Published:Updated:

“சைதாப்பேட்டையைக் கும்பகோணம் ஆக்கினேன்!

“சைதாப்பேட்டையைக் கும்பகோணம் ஆக்கினேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
“சைதாப்பேட்டையைக் கும்பகோணம் ஆக்கினேன்!

“சைதாப்பேட்டையைக் கும்பகோணம் ஆக்கினேன்!

‘இதெல்லாம் செட்டா? நம்பவே முடியலை!’ - இந்த வார்த்தை தான் கலை இயக்குநருக்கான அங்கீகாரம். அந்த வகையில், ‘வடசென்னை’ படத்தில் ஜெயில், ராயபுரம் பகுதி ஆகியவற்றை  80-களில் இருந்து இன்றைய தேதி வரை பல பரிணாமங்களில் கலை நயத்துடன் செட் அமைத்து அசத்தியிருந்தார், ‘வடசென்னை’ படத்தின் கலை இயக்குநர் ஜாக்சன். 

“சைதாப்பேட்டையைக் கும்பகோணம் ஆக்கினேன்!

“நான் ஓவியக் கல்லூரியில படிச்சுட்டு மல்டிமீடியாவுல வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். 2000-ல் மல்டிமீடியா கம்பெனி எல்லாம் மூடிட்டாங்க. அப்போ, ‘இவன்’ படத்துல அசிஸ்டென்டா இருந்த கிரிஷ் ஆச்சர்யா எனக்குப் பழக்கம். அப்போ, ‘நான் இந்தியன் - இங்கிலிஷ் படம் டைரக்ட் பண்ணப் போறேன். அதுல ஆர்ட் டைரக்‌ஷன் பண்றியா?’னு கேட்டார். எனக்கும் ஆர்ட் டைரக்‌ஷனுக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும், பண்ணேன்.  அந்தப் படத்தை முடிச்சுட்டு சென்னைக்கு வந்தப்போ, ரமேஷ்னு ஒரு நண்பர் பழக்கமானார். அவர் நண்பருக்காக, ‘அகரம்’னு ஒரு படத்துல வொர்க் பண்ணேன். ரெண்டு வருடம் ஷூட்டிங் நடந்தது. ஆனா, அந்தப் படம் ரிலீஸ் ஆகலை. இனி சினிமாவே வேண்டாம்னு முடிவு பண்ணி, மறுபடியும் ஒரு கம்பெனியில வேலைக்குப் போயிட்டேன். ஐந்து மாதம் கழிச்சு, கவிதாலயா நிறுவனத்துல இருந்து அழைப்பு வந்தது. ஆச்சரியத்தோட போனேன். நண்பர் ரமேஷ் மூலமா, கிடைச்ச வாய்ப்புதான் இதுவும். ‘நீதான்யா ஆர்ட் டைரக்டர்’னு கே.பி சார் சொன்ன வார்த்தைகள் இன்னைக்கு வரைக்கும் எனக்கு மறக்காது. பாலசந்தர் சாரோட கடைசிப் படமான ‘பொய்’தான், சினிமாவில் எனக்கு முதல் படம்.

“சைதாப்பேட்டையைக் கும்பகோணம் ஆக்கினேன்!

பாலசந்தர் சாருடன் வொர்க் பண்றப்போ, சமுத்திரக்கனி எனக்குப் பழக்கம். அவர் அமீரின் ‘பருத்திவீரன்’ படத்துக்கு செட் போட என்னைப் போகச் சொன்னார்.  சமுத்திரக்கனி சொன்னதும் ரெண்டே ரெண்டு டிரெஸ்ஸை மட்டும் எடுத்துட்டு மதுரைக்குப் போயிட்டேன். ஆறு மாசம் அப்படியே போச்சு. கையில காசும் இல்லை. ‘உனக்குக் காசு வேணும்னா நான் தர்றேன். அமீர் அண்ணன் படத்தை விட்றாதே’னு சொன்னார், கனி. டெட்லைன் வெச்சு வொர்க் பண்ணிக்கிட்டிருந்த எனக்கு, அது புது அனுபவமா இருந்தது. ரெண்டு வருடம் கடந்து படம் ரிலீஸாகி, பெரிய வெற்றி பெற்றது. அதுக்குப் பிறகு எனக்குக் கிடைச்ச அங்கீகாரம் வேற லெவல்ல இருந்தது. அப்போதான், இந்த வேலைமேல எனக்குக் காதல் வந்தது. அமீர் சார்கூட ‘பருத்திவீரன்’ல தொடங்கி, ‘ஆதிபகவன்’ வரை நான் வொர்க் பண்ணேன்.”

