுதான் பதில்.’’

சென்னை முழுக்கச் சுத்திவருவோம்! - யஷிகா - ஒஷீன்

யஷிகா நிறுத்துமிடத்திலிருந்து தொடர்கிறார் ஒஷீன்.

``அவ எனக்கு வெறும் அக்கா மட்டுமில்லை, பெஸ்ட் அட்வைஸர். சின்ன வயசுலேருந்து இப்போ வரைக்கும் என்னை அவ்வளவு பத்திரமா பார்த்துப்பா. ஒருவாட்டி சைக்கிள் ஓட்டப் பழகிட்டிருந்தபோது கீழே விழுந்து அடிபட்டுருச்சு. அவ பதறிப்போயிட்டா. அவதான் எனக்கு ஃபர்ஸ்ட் எய்டு பண்ணிவிட்டா. எனக்குச் சரியாகிறவரைக்கும் பக்கத்துலயே இருந்து பார்த்துக்கிட்டா.

என் அம்மா, ரேடியோவுல பழைய பாட்டு கேட்பாங்க. அக்கா ஆடுவா. அவளைப் பார்த்துதான் எனக்கு டான்ஸ் ஆர்வமே வந்தது. அப்புறம்தான் க்ளாசிக்கல் டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன்.

எங்க ஃபேமிலியோட ஃபேவரைட் கலர் கறுப்பு. `பிக் பாஸ்’லேருந்து வெளியே வந்ததும் அக்கா எனக்கு பிளாக்ல ஒரு டிரஸ் வாங்கித் தந்தா. ட்ரீட்டும் செலிஃப்ரேஷன்ஸும் இன்னும் முடியலை. ஒரே ஒரு வருத்தம்... முன்னல்லாம் அக்காகூட ஃப்ரீயா வெளியில சுத்திக்கிட்டிருந்தேன். இப்போ வெளியில வந்தாலே செல்ஃபி, ஆட்டோகிராப்னு கூட்டம் கூடிடுது. அக்கா பெரியாளாகிட்டாங்கிறதுல சந்தோஷம்தான். அக்கா அவ ஆசைப்படியே சினிமாவுல பெரிய ஹீரோயினாகணும்... சென்னையில சொந்த வீடு வாங்கணும்கிற கனவு சீக்கிரமே நிஜமாகணும். அக்கா நிச்சயம் இதையெல்லாம் சாதிப்பாள்’’ - எமோஷன்ஸ் கூடுகிறது சூழலில்.

``சரி... சரி... ரொம்ப எமோஷனலாகாதே... ஒரு மொக்கை ஜோக் சொல்லவா?’’ - யஷிகா என்ட்ரி கொடுக்க நாம் எஸ்கேப்!

- ஆர்.வைதேகி,  படங்கள் : ப.சரவணகுமார்