“இயக்குநர் வெற்றிமாறனுடான அறிமுகம் எப்படி?”

“ஆனந்த் கே.மூர்த்தி என்ற என் நண்பர் மூலமா வெற்றியைத் தெரியும். ‘ஆடுகளம்’ சமயத்துல பழக்கமானோம். ‘வடசென்னை’ ஜெயில் செட் 40 நாள்ல போட்டோம். ஒருநாள்கூட வேலை எல்லாம் எப்படி நடக்குதுனு வந்து பார்த்ததில்லை வெற்றி. எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. ஒருநாள் ராத்திரி எனக்கு போன் பண்ணி, ‘எடிட்டிங்ல இருக்கேன். எந்த இடத்துல கட் பண்ணாலும், 80, 90-களில் பயன்படுத்திய பொருள்கள் தெரியுது. அருமையா வொர்க் பண்ணிக் கொடுத்திருக்கீங்க.’னு பாராட்டியதோடு, ‘செட் மேக்கிங் வீடியோவை எனக்கு அனுப்பி வைங்க, நானே இதெல்லாம் செட்டுன்னு சொல்லி ரிலீஸ் பண்றேன்’னு சொன்னார். அந்த வீடியோவுக்கு செம ரெஸ்பான்ஸ். வெற்றி மாறனுக்கு நன்றி.

“சைதாப்பேட்டையைக் கும்பகோணம் ஆக்கினேன்!

சென்ட்ரல் ஜெயிலோட அமைப்பு பின்னி மில்ல இருந்தது. மரங்கள் இல்லாமல் காலி இடத்துல எவ்வளவு தத்ரூபமா செட் போட்டாலும் அது பிளாஸ்டிக்னு தெரிஞ்சுடும். அதனால, மரம் செட்டுக்குள்ள வந்துட்டா, அது நமக்கான பரிசுனு நினைப்பேன். அதனால, மரங்கள் இருக்கிற இடத்துல செட் போட்டோம். ஏற்கெனவே, ஜெயில்ல இருந்தவங்களை ரெஃபரென்ஸுக்குக் கூட்டிக்கிட்டு வந்தார், வெற்றி. அவர் செட்டைப் பார்த்துட்டு, ‘இதுக்கு முன்னாடி ஜெயில்ல இருந்திருந்தாதான், இப்படி செட் போடமுடியும்’னு பாராட்டினார். நான் சிறைவாசம் அனுபவச்சவன் கிடையாதுனு சொன்னதை, அவர் நம்பவே இல்லை”

“மக்களுக்கு இதெல்லாம் செட்னு தெரியாம போறப்போ, உங்க மனநிலை என்னவா இருக்கும்?”

“எங்களுக்கு சந்தோஷமே அதான். அதேசமயம், கொஞ்சம் அங்கீகாரம் கிடைச்சா நல்லா இருக்குமேன்னும் தோணும். பாடல் காட்சிகள் தவிர, மத்த காட்சிகள்ல எது செட்னு மக்களுக்குத் தெரிஞ்சுட்டா நாங்க நல்லா வேலை பார்க்கலைனு அர்த்தம். இதுவரை 32 படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கேன். எந்தப் படத்துக்கும் எனக்கு நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்ததில்லை. ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்துல டியூசன் சென்டர் சீனுக்கு கும்பகோணம் போக முடியலை. சைதாப்பேட்டையில் செட் போட்டு எடுத்தோம். கும்பகோணம் கோயில் மாதிரி காரணீஸ்வரர் கோயில் கோபுரத்தைக் காட்டி, கும்பகோணம் விளம்பரங்களை வரைஞ்சு மாட்டிடோம். அது செட்டுனு யாருக்கும் தெரியாது. இப்போ அது, செட்னு தெரியவரும்போது, ‘அட!’னு ஆச்சரியமா கேட்குறாங்கல்ல... அதான், எங்களுக்கான விருது.” 

“சைதாப்பேட்டையைக் கும்பகோணம் ஆக்கினேன்!

“ ‘வடசென்னை’ படத்துல சின்னச் சின்ன விஷயங்களைக்கூட டீடெயிலா வொர்க் பண்ணியிருக்கீங்க. அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்...?” 

“வெற்றி, டீடெயிலிங் கிங். இந்தக் கதைக்காக பத்து வருடம் உழைச்சிருக்கார். பழைய விளம்பரங்களோட எழுத்துகளைக்கூட அவர் விட்டு வைக்கலை. என் உதவியாளர் ஒருத்தர்தான், ‘எங்க அப்பா ஆர்டிஸ்ட்தான். அவர்கிட்ட ரெஃபரென்ஸ் இருக்கும்’னு சொல்லி, அவங்க சொந்த ஊருக்குப் போய் எடுத்துட்டு வந்தார். 1985-ல் பிறந்திருந்தீங்கன்னா, அப்போ நீங்க என்னெல்லாம் பார்த்திங்கனு எழுதிக் கொண்டுவாங்க. இல்லைனா, உங்க அப்பா, அம்மாகிட்ட என்னென்ன பொருள்களை அப்போ பயன்படுத்துனீங்கனு கேட்டுட்டு வாங்கனு உதவியாளர்கள்கிட்ட சொல்லிட்டேன். பிறகு, நிறைய தமிழ் சினிமாக்களைப் பார்த்தோம். ‘விக்ரம்’ படத்துல ஒரு காட்சியில வடசென்னையைக் காட்டியிருப்பாங்க. பிரிட்டானியா பிஸ்கெட்டின் பழைய லோகோ, ஃபில்டர் இல்லாத ‘புளு பேர்ட்’ சிகரெட், தீப்பெட்டி.. எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து உருவாக்கினோம். கண்ணாடி பாட்டில் ஹார்லிக்ஸையும், டின் டப்பாவையும் தேடி அலைஞ்சோம். வேல்ராஜ் சாரோட கேமரா எப்போ எங்கே படம் பிடிக்கும்னு சொல்ல முடியாது... அதனால, கண்ல படுற இடங்களிலெல்லாம் லாட்டரி சீட்டு, ரேடியோ, சிகரெட் பாக்கெட்னு அந்தக் காலகட்டத்துல இருந்து பொருள்களைப் போட்டு வெச்சுட்டோம்.”

“விக்கிபீடியா பக்கத்துல கலை இயக்குநர்களுக்கான அப்டேட்ஸ் எதுவும் இல்லையே... ஏன் இந்த நிலை?”  

“அடிப்படை தகவல்களுக்கு விக்கிபீடியாவைத்தான் தேடுறோம். அதுல, நம்மளைப் பத்தி இல்லைனு நினைக்கும்போது கஷ்டமாதான் இருக்கு. ‘விசாரணை’ படத்தை குண்டூர்ல போய் எடுத்திருக்கிறதா, விக்கிபீடியா சொல்லுது. ‘ஏன் அப்படிப் போட்டிருக்கீங்க?’னு மெயில் அனுப்பிக் கேட்டா,  ‘இல்லைனு என்ன ஆதாரம் இருக்கு. மீடியாவுல சொல்லி யிருக்கீங்களா. படத்துல வொர்க் பண்ண ஆள்கள் யாராவது எங்கேயாவது குறிப்பிட்டுப் பேசியிருக்காங்களா’னு பல கேள்விகள் கேட்குறாங்க. ஒரு படத்தின் கேப்டன் என்ற முறையில், இயக்குநர்கள்தான் அதை சரியா செய்யணும். ‘வடசென்னை’ படத்துக்கு வெற்றி சார் அதை சரியா பண்ணிட்டார். இனி, எல்லா இயக்குநர்களும் இதை ஃபாலோ பண்ணா, நல்லா இருக்கும்.”

உ.சுதர்சன் காந்தி